Thursday, 21 January 2016

சாயியெனும் வேதம்






சாயியெனும் வேதம் சங்கடங்கள் தீர்க்கும்
சரணடைந்தால் போதும் பக்க துணையாகும்

எண்ண எண்ண இனிக்கும் ஏங்கிடச் செய்யும்
ஏதும் செய்யாதிருக்க எல்லாமே நடக்கும்

அவருணர்வு உள்ளிருக்க ஆனந்தம் கூடும்
அன்பினலை பரவியெங்கும் ஆத்ம நட்பை நல்கும்

நினைவில் சுற்றாது நிற்கவைக்கும் நாமம்
எண்ண விறகில் நாமத்தீ என்னை புடமாக்கும்

சாயிசாயி சாயிசாயி  சாயிசாயி சாயிசாயி
சாயிசாயி சாயிசாயி  சாயிசாயி சாயிசாயி



படம் கூகுள் நன்றி

மீண்டும் சாய்பாடல்கள் எழுதவைத்த சாய்நாதனின் பாதத்திற்கு நன்றி பூக்களை சமர்ப்பிக்கின்றேன் 





9 comments:

  1. வெகுநாட்களுக்குப் பிறகு - சாயி புகழ் பாடும் கவிதைகள்..

    சாயிநாதா சரணம்..
    சற்குருநாதா சரணம்..

    ReplyDelete
  2. அருமை. சாய் அருள் உங்களுக்குக் கிடைக்க எனது பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  3. //எண்ண விறகில் நாமத்தீ என்னை புடமாக்கும்// :)

    புடம்போட்ட தங்கமான வரிகள் ....

    குருவாரத்திற்கேற்ற வெளியீடு :)

    வாழ்க !

    ReplyDelete
    Replies
    1. சாய் ராம்
      சாய் ராம்
      சாய் ராம்

      Delete
  4. சாய் பாடல் நன்று தங்களுக்கு அருள் கிடைக்கும்
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  5. ஓம் சாயி ராம்! அருமையான துதிப்பாடல்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சாய் ராம்
      சாய் ராம்
      சாய் ராம்

      Delete
  6. அருமையான வரிகள்! அருள்கிட்டட்டும் சகோ..

    ReplyDelete