கவிதை -7
வனப் பாதையிலே
வாகனம் செல்கையிலே
இதமான குளிர்காற்று
இருக்கி அணைக்கையிலே
பசுங்குகையினிலே
– மனசு
மரமும் கொடியும்
மனசாகிப் போகிறது
இளவெயில் படுகையிலே
இளந்தளிர் பார்ப்பதென்ன
முத்தான பனித்துளிர்
முழியை உருட்டி
முகம் பார்ப்பதென்ன
சாரலாய் மழைத்தூரல்
சங்கமித்த சரீரமோ ... அப்பா … !
ஈரமாய் போனது
மலை மட்டுமல்ல
மனசும் கூடத்தான் ...
காலின் ஜில்லிப்பு
தலை வரை நழுவி
மலை முகடு தலை
நோக்க
மரக்குடை மறைப்பதென்ன
வெண்கோடாய் கீழ்நெளிய
பயமும் பதை பதைப்புமாய்
பார்க்கையிலே பறக்குது மனசு
சீரான அமைதியின்
– ஊடே
சிலசில சப்தங்கள்
…
ஆனந்த அமைதியிலே
கரைந்து போனேன்
என்னுள் நான்.
ஆர். உமையாள் காயத்ரி.
ஆர். உமையாள் காயத்ரி.
No comments:
Post a Comment