செய்கைகள் யாவும் தந்தவன் நீயே
செய்விக்க உடனிருப்பதும் நீயே
நான் நான் என்றதை அறுத்ததும் நீயே
நாந்தான் என்பதை காட்டியதும் நீயே
மூச்சினில் கலந்து இருப்பதும் நீயே
மூச்சே நீயாய் ஆனதும் நீயே
மனப்பாலையில் கடப்பது சிரமம்
மகேசன் வழிகாட்டிட நடப்பது இன்பம்
சொற்கள் உளியில் சிதறுவதால்
சொர்ண நின்னுருவம் கண்டேன்
புறணித்த வாய் புறம் தள்ளிட
புண்ணியன் உன்னை கண்டேன்
உளியின் அடிகள் கல்லின் உண்மைக்கு
உள்ளத்தின் சிரமம் மெய் நம் நன்மைக்கே
கண்ணன் சொன்னான் கடமை செய்யென்று
கண்ணாய் காப்பேன் உம்மை நானென்றும்
வியாழன் ஸ்பெஷல். ஓம் ஶ்ரீ ஸாயி ராம்.
ReplyDeleteஒம் சாய்ராம்
Deleteசாய் மூச்சாய் நீ
ReplyDeleteசாய் மூச்சாய் நீ
சாய் மூச்சாய் நீ
தமிழ் மணம் 2
ஒம் சாய்ராம்
Deleteஅருமை...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteசாயி பற்றி போற்றிய பாடல் சிறப்பு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இரசித்தும் உணர்ந்தும் படித்தேன்
ReplyDeleteஅமைதி தந்தது
அருமையான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தாம்தமாகிவிட்டது. பாடல் அருமை சகோ..
ReplyDeleteஓம் சாயி நமஹ...
ReplyDeleteஒம் சாய்ராம்
ReplyDeleteஜெய் சாய்ராம்
அருமையான பா/கவிதை வரிகள்