Thursday, 26 December 2013

கொத்தமல்லி சாதம்



தேவையான பொருட்கள்
கொத்தமல்லி – ஒரு கையளவு
பச்சை மிளகாய் – 2                         
வரமிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
சீரகம் – ¼ தேக்கரண்டி
அரிசி – ஒரு ஆளாக்கு  ( 200 gm )
உப்பு – தேவையான அளவு
புளி – சிறிதளவு


 





தாளிக்க தேவையானவை
நல்லெண்ணைய் – 3 மேசைக்கரண்டி
கடுகு – ¼ தேக்கரண்டி
கடலைப்பருப்பு – ½ தேக்கரண்டி
உளுந்தம் ப்ருப்பு – ¼ தேக்கரண்டி
சீரகம் – ¼ தேக்கரண்டி

செய்முறை

அரிசியை சாதமாக வடித்து உதிரியாக ஆறவிட்டு வைக்கவும். கொத்தமல்லி, பச்சை மிளகாய், வர மிளகாய், இஞ்சி, சீரகம், உப்பு, புளி, இதை எல்லாம் அரைத்துக் கொள்ளவும்.

பின் தாளித்து விட்டு, இக்கலவையை போட்டு நன்கு கிளறவும்.பச்சை வாசனை போய், புளியோதரை மாதிரி வரவும் சாதத்தில் கலக்கவும். கொத்தமல்லி சாதம் தயார்.






குறிப்பு

1.   சாதம் வடித்து ஆறவிட்ட பின் அதன் மேலே 1 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு உதிர் உதிராக சாதத்தை கிளறி விட்டு விட்டால் கலவை போட்டு கிளறும் போது சாதம் உடையாமல் அழகாக கிளற வரும்.


2.    விரும்பினால் நிலக்கடலை  சேர்த்துக் கொள்ளலாம்.   



ஆர்.உமையாள் காயத்ரி.


No comments:

Post a Comment