Wednesday, 29 January 2014

இஞ்சி ஊறுகாய்


இஞ்சி தொக்கு

தேவையான பொருட்கள்


நல்லெண்ணெய் - 200 மில்லி ( 1கோப்பை )
இஞ்சி துருவல் - 1 கோப்பை
பச்சை மிளகாய் துருவல்-½ கோப்பை
புளி - பெரிய எலுமிச்சை அளவு 

மிளகாய்ப் பொடி            3 தேக்கரண்டி
பொருங்காயம்              சிறிதளவு
கடுகு                      1 தேக்கரண்டி
வெல்லம்                   நெல்லிக்காய் அளவு

200 மில்லி கொள்ளளவு உள்ள கோப்பையை அளவுக்கு எடுத்துக் கொள்க. இல்லை எனில் ஒரு டம்ளர் எனக் கொள்க.

அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விடவும். எண்ணெய் காயவும் கடுகு போடவும் வெடித்தபின், இஞ்சி, பச்சை மிளகாய் துருவலைப் போடவும். 4, 5 முறை கிண்டி விட்டு, புளித்தண்ணி விடவும். உப்பு போடவும். நன்கு கிளறி விட்டுக்கொண்டு இருக்கவும். சுருண்டு வரும் போது மிளகாய்ப் பொடி, பெருங்காயம் போட்டு, பச்சை வாசம் போய் எண்ணெய் கக்கி வரவும் வெல்லம் போட்டு இறக்கவும். 

ஆறின பின் பாட்டிலில் போட்டு வைக்கவும். குளிர் சாதனப் பெட்டியில் வைப்பது நலம் தான் இல்லையா ?                 
சிறிய குடும்பத்தினர்க்கு இதில் பாதி அளவு போதும்.


ஆர்.உமையாள் காயத்ரி.

2 comments: