Sunday, 31 January 2016

என்னுடைய சில சொடுக்குகள்.....!

அல்லி பூக்கக்கண்டேன்
கைகளில் அள்ளத்துடித்தேன்




நீரின் ஆழம் கண்டு
தயங்கியே நின்று விட்டேன்




காலை பொழுதில் கண்கள் மயங்க
கைபேசியில் காட்சிகளை பதியலானேன்


கரையினிலே சில காலம் 
ரசித்தே....நின்று விட்டேன்



ஜோடிப் பூக்களின் காதல் கண்டேன்
வில்லன் முட்கள் சூழக் கண்டேன்


ஏங்கிய பூவின்
தனிமை கண்டேன்



ஏக்கம் தீர்ந்து
சுகமாய் வாழக்கண்டேன்








12 comments:

  1. கடைசி வரியில் ....சுகமே ,சுமகாய் மாறக் கண்டேன் :)

    ReplyDelete
  2. வணக்கம்
    அம்மா
    அழகிய படங்கள் இரசித்தேன் த.ம 3
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நதி நீராய் ஓடுதடி.:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அல்லி பூக்கள் அழகு..
    அவற்றுக்கான கவிதையும் அழகு!..

    ReplyDelete
  4. மிக அழகான படங்களுடன் கூடிய அற்புதமான பதிவு.

    மிகவும் ரஸித்த வரிகள்:

    ஜோடிப் பூக்களின் காதல் கண்டேன்
    வில்லன் முட்கள் சூழக் கண்டேன்

    ஏங்கிய பூவின்
    தனிமை கண்டேன்

    >>>>>

    ReplyDelete
  5. கடைசி படத்தின் அடியில் உள்ள

    //ஏக்கம் தீர்ந்து
    சுமகாய் வாழக்கண்டேன்//

    என்பதில்

    ’சுகமாய்’ என்பது ’சுமகாய்’ ஆனதை நானும் கண்டேன். :)

    உடனே மாற்றி விடுவீர்கள் என்ற நம்பிக்கையும் கொண்டேன்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  6. //ஜோடிப் பூக்களின் காதல் கண்டேன்
    வில்லன் முட்கள் சூழக் கண்டேன்//
    ஹாஹாஹா ‘’வில்லன்’’ ஸூப்பர் வரிகள்
    படங்கள் அழகு
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  7. நினைப்பதைச் சொல்லிப் போனவிதம் நன்று

    ReplyDelete
  8. ஒவ்வொன்றையும் மிகவும் ரசித்தோம் சகோ! ஜோடிப்பூக்களுக்கு முட்கள் வில்லன் என்பதைவிட அவற்றிற்கு பாதுகாப்பாய் வேலியாய் என்று அர்த்தம் கொள்ளலாம் இல்லையா...

    ReplyDelete
  9. படங்களுக்கேற்ப நல்ல கற்பனை ! வில்லன் முட்கள் :))

    ரசித்தேன் உமையாள் !

    ReplyDelete
  10. படங்களும் உங்கள் கற்பனையும் நன்று. பாராட்டுகள்.

    ReplyDelete