தீயடி உன் நிழல்
தீண்டிய போது நானோ தணல்
சட்டென திரும்பினாய்
சற்று முன் அக்கழுத்து வணங்கியிருக்கக்கூடாதா..?
உய்த்திருப்பேன் நான் உயிரோடல்லவா...
தேடுகிறாயே இப்போது என்ன உணர்வில்...
உன் முதுகில் பச்சை குத்திய
என் செந்தாமரை பேனாவின்
சேதியறிந்ததால் தானே சகியே..?
அலட்சிய ஆணவத்தில்
ஆளைக் கொன்றாயேயடி...
ஆவியான பின்னும் அலைகிறேனடி அறிவாயா...?
காதலுக்கு கண்கள்
கண்களிலோ காதல்
வழியுதடி அன்பு
வாரியெடுத்து போடு செம்பில்
கரைத்துவிடு கங்கையில்
கரைக்க மாட்டேன் காதலை நான்
காத்திருப்பேன் கரையினிலே...
வாழ்க்கையை வாழ்ந்து விட்டு வா...
வானம் பாடியாய் திரிவோம் நாம்...
அருமை சகோ அழகிய வரிகள் தொடர வாழ்த்துகள் ம்ம் இனி மொத்தமாக தினம் வரும் என்று ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்
ReplyDeleteதமிழ் மணம் 2
//தொடர வாழ்த்துகள்...//
Deleteநன்றி சகோ...
இனி மொத்தமாக தினம் வரும் என்று ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்..//
இணையம் சரியாகவரவில்லை...ஆகையால்...சற்று சரியான பின் முயற்சிக்க வேண்டும்....நன்றி சகோ...
அருமை.
ReplyDeleteதம +1
நன்றி ஶ்ரீராம்...
Deleteதீயடி உன் நிழல்...!
ReplyDeleteபடமும், பாடலும், அதில் உள்ள உணர்வுகளும் அருமையோ அருமை. பாராட்டுகள்.
அருமையோ அருமை. பாராட்டுகள்.//
Deleteமிக்க நன்றி ஐயா...உங்கள் இவ்வாக்கியம் மிகவும் மகிழ்ச்சியை வழங்குகிறது...
செத்து சுண்ணாம்பு ஆனபின்பும் , திருந்தாத காதலனை என்னதான் செய்வது :)
ReplyDelete))))).....நம்மாள ஒன்னும் செய்ய முடியாது தான்....நன்றி சகோ
Deleteஉங்களை உங்கள் பதிவுப்பக்கம் பார்த்தே ரொம்ப மாதங்கள் ஆச்சு.
ReplyDeleteஎன் பதிவுகள் பக்கம் பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு.
தங்களுக்கு என் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
புத்தாண்டு பிறந்த உடனேயே தீ பத்திக்கிச்சு ......
‘தீயடி உன் நிழல்...!’ என்ற தலைப்பில். வாழ்க !
ஆமாம்...
Deleteவருஷம்...எல்லாம் இல்லை..மாதங்கள் தான்))))...ஐயா....ஆச்சு
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்கள் தளம் வந்து திறந்து பர்த்தேன்...இணையம் எனக்கு சரியாக வராத காரணத்தால் திறக்கவில்லை. இது போல் பலருடைய தளங்களுக்கு என்னால் செல்ல இயலாத சூழ்நிலை...சிலருடைய தளம் திறந்தது...
ஆகையால் நண்பர்கள் என்னடா இவள் நம் பக்கம் காணோமே என நினைக்க வேண்டாம் விரைவில் வருகிறேன் நண்பர்களே...
கரைத்துவிடு கங்கையில்
ReplyDeleteகரைக்க மாட்டேன் காதலை நான்
காத்திருப்பேன் கரையினிலே...
வாழ்க்கையை வாழ்ந்து விட்டு வா...
வானம் பாடியாய் திரிவோம் நாம்...
கவிதை அருமை அக்கா..
நன்றி சகோ
Delete
ReplyDeleteதீயடி உன் நிழல்
தீந்தமிழ் நின் நிஜம்
மனதை சுட்டது மகத்தான வரிகள்.
த ம +
நட்புடன்,
புதுவை வேலுய்
நன்றி சகோ
Deleteஅருமை...
ReplyDeleteநன்றி சகோ
Deleteதேடுகிறாயே இப்போது என்ன உணர்வில்...
ReplyDeleteஉன் முதுகில் பச்சை குத்திய
என் செந்தாமரை பேனாவின்
சேதியறிந்ததால் தானே சகியே..?//
நிழலும் தீயாய் திகுதிகுக்கும் பகிர்வுகள்..!
நன்றி அம்மா
Deleteதாங்கள் உடல்நலம் தேறி வலைப் பக்கம் காண்கையில் ஆனந்தமாக இருக்கிறது அம்மா
முதல் வரியே அசத்துகிறது! அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சகோ
Deleteதலைப்பு அதிகம் ஈர்த்தது.
ReplyDeleteநன்றி ஐயா
Deleteஅருமை....
ReplyDeleteஆவியின் காதலா?
ReplyDeleteகாதல்.....ஆவியன பின்பும் தொடர்கிறது..
Deleteநிழல் தீ நிஜமானாற் போலே,,,
ReplyDeleteதொடர்கிறேன் சகோ.
த ம +
ஆஹா அருமை. தாமதமாகிவிட்டது. இப்போது உங்கலை மெய்லிலும் தொடர்கின்றோம் இனி உங்கள் பதிவுகள் பெட்டிக்கே வந்துவிடுமே. மிஸ் ஆகாது. தலைப்பு சூப்பர் சகோ
ReplyDeleteபரவாயில்லை சகோ....
Deleteஓ.......சரிசரி...
நன்றி சகோ
சகோ நலமா? தலைப்பும் பதிவும் அருமை. எனது பதிவாகிய பனீர் குடமிளகாய் கிரேவியை ருசிக்க எனது தளத்திற்கு வாருங்கள்.
ReplyDeleteவணக்கம் சகோ, நலமா?
ReplyDeleteஆரம்பமே அமர்க்களமாய்,,,,, ம்ம்,
அருமையான வரிகள், சரி ஓய்வு போதும், இனி தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.
"காதலுக்கு கண்கள்
ReplyDeleteகண்களிலோ காதல்
வழியுதடி அன்பு
வாரியெடுத்து போடு செம்பில்" என
அழகுபட ஆக்கிய பாவரிகள்
உள்ளத்தை ஈர்க்கிறதே!
2016 தைப்பொங்கல் நாளில்
ReplyDeleteகோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!