Wednesday, 17 February 2016

முள்ளங்கி புளிக்குழம்பு





தேவையான பொருட்கள்

சிவப்பு முள்ளங்கி - 2
சின்ன வெங்காயம் - 8
பூண்டு - 5
தக்காளி - 1
சாம்பார் பொடி - 1 தே.க
மஞ்சள் தூள் - சிறிது
புளி - சிறிய எலுமிச்சை
உப்பு - ருசிக்கு
வெல்லம் - சிறிது
கருவேப்பிலை - சிறிது

 தாளிக்க வேண்டியவை

நல்லெண்ணெய் - 5 மே.க
கடுகு - 1/4 தே.க
க.பருப்பு - 1/2 தே.க
வெந்தயம் 1/4 தே.க
பொருங்காயம் - சிறிது

                                              தாளிக்கவும்

வெங்காயம் + கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.




பூண்டை நச்சுப் போட்டு வதக்கவும்.





முள்ளங்கி + தக்காளி சேர்த்து வதக்கவும்.





பொடிகளைப்போட்டு வதக்கவும்.



பொடிகளின் வாசம் போய் எண்ணெய் கக்கி வரும்

புளித்தண்ணீர், உப்பு சேர்த்து 2 அ 3 விசில் விட்டு இறக்கவும்.வெல்லம் சேர்க்கவும்.

தேவை என்றால் அரிசி மாவை சிறிது கரைத்து விட குழம்பு திக்காகும்


                                                                   முள்ளங்கி புளிக்குழம்பு...!!!


முள்ளங்கி சுவைக் குழம்பு - இங்கே





21 comments:

  1. முள்ளங்கி அளவை விட வெங்காயம் அளவு அதிகமாக இருக்கிறதே.. சாம்பார் செய்ததுண்டு (வெங்காயம் போடாமல்) இதையும் முயற்சி பண்ணி விடலாம்.

    ReplyDelete
    Replies
    1. முள்ளங்கி அளவை விட வெங்காயம் அளவு அதிகமாக இருக்கிறத..//

      இல்லை சகோ.குளோஸப்பல புகைப்படம் எடுத்ததால்.....ஒரு வேளை உங்களுக்கு அப்படி தெரிகிறதோ...

      சாம்பார் செய்ததுண்டு (வெங்காயம் போடாமல்) இதையும் முயற்சி பண்ணி விடலாம்...//

      வெங்காயம், பூண்டு போடாமத்தானே....)))..செய்யலாம் நன்றாக இருக்கும்.

      முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ

      Delete
    2. சிவப்பு முள்ளங்கி இரண்டு, பெரிய வெங்காயம் 8 என்று அளவு கூடுதலாக இருக்கிறதே என்று சொன்னேன். நீங்கள் தந்துள்ள இந்தக் குறிப்பைச் செய்யும்போது உங்கள் குறிப்புகளின் படியேதான் செய்து பார்ப்பேன் - வெங்கயம் பூண்டு உட்பட!

      Delete
    3. தங்களின் கருத்துரையைக் கண்டதும் என்ன அளவு போட்டு இருக்கிறோம் என பார்த்தேன்.

      சின்ன வெங்காயம் - 8 ன்னு தானே போட்டு இருக்கிறேன் சகோ

      நீங்கள் பெரிய வெங்காயம் என நினைத்து விட்டீர்கள் என நினைக்கிறேன்.

      இந்த குறிப்பை தாங்கள் அவ்வாறே செய்து பார்ப்பதற்கும், மீண்டும் வந்து கருத்துரைத்தமைக்கும் நன்றி சகோ

      Delete
  2. அழகான படங்களுடன்
    சிறந்த செய்முறைப் பயிற்சி
    பயனுள்ள பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  3. ஆஹா புளிக்குழம்பின் வண்ணமே வித்தியாசமாக இருக்கின்றதே...
    த.ம.வ.போ

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ

      Delete
  4. நான் முள்ளங்கி சாம்பார் தான் வைப்பேன். உங்கள் முள்ளங்கி புளிக்குழம்பு வித்தியாசமாக இருக்கு. நானும் இதே போல் செய்து பார்க்கிறேன் சகோ.

    ReplyDelete
    Replies
    1. செய்து பாருங்கள்....சகோ அருமையாக இருக்கும்.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ

      Delete
  5. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ

    ReplyDelete
  6. முள்ளங்கி சாம்பார் தான் செய்வேன்..புளிக்குழம்பு செய்துவிட வேண்டியது தான். நன்றி சகோதரி

    ReplyDelete
  7. வாவ் முள்ளங்கி புளிக் குழம்பு.. சூப்பர்.. செய்து பார்க்கிறேன் ஆன்ட்டி.. அரிசிமாவுக்கு பதிலா நாம மண்டிக்கு செய்வதை போல் அரிசி கழுவிய தண்ணீர் சேர்க்கலாமா ஆன்ட்டி??

    ReplyDelete
    Replies
    1. அரிசிமாவுக்கு பதிலா நாம மண்டிக்கு செய்வதை போல் அரிசி கழுவிய தண்ணீர் சேர்க்கலாமா //

      நன்றாக சேர்க்கலாம் அபி.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றிம்மா

      Delete
  8. எல்லாரும் சொல்வதுபோல் நானும் சாம்பார்தான் முள்ளங்கியில் செய்வதுண்டு. இனி இப்படி குழம்பு வைத்துப்பார்த்திடனும். நன்றி உமையாள்>

    ReplyDelete
    Replies
    1. பார்த்திடுங்கள் சகோ நன்றி

      Delete
  9. மிகவும் வாஸனையான பகிர்வு. பாராட்டுகள்.

    ReplyDelete
  10. இன்றைக்குச் செய்துவிட்டேன்.. நல்லா இருக்கு :-)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கிரேஸ்

      Delete
  11. முள்ளங்கிப் புளிக்குழம்பு செய்வதுண்டு. சிவப்பும் வெள்ளையும் கூட சேர்த்து இதே போன்று. பொதுவாக சாம்பார் செய்வது போன்று அதற்கு உபயோகிக்கும் காய்கள் கொண்டு புளிக்குழம்பும் செய்வதுண்டு. வெள்ளை அல்லது மஞ்சள், முருங்கை, கத்தரிக்காய், வெண்டைக்காய், சேப்பங்க்கிழங்கு, சேனைக்கிழங்கு, சிறுகிழங்கு எல்லாம் தனித்தனியாகச் செய்வதுண்டு. சில சமயம் சேர்த்தும் செய்வதுண்டு. சில சமயம் சின்ன வெங்காயம் மட்டுமே போட்டும்..

    நல்ல அழகான குறிப்பு. அளவு நோட் செய்துகொண்டேன். என் அளவுடன் ஒத்துப் பார்த்துக் உங்கள் அளவு போல அட்ஜஸ்ட் செய்து கொள்ள...

    மிக்க நன்றி உமையாள் அழாகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...சூப்பர் சகோ விரிவான கருத்துக்கு நன்றி

      Delete