Friday, 22 January 2016

சாமை பொங்கல் / Samai Pongal

  
...
பொங்கலுக்கு அப்புறமா....பொங்கலே வந்து விட்டதே...சரிசரி

சாமை பொங்கல் சாப்பிடலாமா...?

என்னது சாப்பிட்டு இருக்கீங்களா...? சரி

சாப்பிடவில்லைனா... இப்போ செய்து சாப்பிட்டா போச்சு...என்னங்குறீங்க... 




தேவையான பொருட்கள்

சாமை - 3/4 கோப்பை
பா.பருப்பு - 1/4 கோப்பை
பச்சைமிளகாய் - 1
மாங்காய் இஞ்சி - சிறிய துண்டு
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தே.அ

தாளிக்க வேண்டியவை

நெய் - 2 தே.க
ரீபைண்ட் எண்ணெய் - 2 தே.க
மிளகு - 1/4 தே.க
சீரகம் - 1/4 தே.க
கருவேற்பிலை - சிறிது



முதலில் சாமையை 1/2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.







பா.பருப்பை சற்று வறுத்து கொள்ளுங்கள்





தாளிக்கவும்

இஞ்சி, ப.மிளகாயை சேர்த்து வதக்குங்கள்






பருப்பு, சாமையை சேர்க்கவும் 


 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு + மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி விட்டு குக்கரில் வேகவிடவும். ஒரு விசில் வரவும் தீயை மிதமாக்கி 5 நிமிடத்தில் அணைக்கவும்.









இப்போ தயாராச்சு. சும்மா மணம் கமகமக்குது....




சாமை பொங்கல் நல்லா இருந்தது....

என்ன பெரிசா...?   .ம்கூம் அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க....அரிசிக்கு பதில் சாமை.....தட்ஸ் ஆல்....

ஆனா...சிறு தானியம் அப்படிங்கிறதால.....உடம்புக்கு நல்லது இல்லையா....? அதான்....எல்லாம் உங்களுக்கே தெரியும்....இல்ல ஹிஹிஹி.....வரட்டா.....

என்ன இன்னுமா நிக்கிற....

நோ.......!!!

சே.....இப்படியெல்லாம் உங்க கூட பேசி எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன.....இப்போ மனசு நிறைவா இருக்கு.....






24 comments:

  1. வாவ் நல்ல பொங்கல்.. செய்து பார்க்கிறேன்.. பா.பருப்பு தானே? ப.பருப்பு என்று இருக்கே??

    ReplyDelete
    Replies
    1. பா.பருப்பு தான். அடிக்கும் போது தவறுதலாக ப வந்து விட்டது.சரி செய்து விட்டேன். நன்றி

      Delete
  2. பசி வேளைக்கு சாமை பொங்கல் சாப்பிட மிகவும் நல்லா இருந்தது....

    மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    //என்ன இன்னுமா நிக்கிற....//

    இல்லை. சாப்பிட்டதும் அசந்து படுத்துவிட்டேன். :)

    ReplyDelete
    Replies
    1. ))))).....

      உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டுன்னு சொல்லுவாங்க இல்ல....)))))..
      நன்றி ஐயா

      Delete
  3. ஆரோக்யப் பொங்கல்.

    ReplyDelete
  4. வீட்டிலே செய்ய சொல்லியாச்சி...!

    ReplyDelete
  5. அருமையான ஆரோக்கியமான சாமை பொங்கல்.

    ReplyDelete
  6. செய்வதுண்டே உமையாள்! சூப்பர் நல்ல பொங்கல் இதே போன்று வரகும் செய்வதுண்டு

    இரண்டிலும் சர்க்கரைப் பொங்கலும் செய்வதுண்டு நீங்கள் செய்திருப்பீங்களே...அதே போல திருவாதிரைக் களியும் நன்றாக வருகின்றது வித்தியாசமான சுவையுடன்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சகோ நன்றி

      Delete
  7. ரொம்ப நாளாச்சி உமையாள் உங்க ரெசிப்பிஸ் வெளிவந்து ..சாமை வீட்டில் இருக்கு இதுவரைக்கும் வரகில் தான் செஞ்சேன் இப்போ ரெசிப்பி கிடைச்சாச்சு செஞ்சுடறேன் :)

    ReplyDelete
    Replies
    1. உடனே செய்து விட்டு சொல்லுங்க ஏஞ்சலின்...:))). நீங்க தான் அசத்திடுவீங்களே

      Delete
  8. சாமை பொங்கல் செய்திட்டா போச்சு!!
    நிஜம் தான் உங்க கூட இப்படி பேசுவது எவ்ளோ சந்தோசமா இருக்கு!!!

    ReplyDelete
    Replies
    1. வேகமா ஆகிவிடும்.....மைதிலி

      Delete
  9. வணக்கம்
    செய்முறை விளக்கத்துடன் அசத்தல் அருமை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. சத்தான பொங்கல் பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  11. உண்மைதான் நீங்க இப்படி பேசி,சமையல் பதிவு போட்டு நாளாச்சுதான். சந்தோஷம் உமையாள்.
    சாமையில் ஒருநாளும் சமைத்தது இல்லை. செய்துபார்க்கனும்.நன்றி

    ReplyDelete