அந்த ஒரு வார்த்தை…
பத்து நிமிடத்தில்
உருளைக்கிழங்கு மசாலும்,
பொரிக்க
தயாரான
நிலையில்
வட்ட வட்டமாய்
பூரிகளை
யும் இட்டு வைத்தேன்.
வந்துவிட்டார்
போல… அழைப்பு மணி அழைத்தது.
ஆஹா… சபாஷ்…! உருளைக்கிழங்கு மசால் மணக்கிறதே…! சீக்கிரமா கை,கால்
அலம்பிட்டு வர்றேன். பூரியைச் சுடச் சுட போடு
என்றவர், ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே அறைக்குள் சென்று விட்டார்.
வார்த்தை
உள்ளே
வட்டமிட
வாட்டச் சாயல்
முகம்
பூசிக்கொள்வது இயற்க்கை
தானே…?
உப்பல் உப்பலான
பூரிகளைச் சுவைத்த படியே உன் முகப் பூரிப்பு எங்கே…? என்றார்.
வழக்கமா காலைல
கோவிலுக்கு போறவ இன்னைக்கு போகலங்க…
அதுக்கு
ஏன்
உம்முன்னு
இருக்க…
மழைக்கு
அவன்
, அவன் வீட்டுல முடங்கிக்
கிடக்கான் … நீ என்னடான்னா
காலைல
போகலைனு வருத்தப்படுற…
இப்பத்தான் போயிட்டு
வந்துட்ட
போல…?
அப்புறம்
என்ன…?
அதாங்க …அதாங்க…
அந்த வார்த்தை தாங்க என்னை…
என்ன…?
புதுசா
பஞ்ச்
டயலாக்கா
பேசிட்டேன்…
அந்த வார்த்தை
அந்த
வார்த்தைனு சொல்லுற…
அய்யோ… சொல்ல விடுங்களேன்…
சரி.. சரி… சொல்லு
அவன்
அவன்
வீட்டுல
முடங்கிக்
கிடக்கான்னு
சொன்னீங்க
இல்லை…
ஆமா… அதுல என்ன…?
உங்ளுக்காக பூ
எப்போதும் போல எடுத்து வைத்து இருந்தேன்…மா… ன்னான்…
மழையில்லப்பா… அதான்
வீட்டுலயே முடங்கிட்டேன் முடவா…ன்னேன்
ஆ…ஹா…ஹா………..!
ஏன் சிரிக்கிற…?
இல்ல,இல்ல
... முடவான்னு
சொல்லிட்டு நீங்க …. முடங்கிட்டீங்களே அதான் சிரிப்பு வந்திடுச்சும்மா மன்னிச்சிடுங்க
சம்மட்டியால்
அடித்தது போல்
இருந்தது.
இல்லப்பா…
நான்
தான்
மன்னிப்பு
கேட்கனும்
உன்கிட்ட.
மன்னிச்சிடுப்பா
ஐய்யோ…! அம்மா… நான் ஏதோ…
இல்லயில்ல நீ
சரியாத் தான் சொன்ன… உடல் முடங்கிப்போறது முடவு
இல்லப்பா… மனசு முடங்கிப் போறது தான்… உன் பெயர் என்னப்பா…?
எங்கம்மா…?
எல்லோரும்
முடவா
,முடவான்னு
கூப்பிட்டு
என்
பெயர்
எனக்கே தெரியாதும்மா…
சக்தி…
என்னம்மா…
சக்தி
… இனிமே உன்னை
இப்படித்தான்
கூப்பிடப்போறேன்…
என்ன நல்லா… இருக்கா…?
சக்தி…ம்ம்… நல்லா தான் இருக்கும்மா… என பூக்கட்டத் தொடங்கிவிட்டான்…
எனக்குத் தான்
என்னவோ
போல்
ஆகிவிட்டது. தப்பு
செய்து
விட்டோமே
என. பூவை வாங்கிக்
கொண்டு கோவிலுக்குள் நுழைந்தேன்.
அம்மனிடம் மன்னிப்பு
வேண்டினேன். பின்
அவனுக்காக
பிரார்த்தித்து
வீடு திரும்பினேன்.
அவனுக்காக பிரார்த்தித்ததில்
மனசு சற்று லேசானது போல் இருந்தது.
அந்த ஒரு வார்த்தை
முடவா…னு இத்தனை நாட்கள்…
கூப்பிட்டது
குற்றவுணர்வா…
என்னை அரிக்குதுங்க….
தப்புன்னு இப்போ உனக்கு தெரியுது இல்ல… இனிமே எப்போதும் யாரையும்
உடல் சார்ந்த விதமா கூப்பிடாம இரு. வருத்தப்படாத… அதற்கு பரிகாரமா… இனிமே நீ சக்தி
சக்தின்னு கூப்பிடும் போது மற்றவர்களும் அப்படியே
கூப்பிடுவா….அது அவனுக்கு சக்தியை கொடுக்கும். மற்றவர்களும் இந்த மாதிரி இவ்வளவு நாட்கள் நாம தப்பா கூப்பிட்டோமேன்னு வருத்தப்படுவா. ஒரே கல்லுல
இரண்டு
மாங்கா… அடிச்சிட்ட.
போ…
வருத்தப்படாதே…
அவரின் வார்த்தைகள்
எனக்கு சக்தி அளித்தது. மனம் நிம்மதி ஆனது.
“சக்தி”……..
அந்த ஒரு வார்த்தை….
ஆர். உமையாள் காயத்ரி.
No comments:
Post a Comment