Tuesday, 22 October 2019

Karpooravalli Dosa / கற்பூரவள்ளி தோசை

தோசை  இது பிடிக்காவதவர்களே இல்லை என சொல்லலாம்.
வெரைட்டி...வெரைட்டியா...தோசை வந்திடுச்சு.
இப்போ மழைக்காலம்....இல்லையா....அதற்கு ஏற்ற தோசை இது.
தோசைக்கு தோசையும் ஆச்சு....மருந்துமாச்சு.

கொஞ்சம் சளி பிடித்து மூச்சு விட கஷ்டமாக இருந்தது. இரவு டிபன் செய்ய மாவு இல்லை. சாதம் சாப்பிட விருப்பமும் இல்லை. சரின்னு நம் வீட்டு பால்கனியில் சிரித்துக் கொண்டு தலையாட்டி என்னை அழைத்த கற்பூரவள்ளியின் மகத்துவம் நமக்குத் தெரியுமே...ஆகையால் தோசை செய்ய எண்ணம் கொண்டேன்.



ஆஹா. இளம்பச்சை வண்ணத்தில் தோசை  கண்களையும் கவருதே...



தேவையானவை

பச்சரிசி - 1கப்
இட்லி அரிசி - 1 கப்
பூண்டு - 1 அ 2
இஞ்சி - சிறிதளவு
மிளகு - 1டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கற்பூரவள்ளி இலைகள் - 12 - 15
உப்பு - ருசிக்கு
எண்ணெய் - தே.அ



அரிசியை களைந்து விட்டு 2 மணி நேரம் ஊறவிடவும்.






பின் அனைத்தையும் மிக்ஸியில் இட்டு சற்று கொர கொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். சற்று நீர்க்க மாவு இருக்கட்டும். 1/2 மணி நேரம் கழித்து தோசை செய்யலாம். தேவைப்பட்டால்
உடனேயும் தோசையாக வார்க்கலாம்.









தோசைக்கல்லில் ஓரங்களில் இருந்து மாவை ஊற்றி வந்து வார்க்கவும். எப்போதும் போல் தோசையாக தேய்க்க வராது. மாவு திரண்டு விடும். கனமாக ஆகிவிடும். சுற்றி எண்ணெய் விடவும்.



திருப்பிப் போட்டு எண்னெய் விட்டு வேக விடவும். இந்த தோசைக்கு அதிகம் எண்ணெய் தேவைப்படாது.




தோசையோட வாசம் அருமையாக இழுக்கிறது. உங்களுக்கும் தானே...

தேங்காய் சட்னியுடன் சாப்பிட படு ஜோர். நீங்களும் முயற்சி செய்து பார்த்து விட்டு எப்படி இருந்ததுன்னு  சொல்லுக...


  கற்பூரவள்ளி ரசம்  இதை சொடிக்கினால் ரசத்தை பருகலாம்



9 comments:

  1. வீட்டில் கற்பூரவள்ளி செடி உண்டு அதன் இலைகளை இப்படியும் உபயோகிக்கலாம் எனத்தெரியாது போச்சே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா...நலமா...
      இனிமேல் இவ்வாறு செய்து விட்டால் போச்சு...
      நன்றி

      Delete
  2. கற்பூரவள்ளி இலை ஏராளமாக இருக்கிறது. ஒருமுறை செய்து பார்க்கலாம்.  பாஸ் மனசு வைக்கணும்!

    ReplyDelete
    Replies
    1. பாஸ் மனசு வையுங்க..அப்படின்னு நான் கேட்டுக் கொண்டேன் என சொல்லவும் சகோ.

      நன்றி

      Delete
  3. வணக்கம் சகோதரி

    அருமையான தோசை..மருத்துவ குணம் நிறைந்த தோசையை அறிமுகப் படுத்தியமைக்கு உங்களுக்கு மிக்க நன்றிகள். படங்கள் செய்முறை விளக்கங்கள் அழகாக இருக்கின்றன.

    / தோசையோட வாசம் அருமையாக இழுக்கிறது. உங்களுக்கும் தானே../

    ஆமாம் சகோதரி.. வாசம் எங்களையும் வந்தடைந்து விட்டது. இதுபோல் ஒருமுறை செய்து பார்க்கிறேன். சூப்பராக உள்ளது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா...வாசம் இழுத்து வந்து விட்டதா...

      இந்த தோசை சாப்பிட்ட அன்று சிரமம் இல்லாமல் தூங்கினேன். மூச்சடைப்பு தேவை ஆனது. ஆகையால் பகிர்ந்து கொண்டேன் சகோ. நன்றி

      Delete
  4. அசத்தல்... நன்றி...

    வீட்டில் பல பயனுள்ள செடிகள் உண்டு...

    கற்பூரவள்ளி பற்றிய விளக்கம் தேவை... மீண்டும் நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ.எப்படி இருக்கீங்க..? ரொம்ப நாள் ஆச்சு, நான் வலைப்பக்கம் வந்து. எல்லோருடைய வலைத்தளத்திற்கும் இனி அவ்வப்போது வருவேன்.

      இந்த கற்பூரவள்ளியை - ஓமவள்ளி என்றும் சொல்வார்கள். இதன் இலை பஞ்சு போலிருக்கும். வாசனை நன்கு வரும்.
      இந்தச் செடியின் தண்டை உடைத்து மண்ணில் நட்டாலே வளர்ந்து விடும். குழந்தைகள், பெரியவர்கள் இருக்கும் வீட்டில் இதை பெரும் பாலும் வளர்ப்பார்கள்.

      சளி, தொண்டைக் கட்டு, மூக்கில் நீர் வடிதல், சளியினால் மூச்சு விடுதல் சிரமம், இது போன்றவற்றிற்கு இது நல்ல பலனைக் கொடுக்கும்.

      கற்பூரவள்ளி ரசம் பதிவில் தினகரனில் வெளிவந்த இதன் பயனைபகிர்ந்து இருக்கிறேன்.

      Delete
  5. கற்பூரவள்ளி வீட்டில் இருக்கிறது. செய்து பார்க்கிறேன்.
    கற்பூரவள்ளி பஜ்ஜி செய்து இருக்கிறேன் அடிக்கடி அதுவும் மழை காலத்தில் நன்றாக இருக்கும்.

    ReplyDelete