Thursday, 23 January 2014

இன்று ஒன்று நன்று செய்...! - கவிதை - 9


கவிதை -9



நெல் ஒன்று –
பல
நெல்மணிகள்…..!
பல
செய்யும் மனிதா –
பூமி ஒன்றே…..
யோசித்துக் கொள்….?
(மனம்)

தொழிற்சாலைகள்
முளைத்தன…
வளர்ந்தன…
விரிந்தன…
கழிவுகள் ஆறாய் –
உருமாறி ஓடின…
(ஆசை மனம்)

நடக்க எனக்கு
இடமில்லை…

முளைக்க – என்னால்
முடியவில்லை…

மறு சுழற்சி செய்ய
முடியவில்லை…

மகனே…
வெகுதூரம் போகிறாயே…

மறு சுழற்சி இன்றி
மக்காத மமதைகள் எல்லாம்
நான்…
வளர்கிறேனே…அம்மா…! – என
மனிதனின் – பெருமைகளை
பறைசாற்ற…

மகனே…
என்னை மறந்த – நீ
வாடினால் குடிக்க நீர்…?
வதங்கினால்…?
உண்ண உணவு…?
எப்படி…? தருவேனடா… என் – செல்லமே…

இணங்கினால் இயற்கை
இணைபிரியாமல் கூட வரும்

செயற்கை செய்கையில்
செயல் இழந்து போகாதே…

பணப் போதையில்
பாழ்ழாகாதே…

அன்னையிடம்…
அரசியலா…!
அனைவருக்கும்…
அன்னையடா… நான்…!
ஆள் ஆளுக்கு
அடிகிறார்களேடா… என்னை

இதயக் குடகு எனக்குத்தான்…
கை காலுக்கு எதற்க்கு…?

செயல் இழக்கும்
ஒரு பாகம்…..
செல்லரித்துப் போகும்
முழு உடம்பும்….!

மறக்காமல் மரம் வளர்
காக்க காடுகள் காக்கும்
நீர் பெருக சோறு பெருகுமடா…..!!!
(தாய் மண் மனசு)






ஆர். உமையாள் காயத்ரி.





1 comment:

  1. சிறப்பான கருத்துள்ள வரிகள் அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete