நிறைய பேசும் போது
உடல் களைத்து விடுகிறது....
பேசாத போதோ...?
மனம் களைத்து விடுகிறது...
அளவாய் பேசி அளவலாவ...
தருணங்கள் தொடர்ந்து கிடைக்காத போது
இவ்வாறு தானே நிகழும்...
சுவாரஸ்யமான பேச்சு...
பேசியதோ நினைவில் இல்லை
என்ன பேசுகிறோம்
என்பதோ மனதில் இல்லை
மனம் என்னமோ லேசாகப் போனது
முகம் என்னவோ மலர்ந்து விரிந்தது
காதுகள் செய்யும் வேலையை விட
வாய் வேலை செய்யவே பிரியப்படுகிறது
உண்ணவும் பேசவும் ...
பேச்சின் சுவை ஒரு போதையும் கூட
அளவாய் அவ்வப்போது தேவைப்படுகிறது அல்லவா...?
படம் கூகுள் நன்றி
நான் அளவாய்ப் பேசும் கட்சி.
ReplyDeleteஉங்கள் ’பேச்சின் சுவை’ யில் ஏதோ ஒரு கிக்குடன் கூடிய சுவை உள்ளது. பாராட்டுகள்.
ReplyDeleteபேச்சு இனிமையானதாக, உண்மையான வார்த்தைகளாலும், அன்பாலும் நிரம்பி, எப்போது எப்படிப் பேசவேண்டும் என்று அளவாகப் பேசினால் மகிழ்வே. சில இடங்களில் மௌனமே பலவற்றைப் பேசிவிடும். நல்லதொரு ஆயுதமாகவும் பயன்படும். நல்ல வரிகள்.
ReplyDeleteவாயின் உள்ளே எதையாவது தள்ளிவதால் வரும் போதையை விட ...வார்த்தைகளை வெளியே தள்ளுவதால் வரும் போதை ரம்மியமானதுதான் :)
ReplyDeleteபேச்சின் சுவை ஒரு போதைதான்.
ReplyDeleteபேச்சின் அருமை சொன்ன கவிதை.
ReplyDeleteத ம 4
அருமையான பா வரிகள்
ReplyDeleteநல்ல சிந்தனையும் கூட
பேச்சு சுவை தான்..
ReplyDeleteஆனால் பேசுவோர் பேசினால் - பேசாமல் கேட்கத் தோன்றும்..
இனிய பதிவு.. வாழ்க நலம்..
அதுவும் பேச்சில் சுவை பெண்களுக்குச் சற்றுக் கூடுதலே ...!
ReplyDelete//நிறைய பேசும் போது
ReplyDeleteஉடல் களைத்து விடுகிறது....
பேசாத போதோ...?
மனம் களைத்து விடுகிறது...// (நம்முடன் பேசி பேசி)
அருமை, உண்மை.
அருமை அருமை//நிறைய பேசும் போது
ReplyDeleteஉடல் களைத்து விடுகிறது....
பேசாத போதோ...?
மனம் களைத்து விடுகிறது...
இவ்வரிகளும்
முடித்த விதமும்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
பேச்சைக்குறித்த கவி நன்று சகோ
ReplyDeleteவணக்கம் சகோ !
ReplyDeleteபேச்சு பேச்சா இருக்கணும் இல்லையா
ம்ம் பேசிக்கொள்வோம் நல்லதையே என்றும்
நன்றி
பேச்சின் சுவை! :) நான் பல சமயங்களில் பேசுவதே இல்லை!
ReplyDeleteபேச்சின் சுவை அளவாய் பேசுவதில் இருக்கிறது...
ReplyDeleteஒரே விஷயத்தை பலமுறை மனைவி சொன்னாலும் அலுக்காத காரணம் என்ன?. விஜயன்
ReplyDelete