தேவையான பொருட்கள்
வாழைப்பூ சின்னது - 1
து.பருப்பு - 4 மே.க
க.பருப்பு - 3 மே.க
மிளகாய் - 4
ப.மிளகாய் - 2
சோ ம்பு - 1/2 தே.க
சீரகம் - 1/2 தே.க
கருவேப்பிலை - சிறிது
உப்பு - ருசிக்கு
எண்ணெய் - பொரிக்க தேவையானது
து.பருப்பு + க.பருப்பை 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
தண்ணீரை வடிகட்டி விட்டு, மிளகாய் + சோம்பு + சீரகம் + ப.மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் கருவேப்பிலையை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.உப்பு போடவும்
வாழைப்புவின் நரம்பை நீக்கி விட்டு மிக்ஸியில் இட்டு பொடியாக ஆக்கிக் கொண்டு பருப்புடன் சேர்த்து கலந்து விட்டு வடைகளாக தட்டி எண்ணையில் போட்டு எடுக்கவும்.
கோலாவாக உருட்டிப் போட்டும் எடுக்கலாம்
வாழைப்பூ வடை பிரமாதம். நல்ல மொறுமொறுப்பாக செம ஜோர் போங்க... !
வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.
வாழைப்பூ வடைகளை என் பசி வேளையில் படத்தில் மட்டும் காட்டி வெறுப்பேற்றி உள்ளீர்கள்.
ReplyDeleteஇருப்பினும் பார்த்தாலே பசி தீரும் என்பார்கள்.
அதனால் பார்த்து மட்டுமே என் பசி தீர்ந்துவிட்டதாக நினைத்து என் மனதை மிகவும் கஷ்டப்பட்டுதான் சமாதானம் செய்துகொண்டேன்.
பதிவும், படங்களும், செய்முறைகளும் சூப்பரோ சூப்பர்.
//வாழைப்புவின் நரம்பை நீக்கி விட்டு //
ReplyDeleteஅதனை நாங்கள் நரம்பு என்று சொல்லாமல் ‘கள்ளன்’ என்றுதான் சொல்லுவோம்.
அடிக்கடி 2-3 முரட்டு வாழைப்பூவினை வாங்கிவந்து, கள்ளனை நீக்கிவிட்டுப் பொடிப்பொடியாக நறுக்கிக்கொடுப்பது, இங்கு என்னுடைய வேலையாக உள்ளது.
வாழைப்பூ கறி, வாழைப்பூ கூட்டு முதலியன மட்டும் செய்துள்ளோம். இனி அடுத்தமுறை தாங்கள் சொல்லியுள்ளபடி மொறுமொறு என்று வடை செய்து சாப்பிடணும் என நினைத்து உள்ளேன்.
இதற்கு என் மேலிடம் (அதாவது என் மனைவி) என்ன சொல்லப்போகிறாளோ? :)
சுவை. சோம்பு சேர்க்காமல் செய்திருக்கிறோம்.
ReplyDeleteருசித்தேன். நன்றி.
ReplyDeleteவடையை பார்க்கும்போதே சாப்பிடும் ஆர்வத்தை அடக்க முடியவில்லை.
ReplyDeleteத ம 3
சோம்பு சேர்க்காமல் செய்வோம்.
ReplyDeleteபார்க்கவே அழகு வாழைப்பூ வடை, சுவையும் நன்றாக இருக்கும்.
நரம்பு இல்லாத நாக்குக்கு ,நரம்பு நீக்கிய வாழைப் பூ வடை செம டேஸ்ட் :)
ReplyDeleteஇதேபோன்று தான் செய்வதுண்டு. உங்கள் குறிப்புகளும், படமும் அருமை
ReplyDeleteகீதா
பார்க்கவே மிகவும் அழகாய் உள்ளது! நானும் இதே போலத்தான் செய்வேன். ஆனால் வாழைப்பூவை அரைக்காமல் பொடியாய் நறுக்கி சேர்ப்பேன்.
ReplyDeleteநலமாக வாழ நல்ல உணவு
ReplyDeleteசிறந்த வழிகாட்டல்
ஆனால் வாழைப்பூவைத் தயார் செய்வது சலிப்பு ஏற்படுத்தும் வேலை.செய்து சாப்பிட்டிருக்கிறோம் என் தளம் பூவையின் எண்ணங்களில் வெண்டைக்காய் இஜுரு . செய்து பாருங்களேன்
ReplyDeleteஎங்கள் வீட்டில் அடிக்கடி செய்வார்கள்
ReplyDeleteபுகைப்படமே அழகாக இருக்கின்றது
ReplyDeleteசுவையான வாழைப்பூ வடை பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteபார்க்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது.... நன்றி.
ReplyDeleteவணக்கம் சகோ !
ReplyDeleteநான் இதுவரை சாப்பிடவில்லை இந்த வாழைப்பூ வடை அதனால் சிரமம் பாராமல் ஒரு பார்சல் அனுப்புங்கோ புண்ணியமா போகும் !
தம +1
உமையாள்,
ReplyDeleteஒன்று வடை கிண்ணத்தை இங்கே அனுப்பிவிடுங்க, இல்லாட்டி அட்லீஸ்ட் வாழைப் பூவையாவது அனுப்புங்க. படங்களைப் பார்த்துட்டு சும்மா போக முடியல.
வாழைப் பூ வடை மிகவும் பிடித்தமானது..
ReplyDeleteநல்ல பக்குவம்.. பயனுள்ள குறிப்பு.. வாழ்க நலம்..