Monday, 1 February 2016

தக்காளி சாதம்




தேவையான பொருட்கள்

பாஸ்மதி (அ) ப.அரிசி - 1 கோப்பை
வெங்காயம் - 1
தக்காளி - 3 ( நடு அளவு)
பூண்டு - 7
ப.மிளகாய் - 1
கருவேற்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
மிளகாய் தூள் - 1/2 தே.க
உப்பு - தே.அ

தாளிக்க வேண்டியவை

நெய் - 1/2 தே.க
எண்ணெய் - 2 மே.க
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 1
பிருஞ்சி இலை - 1/2 இலை
ஏலகாய் - 1



                                                தாளிக்கவும்.





வெங்காயம் + பூண்டு+ ப.மிளகாய்
சேர்த்து வதக்கவும்.




தக்காளி +கருவேற்பிலை சேர்த்து வதக்கவும்.




மஞ்சள் தூள் +மிளகாய் தூள் + உப்பு
சேர்த்து வதக்கவும்.





அரிசியை கழுவி 10 நிமிடங்கள் முதலிலேயே ஊறவைத்ததை இப்போது சேர்த்து 2 நிமிடம் கிண்டவும்.



2 கோப்பை தண்ணீர் சேர்க்கவும்.

குக்கரை மூடி வேகவிடவும்.




                                                         தக்காளி சாதம் எளிதில் தயார்...

தக்காளி சாதமும், கம்பு தயிர் சாதமும் செய்தேன். கம்பு தயிர் சாதம் அடுத்த பதிவில்....

மேலே சொன்னதில் கலவையை மட்டும் தனியாக செய்து கொண்டும், சாதத்தை தனியாக செய்தும் கலந்து கொள்ளலாம்.


பாஸ்மதி அரிசி என்றால் 1 விசில் வரவும் 3 அ 4 நிமிடங்கள் விட்டு அணைத்து விடுவேன்.

ப அரிசி என்றால்  1 விசில் வரவும் 7 அ 8  நிமிடங்கள் விட்டு அணைத்து விடுவேன்.

நீங்கள் எவ்வாறு செய்வீர்களோ அப்படி செய்து கொள்ளுங்கள்.


 தக்காளி புலவுக்கு  - தக்காளி புலவ்...!!! கிளிக் செய்து காணலாம்.




24 comments:

  1. ஆஹா.. சுவையான, மணமான தக்காளி சாதம். நாங்கள் ஏலக்காய் போடுவதில்லை. அடுத்தமுறை பாஸ் கிட்டச் சொல்லிச் சேர்க்கச் சொல்லவேண்டும்!

    தம +1

    ReplyDelete
  2. தக்காளி சாதம் செய்முறையும் விளக்கப்படங்களும் அருமை சகோ. தங்களின் கம்பு தயிர் சாத பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. விரைவில் கம்பு தயிர் சாதத்தை பதிவிடுகிறேன் சகோ நன்றி

      Delete
  3. பூண்டுவெட்டி போட்டு செய்வீர்களா? இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து செய்வோம்.. அடுத்த முறை இப்படி செய்து பார்க்கிறேன் ஆன்ட்டி..

    ReplyDelete
    Replies
    1. செய்து பாரும்மா. நன்றி அபி

      Delete
  4. அவசரத்திற்குக் கைகொடுப்பது - தக்காளி சாதம் மற்றும் புலவு..

    இனிய, சுவையான - பதிவு..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். அவசரத்திற்கு சுலபமானது...தான்
      நன்றி

      Delete
  5. தக்காளி சாதம் படங்கள் + செய்முறை ஜோர் ஜோர். பசி வேளையில் (கற்பனையில்) சாப்பிட்ட திருப்தி ஏற்பட்டது. பாராட்டுகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. கம்பு தயிர் சாதம் - புதிதாக இருக்கிறது. தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. விரைவில் சகோ...நன்றி

      Delete
  7. கம்பு தயிர் சாதம் விரைவில் வரட்டும் எனக்கு பிடித்தமானது
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. ஓ அப்படியா...நன்றி

      Delete
    2. ஓ...அப்படியா நன்றி

      Delete
  8. இதே முறையில் செய்வதும் உண்டு தோழி. மசாலா இல்லாமல் தக்காளி வெங்காயம் பச்சைமிளகாய் கறிவேப்பிலை எல்லாம் வதக்கிச் சாதத்தில் கலப்பதும் உண்டு. மசாலா சேர்த்து சாதத்தில் கலந்தோ இல்லை குக்கரில் எல்லாம் சேர்த்துவைத்தோ...வெங்காயம் மசாலா இல்லாமல் கடுகு, கடலைப்பருப்பு தாளித்து, தக்காளி, பச்சைமிளகாய் மஞ்சள் தூள், பிற நீங்கள் சொல்லியது போல் சேர்த்து நன்றாக வதக்கிச் சாதத்தில் சேர்ப்பது உண்டு எங்கள் வீட்டில் வெங்காயம், பூண்டும் மசாலா சேர்த்துக் கொள்ளாதவர்களுக்கு என்று இப்படி. நீங்கள் சொல்லிய வைதத்திலேயே தண்ணிருக்குப்பதிலாகத் தேங்காய்ப்பால் சேர்த்தும் செய்வதுண்டு. இப்பச் செய்துவிட்டு கொஞ்சம் புதினா இலைகளைக் கடைசியில் சேர்த்து என்று தோன்றியபடி....சிலசமயம் பெயர் கூட இல்லாமல் தோன்றியதைச் செய்து ஏதோ சாப்பிடும் விதத்தில் செய்வதும் உண்டு..ஹஹஹ்...கம்பு தயிர் சாதமா...ஆஹா...வரகரிசியிலும், குதிரைவாலி சிறுதானியங்களில்..சென்ற வாரம் பாட்லக்கில் ஜவ்வரிசி தயிர்சாதம்...செய்தேன்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...விதவிதமா செய்றீங்க சகோ...நன்றி

      Delete
  9. இப்படிப் படம் படமா போட்டு நாக்கில் நீர் ஊறவைத்து...உங்கள் வீட்டிற்குக் கண்டிப்பாக இதற்காகவே வர வேண்டும் உமையாள். ஹஹ. என்ன செய்வது என்று சில சமயம் மண்டையை உடைத்துக் கொள்ளும் நேரம் உங்கள் மெனு கை கொடுக்கும்...நாளை தக்காளிச் சாதம்...டிசைடட்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க...வாங்க சகோ...எதிர் பார்க்கிறேன். நன்றி

      Delete
  10. ஆஹா. என்ன சுவை . அருமை

    ReplyDelete
  11. தக்காளி சாதம் சூப்பர்,

    கம்பு தயிர் சாதம் வேண்டுமே,,

    ReplyDelete
    Replies
    1. விரைவில்...சகோ நன்றி

      Delete