தாகம்
தாழ்ப்பாள் அகற்றப் பட வேண்டும்
தயவு நீ செய்ய வேண்டும்
உள் தாழ்ப்பாள் அகற்றப் பட வேண்டும்
உன் தயவு எனக்கு என்றும் வேண்டும்
நூல் பின்னல் வலையின் உள்ளே
நூதனப் பொருள் ஒன்று உண்டு
நீ தீயிட வலை எரியும்
நீயே அதுவாய் ஆவாய்
வகை தெரியவில்லை - உன்
வாகை எனக்கு வேண்டும்
வந்த தணல் எங்கே
வாவா பூத்த சாம்பல் விலக
அறுத்திடாயோ வினையை - எனை
ஆழ்வதுந்தன் கடமை
வேட்கை எனக்குள் தகிக்க
விரைந்தோடி வருக குருவே
ஆறிடாதோ என நோக்கி நீ
அகத்தினில் நோக்க நோக்க
பார்வைப் பட பட சக்தி
பரவி ஓடாதோ என்னுள்
அக்னி ஜுவாலைக் கரம் எழ
இறுக்கி பிடித்தாய் நன்றி நாதா
அன்பே அன்பாய் வந்தாய்
ஆசியும் வழங்கி நின்றாய்
புதுப்பிறவி வடிவம்
பூத்தது தான் அங்கே
நான் என்ற கேள்வி நசிய
யார் என அறிந்து கொண்டேன்.
ஆர்.உமையாள் காயத்ரி.
தாகக்கவி அருமை வாழ்த்துகள்.
ReplyDelete