Saturday, 14 December 2013

காதல் - கவிதை - 5

    
                                                                        காதல்





உன்  கண்கள்  விரியும்  நேரம்
என் காதல் நுழையும் தருணம்
விழிகள் விரிந்து கிடக்க
கரைந்தேன் நொடிகள் பொதும்


விம்மும் நீர்த்துளியில்
விடைகள் கண்டு கொண்டேன்
விதியில் மதியின் கோர்வை
தமிழின் புதிய காவியமானோம்


கைகள் கோர்த்து கடல் காற்று வாங்கவில்லை
தோள்கள் உரசி நாம் சினிமா காணவில்லை
தனி வாழ்க்கை நடை பயிலும் போதும்
தனிமை எனக்குள் இல்லை

வரவேற்ப்பு எழுதி  என்  வாசல் திறந்து இருக்கும்
ஐய்யம்  தெளிந்த  பின்    நீ
என்னை  அணைக்க  என்றும் வரலாம்
காதல் காத்திருக்கும் கரங்கள் தானே சேரும்.



ஆர்.உமையாள் காயத்ரி.

1 comment:

  1. அன்புடையீர் வணக்கம்! இன்றைக்கு “ வலைப்பதிவில் அகத்திணைக் கவிதைகள் “ என்ற எனது பதிவினில் தங்களது இந்த கவிதையை மேற்கோளாகக் காட்டி இருக்கிறேன். நன்றி.

    ReplyDelete