தேவையான பொருட்கள்
காராபூந்தி - 1 கோப்பை
வெள்ளரிக்காய் - 1
மூக்கு மாங்காய் - 1 கீற்று
பெரிய வெங்காயம் - 1
தக்காளி -1
கேரட் - 1/2 (பாதியளவு)
ஆப்பிள் - 1/4 பழம்
வறுத்த நிலக்கடலை - 1/4 கோப்பை
பச்சை மிளகாய் - 1 அ 2
கொத்தமல்லி - சிறிது
உப்பு - ருசிக்கு
வெள்ளரி,மாங்காய்,வெங்காயம்,தக்காளி,ஆப்பிள்,கொத்தமல்லி, பச்சை மிளகாய் இவை அனைத்தையும் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.கேரட்டை துருவிக் கொள்ளவும். அனைத்தையும் உப்பு சேர்த்து கையால் பிசறவும்.
காராபூந்தி, நிலக்கடலை சேர்த்து பிசறவும்
உப்பு,உரைப்பு,புளிப்பான காராபூந்தி சாலட் தயார். எல்லோருக்கும் ஆரோக்கியமானது இது...
குறிப்பு
கையால் பிசறுவதால் ஒரு தனி ருசி வரும்.....ஆகையால் அப்படி போட்டு இருக்கிறேன். விரும்பாதவர்கள் கரண்டியால் கலக்கிக் கொள்ளவும்.
சுகருக்கு இந்த சாலெட் நல்லது போலிருக்கே :)
ReplyDeleteவீட்டில் அம்மா மழை நேரத்தில் செய்து தருவதுண்டு... வெள்ளரிக்காய், ஆப்பிள் போடுவதில்லை... கிராமத்தில் அதெல்லாம் அப்போது வாங்குவதே அரிதுதானே....
ReplyDeleteகையால் பிசைவது சுவை கூடுதல்.... கையால் சாப்பிடுவது இன்னும் சுவையை அதிகரிக்கும்... ஸ்பூனில் அள்ளிச் சாப்பிட்டால் சாப்பிட்டது போலவே இருக்காது...
புதிய முயற்சி. செய்துடுவோம். தக்காளி போட்டால் சொதசொத என்று ஆகிடாதோ...?
ReplyDeleteஆகாது ஸ்ரீராம். முதலில் பூந்தி தவிர எல்லாம் கலந்த பிறகு பூந்தியை இறுதியில் மேலே தூவிச் சாப்பிடலாம்.
Deleteஇதே போன்று இந்தக் காய் கலவையுடன், ட்ரை நட்ஸ் பாதாம்,வால்நட், அப்புறம் உலர்ந்த திராட்சை, அரிசிப் பொரி வெள்ளை அல்லது, மசாலாப் பொரி என்று மஞ்சளில் கிடைக்கிறதே அதையும் கலக்காமல் மேலே தூவி சாப்பிட கிரிஸ்பியாக இருக்கும். எங்கள் வீட்டில் கல்யாண வீட்டில் மிக்சர் பாக்கெட் பூந்தி பாக்கெட், கொடுத்தால் அன்று இதுதான் ராத்திரி சாப்பாடு!! இதிலேயே டேட்ஸ் கலந்தும் சாப்பிடலாம்...மாதுளை கலந்தும் நன்றாக இருக்கும்..
சாட் மசாலா தூவி, ப்ளாக் சால்ட் போட்டும் சாப்பிடலாம். இதையே பேல் பூரிக்குச் செய்வது போல் எல்லா சட்னியும் கலந்து சாப்பிடலாம். இப்படிமனதிற்குத் தோன்றிய படி கையில் என்ன இருக்கிறதோ அதை வைத்து பெர்ம்யூட்டேஷன் காம்பினேஷனில் பல வகை கிடைக்கும்...
சரிதானே உமையாள்!! நீங்கள் செய்யாததா...
கீதா
பார்க்கவே அழகு!
ReplyDeleteசெய்து பார்க்கிறேன்.
நன்றி.
நல்ல குறிப்பு. பூந்தி மட்டும் தில்லியில் தனியாகவே கிடைக்கும் - பூந்தி ராய்த்தா செய்வதற்கு!
ReplyDelete//கையால் பிசறுவதால் ஒரு தனி ருசி வரும்.....ஆகையால் அப்படி போட்டு இருக்கிறேன். விரும்பாதவர்கள் கரண்டியால் கலக்கிக் கொள்ளவும்.//
ReplyDeleteஎனக்குத் தங்கள் கையால் பிசறிய அந்த தனி ருசியான சாலட் தான் வேண்டும். எங்கள் வீட்டில் இதெல்லாம் ஒரு நாளும் செய்யவே மாட்டார்கள். அதனால் உடனே பார்ஸலில் அனுப்பி வைக்கவும். :)
மாலைக்கேற்ற நல்ல சிற்றுண்டி
ReplyDeleteபடங்களுடன் பகிர்வு அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
சூப்பர்! நன்றி!
ReplyDeleteவணக்கம் சகோ !
ReplyDeleteகாரா பூந்தி உண்ணலாம்
....கச்சி தமாய் வாழலாம்
சார தாவும் உமையாளும்
....சமைக்கும் இனிய உணவினை
ஆரா அமுதாய் அள்ளியே
....அனுதினமும் உண்டிடத்
தீராக் கவலை போய்விடும்
....திண்ணம் நெஞ்சில் வளர்ந்திடும் !
வாயூறுது சகோ வாழ்த்துகள் !