அப்பப்பா...இந்த பக்கம் வந்து எவ்வளவு நாள் ஆச்சு...
என்ன நண்பர்களே...எல்லோரும் நலமா....?
இன்று எனக்கு ஒரு புது விதமான...அனுபவம்...
தினமும் நாம் இரவில் தூங்கும் போது நம் ஆன்மா வெளியில போயிட்டு உடம்பில் வந்து சேரும் அப்படின்னு நாம கேள்விப்பட்டு இருப்போம்.
ஆகையால் தான் தூங்குபவர்களை அவசரமா எழுப்பக்கூடாதுன்னு சொல்லுவார்கள். நாம் அவசரமாக எழுப்பினால் வெளியில போன ஆன்மா அவசரமாக உடம்பில் தாறுமாறாக புகும். ஆகையால் சில பின் விளைவுகள் வரும் என்று படித்து இருக்கிறேன். இதைப் பற்றி மிகவும் விலாவாரியாக அலசாமல் ... இன்று என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
அதிகாலை மூன்றரை மணி அல்லது நான்கு மணி இருக்கும் சற்று விழிப்பும் தூக்கமுமாக இருந்தேன். என் உடம்பில் இருந்து ஏதோ பிய்த்துக் கொண்டு வெளியேறுவது போல் உணர்ந்தேன். ஒரு வேளை நாம் இறந்து கொண்டிருக்கிறோமோ...? உயிர் தான் உடலை விட்டு பிரிந்து கொண்டு இருக்கிறதோ...? என எண்ணிய படி இருக்கும் போதே..... அடுத்த கணம் நான் மிக இலகுவாக காற்றில் மிதந்து கொண்டு செல்வது போல உணர்ந்தேன்..நன்றாக பார்க்க துவங்குகிறேன். அழகான கருநிற வானம் நட்சத்திரங்களின் பளிச்பளிச் ஒளிரல்கள் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். உடல் பாரம் மட்டும் விட்டது இல்லாமல் மன பாரமும் இன்றி ஆனந்தமாக உணர்தேன். அடுத்த சனம் எனக்கு மிகவும் பிடித்த எங்கள் அம்மா வீட்டிற்கு பறந்து சென்றேன். எனக்கு கனவு வரும் போதெல்லாம் அந்த வீட்டில் தான் நடப்பதாக வரும். சம்பந்தம் இல்லாமல் அந்த வீடு எல்லாவற்றிற்கும் சம்பந்தமாகி விடும்.
வானத்தில் பறந்த நான் அந்த வீட்டு முற்றத்தின் மேல் இருந்து கீழே மெதுவாக பறந்தபடி இறங்கிக் கொண்டிருக்கிறேன். வீட்டில் யாரும் இல்லை. உள்ளே எங்காவது சென்று இருப்பார்கள் என நினைத்துக் கொண்டு மேல் நோக்கி பறந்து மாடி ஜன்னல் வழியாக யார் இருக்கிறார்கள் என பார்க்க ஆவல் கொண்டேன். யாரும் இல்லாமல் மீண்டும் கீழ் நோக்கி வர ஆரம்பித்தேன். கண்ணில் யாவரைவும் காணாது மேலே பறக்க நினைக்க..... முடியாமல் போனது. புவியீர்ப்பு விசை கீழே இழுப்பது போல் உணர்ந்தேன். அடுத்த நிமிடம் என் உடம்பில் வந்து சேர்ந்து விட்டேன். விழிப்பு வந்தது. ஏன் மீண்டும் உடலுக்குள் வந்தோம் என்றிருந்தது. சில நிமிடங்களே ஆனாலும் அந்த அனுபவம் ஆனந்தமாக இருந்ததை நினைத்தேன். நான் இவ்வுடம்பல்ல அல்லவா..? என்பதைஉணர்ந்தேன். இந்த உடம்பு இந்த ஜன்மத்தின் கருவியல்லவா...? ஆனால் விழிப்பு வந்தவுடன் அகவிழிப்பில்(ஆன்மா தான் நான்என்று) இருக்க முடியாது போய்விடுகிறது அல்லவா...?
நாம் ஏன் மேல் உலகத்தை நோக்கி போய் இறைவனை காணாமல், அவ்வெண்ணம் கூட எழாமல்.... கீழ் உலகத்தை நோக்கி மிதந்து சென்றேன்...? என .பின் நினைத்தேன்.
இந்த புதிய அனுபவத்தை மறவாமலிருக்க பதிவு செய்ய நினைத்தேன்.
வாசித்த உங்கள் அனைவருக்கும்
நன்றி
11.10.2019

வணக்கம் சகோதரி
ReplyDeleteநலமா? உங்களைப் பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகி விட்டது.! எப்படி இருக்கிறீர்கள்? தங்களின் வலைத்தள வருகை மகிழ்வாக உள்ளது. இனியும் தொடர்ந்து வாருங்கள்.
தங்களின் அனுபவங்கள் படிக்கும் போது ஆச்சரியமாக உள்ளது. கனவு காணும் போதுதான் நாம் எங்கோ செல்வது போலவும், நம்முடன் நம் நெருங்கிய அல்லது தூரத்துச் சுற்றங்கள் சேர்ந்து இருந்து பேசி மகிழ்வது போலவும் உணர்வோம்.. தங்கள் அனுபவம் ஆழ் நிலை கனவாக இருக்குமோ? தங்களுக்கு ஏற்பட்ட புது அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நலம் சகோ. உங்கள் அனைவரையும் சந்திக்க வந்ததில் எனக்கு ஒரு இணை பிரியாத ஆனந்தம் உண்டானது. ஒரு அழகான தோழமை இந்த ப்ளாக் மூலம் எனக்கு கிடைத்து இருப்பது உண்மை. அதை நாட்கள் விட்டு வரும் போது எல்லாம் உணர்கிறேன்,நீங்கள் அனைவரும் உணர்த்துகிறீர்கள்.
