Thursday, 16 January 2014

பாபாஜி - கவிதை - 8


கவிதை  - 8






அணுவையும் அண்டத்தையும் ஆளும் ஆண்டவரே
அவதார பிறப்பெடுத்து அருளும் குருநாதரே
இருந்து பிறந்தும் இறந்து இருந்துமாய்
நிரந்தரமாய் நிற்றல் நானென நீ உணர்த்தும் மொழி


அறியும் அறிவெனக்கு இல்லை யதனால்
அறிவு மொழிப்புகட்டு உள்ளிருந்து அப்பா நீ
வஞ்சனை மனத்து வாழ்வு அழித்தெனக்கு
உள்ளிருப்பு நீ இருத்தல் எனக்கு காட்டாயோ ?

பிரபஞ்சத்து ஒளி பிண்டத்தில் இருக்க
பிடரி வழி நோக்குகிறேனே ஐய்யா
பிறபொருள் மேல் ஆசை வந்தல்லோ ?
பித்தா புதையலாய் நீயிருக்க பித்தானேனே

அகக்கண் குருடாய் இருள் பார்த்திருக்க
உன்திருவடியாவது அகல்விளக்கின் ஒளியளவு காட்டாயோ
உன்திருவடியால் உதைத்தல் நலமே தீட்சைக்கு
காணொளிக் காட்சி கருணையோடு எனக்கு காட்டாயோ

தரவாரீர் இச்சணமே தந்தையாம் இவ்வுலகுக்கு
கிரியா தீட்சையருள் மறையா பாபாஜி
கண்முன் தோன்றிட காலம் கனியுமென
நம்பிக்கையுடன் கூவி அழைக்கின்றேன் வாரீர்.





ஆர். உமையாள் காயத்ரி.



1 comment:

  1. அருமை... சிறப்பான கவிதை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete