Saturday, 1 October 2016

குடமிளகாய் சட்னி / Capsicum Chutney







தேவையான பொருட்கள்

சிவப்பு குடமிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 16
வரமிளகாய் - 4
தக்காளி - 2
புளி  - சிறிய நெல்லியளவு
உப்பு - ருசிக்கு
எண்ணெய் - 1 தே.க

தாளிக்க வேண்டியவை

நல்லெண்ணெய்  எண்ணெய் - 5 மே.க
கடுகு - 1/2 தே.க
உ.பருப்பு - 1/2 தே.க







மைக்ரோவேவ் பெளலில் 1 தே.க எண்ணெய் விட்டு மிளகாயை கிளறி விட்டு 1 நிமிடம் வறுபட வைக்கவும்


 



 பின் சின்ன வெங்காயத்தை சேர்த்து கிளறி 1 1/2 நிமிடங்கள் வைக்கவும்

நறுக்கிய  சிவப்பு குடைளகாய் + தக்காளி + புளி சேர்த்து கிளறி விட்டு 3  நிமிடங்கள் வைக்கவும்.

ஆறிய  பிறகு உப்பு சேர்த்து அரைக்கவும். தாளித்து கலக்கவும்.



அருமையான சிவப்பு வண்ணத்தில் 
கண்களைக் கவர்ந்து ஈர்க்கும்...! 
நாவோ சுவைக்க ஏங்கும்....
சுவைத்து விட்டாலோ...
திரும்ப திரும்ப.....
கேட்கும் சட்னியை 
தினந் தினமும் ...!!!


எல்லாவற்றிற்கும் ஏற்றது....


குறிப்பு

மைக்ரோவேவில் இப்படி செய்யலாம். எப்போதும் போல் இருப்பு சட்டியில் வதக்கியும் செய்து கொள்ளலாம்.

எந்த நிற குடமிளகாயிலும் செய்யலாம் ருசி அப்படியே கிடைக்கும் ஆனால் வண்ணம் மட்டும் மாறு பட்டு இருக்கும். என்ன உங்களுக்கு தெரியாததையா நான் சொல்லுறேன்.....

எல்லாம் நம்ம இஷ்டம் தானே ஹிஹிஹி......என்ன நான் சொல்லுறது....




17 comments:

  1. ஸூப்பர் ஐயிட்டம் நன்று

    ReplyDelete
  2. தக்காளி வெங்காய சட்னியில் குடைமிளகாயும் போடுகிறோம் என்றும் சொல்லலாம்! கலர்ஃபுல்லாக அழகாக இருக்கிறது.

    ReplyDelete
  3. நல்லா இருக்கும் போல! செய்துடுவோம்.

    ReplyDelete
  4. அருமையான சிவப்பு வண்ணத்தில்
    கண்களைக் கவர்ந்து ஈர்க்கும்...!
    நாவோ சுவைக்க ஏங்கும்....
    சுவைத்து விட்டாலோ...
    திரும்ப திரும்ப.....
    கேட்கும் சட்னியை
    தினந் தினமும் ...!!!//

    அதனால் மட்டுமே நான் இதனை இதுவரை சுவைத்துப் பார்த்தது இல்லை.

    தினம் தினம் யாரால் இதற்காக ஏங்க முடியும்?

    எனினும் காரசாரமான இந்தப் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. படத்தைப் பார்த்தால் நா ஊறுது ,சாப்பிட்டால் கண்ணில் தண்ணீர் வராதுதானே :)

    ReplyDelete
  6. செய்முறையும் விளக்கப்படங்களும் அருமை சகோ. என்னுடைய பாவ் பாஜியை ருசிக்க எனது வலைப்பூவுக்கு வாருங்கள்.

    ReplyDelete
  7. தக்காளிச் சட்டினியில் குடைமிளகாய்...
    அருமை அக்கா...

    ReplyDelete
  8. நல்ல குறிப்பு உமையாள்...மிக்க நன்றி தக்காளி இல்லாமல் செய்து பாருங்கள் அது தனிச் சுவை. சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் போட்டு....

    கீதா

    ReplyDelete
  9. அருமையான தகவல்
    சிறந்த வழிகாட்டல்

    ReplyDelete
  10. சுவையான பதார்த்தம்.
    த ம 4

    ReplyDelete
  11. அடடா பார்த்தாலே நிறம் சாப்பிட தூண்டுது ...
    http://snowwhitesona.blogspot.in/

    ReplyDelete
  12. தக்காளியும் குடமிளகாயும் சேர்ந்து கலகலப்பாகிவிட்டது!.. அருமை..

    ReplyDelete