Deleteஉங்கள் அனைவருக்கும் நன்றி.
கம்பியூட்டரை அதிக நேரம் பார்த்துக் கொண்டு இருக்க இயலவில்லை. ஆகையால் தான் உங்கள் அனைவரின் தளங்களுக்கும் தொடர்ந்து வரயியலவில்லை. எப்போவாவது உங்கள் தங்களுக்கு வந்து பார்த்து விட்டு செல்வேன்.
ப்ளாகில் பதிவிடும் போது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.
முயல்கிறேன் நன்றி
வணக்கம் சகோ நலமா ?
ReplyDeleteஅபூர்வ தகவலாக தந்து இருக்கின்றீர்கள்.
வணக்கம் சகோ. நலம் தாங்கள் நலமா...சகோ.
Deleteமேலே உங்கள் அனைவருக்கும் சேர்த்து என் உணர்வை பகிர்ந்து இருக்கிறேன் சகோ தங்கள் வருகைக்கு நன்றி.
புதிய அனுபவமாய் இருக்கிறது. அற்புத அனுபவம். இதுபோல அனுபவங்கள் பிறர் சொல்ல நானும் படித்திருக்கிறேன்.
ReplyDeleteநலமா...சகோ.நானும் படித்து இருக்கிறேன்.
Deleteமேலே உங்கள் அனைவருக்கும் சேர்த்து என் உணர்வை பகிர்ந்து இருக்கிறேன் சகோ தங்கள் வருகைக்கு நன்றி.
ஹாய் உமையாள் எப்படி இருக்கிறீங்க. நலம்தானே.
ReplyDeleteஉண்மையில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தினை படிக்க வித்தியாசமானதாகவும்,புதிதாகவும் இருக்கு.பதிவினை பதிந்தமை பின்னாளில் வாசிக்க சுகானுபவமா இருக்கும்.
பிரியசகி நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க....
ReplyDelete//பதிவினை பதிந்தமை பின்னாளில் வாசிக்க சுகானுபவமா இருக்கும்.//
ஆமாம். நன்றி சகோ..
வாங்க ஆச்சி!! ஓ சாரி சாரி உமையாள்!! ஹா ஹா ஹா நலமா...தொடர்ந்து எழுந்துங்களேன். இனியேனும்
ReplyDeleteநல்ல அனுபவம் தான். வித்தியாசமான அனுபவம். அட்வான்ஸ் தியான ஆன்மீக வகுப்பு போறீங்களோ?!!!!!!! படுப்பதற்கு முன் ஆன்மீகம் சம்பந்தமான புத்தகம் வாசித்துவிட்டுப் படுத்தீங்களோ? சிலருக்கு அதில் கற்றுக் கொடுக்கப்படும் இம்மாதிரியான விஷயங்கள் இப்படியான அனுபவங்களைக் கொடுக்கும் என்று கேட்டுள்ளேன்..தூக்கம் என்றில்லை சிலர் தியானம் முடிந்ததும் இப்படிப் பேசுவதைக் கேட்டுள்ளேன்.
ஆனான் எனோ எனக்கு இப்படி எதுவும் வருவதில்லை..ஹிஹிஹி படுத்தால் மறுநாள் காலை சரியாக நான் எழும் நேரும் விழிப்பு கொடுக்கும்...
வித்தியாசமான அனுபவம் உமையாள்
கீதா
வாங்க கீதா ...வாங்க... நலமா...
Deleteஎழுத வேண்டும் என்று தான் நினைக்கிறேன்...ஆனால்...
//அட்வான்ஸ் தியான ஆன்மீக வகுப்பு போறீங்களோ படுப்பதற்கு முன் ஆன்மீகம் சம்பந்தமான புத்தகம் வாசித்துவிட்டுப் படுத்தீங்களோ??!!!!!!!//
இல்லைப்பா...
//படுத்தால் மறுநாள் காலை சரியாக நான் எழும் நேரும் விழிப்பு கொடுக்கும்...//
கொடுத்து வைத்தவர் நீங்கள்...எனக்கு சரியான தூக்கம் வருவது இல்லை....என்ன செய்வது....
வருகைக்கு நன்றி
ரொம்ப வித்தியாசமான அனுபவமா இருக்கு.
ReplyDeleteநான் பறப்பதுபோலும்-மனித உடலுடன்... இது பல முறை நிகழ்ந்திருக்கிறது..அதுனாலயே என்னாலும் பறக்க முடியும் என்று நினைப்பு வரும், பறவையாகவும் கனவுகள் கண்டிருக்கிறேன்.
உங்கள் அனுபவம் ஆச்சர்யம்தான்.
ஸ்ரீராம் சுட்டி கொடுத்து இங்கு வந்து படித்தேன்.
தாங்கள் என் தளத்திற்கு வருகை தந்து படித்து, கருத்திட்டமைக்கு நன்றி சகோ. மகிழ்வாக உணர்கிறேன்.
Deleteநன்றி ஶ்ரீராம் ஜி