Wednesday, 1 January 2014

சரணம் ஐயப்பா பாடல்

                                         இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்துக்கள்

                                                                              2014




                                           ராமமந்திரம்   மனமோகமந்திரம்
                                           நாளும் சுந்தரம்   பாடவந்திடும்
                                           கீர்த்தனப்ரியம்  இசையோடு கலந்திடும்
                                           தேவகானமாய்  இசைக்க வந்திடும்

                                           சரணம் ஐயப்பா  ஸ்வாமி  சரணம் ஐயப்பா
                                           சரணம் ஐயப்பா  ஸ்வாமி  சரணம் ஐயப்பா



                                           பக்தரக்ஷ்கம்  துக்க நிவாரணம்
                                           பதீதபாவனம்  பாவ விமோக்ஷ்னம்
                                           கிருபாசாகரம்  சிந்தாநாசனம்
                                           தர்மரக்ஷ்கம்  சாந்தி தந்திடும்

                                           சரணம் ஐயப்பா  ஸ்வாமி  சரணம் ஐயப்பா
                                           சரணம் ஐயப்பா  ஸ்வாமி  சரணம் ஐயப்பா

                                           ஹரியின் தத்துவம்  ஹரனின் உத்தமம்
                                           கருணை சிந்திடும்  காத்து ரக்ஷிக்கும்
                                           வேதமந்திரம்  ஜோதிதந்திடும்
                                           ஆத்ம ஜோதியில்  உன்னைக் கண்டிடும்     
                                                                            
                                           சரணம் ஐயப்பா  ஸ்வாமி  சரணம் ஐயப்பா
                                           சரணம் ஐயப்பா  ஸ்வாமி  சரணம் ஐயப்பா





                       2014  வருடம் அனைவருக்கும்  இனிமையானதாக  அமையட்டும். 
நமக்கு  நாமே  நம்மை  முன்னேற்றிக் கொள்ள  முயல்வோம்.  ஓவ்வொருத்தருக்கும்  குரு  மிகவும்  அவசியம்.  அவரின்  பாதத்தில்  நித்திய  சரண்  அடைவோம்.  அவரின்  வழி நடத்தலில்  வாழ்க்கை  வளமாக  அமைவதோடல்லாமல்  நம் மனதும்  புதிப்பிக்கப்படும்.  பாதுகாப்பான வளையத்தை  நாம்  எப்போதும்  உணருவோம்.  உண்மையாய்,  நேர்மையாய்,  நாணயமாய்,  வாழ வாழ சத்தியம் நம்மை மிளிரவைக்கும், ஆண்டவன் அருகில்  இருக்க வைக்கும்.  ஜெய்  சாய்ராம்...!!!   




 ஆர். உமையாள் காயத்ரி.



2 comments:

  1. சிறப்பான பாடல் அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் இனிய 2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete