மெளன
மொழி
தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பர்களே...!
என்னங்க…..தலைப்பைப்
பார்த்தவுடன் திகைத்து விட்டீர்களா? வாங்க என்ன?, ஏதுன்னு? ஒரு ரவுண்டு போகலாம்.
வாய்
பேசாம இருக்குறப்ப மனசு பேசுவது
நல்லா தெரியும். எவ்வளவு
சத்தம், வேகமான எண்ணவோட்டம், பரபரப்பு,
அப்பப்பா…… என்ன ஒரு டிராபிக்
ஜாம்…!!! நம்மளோடு
நாம் இருப்பதே… அம்மாடியோவ்….
எவ்வளவு கஷ்டம்…!
அப்புறம் மற்றவர்கள்
பாடு…. சரி சரி….விடுங்க…! அரசியல்ல இது எல்லாம் சகஜமப்பா…! நாம் அடுத்தவரோடு பேசும் போது அவங்க ஏதாவது புடிக்காம
பேசினா வேற ஏதாவது பேச்சை மற்றலாம்…ஆனா இங்க நடக்காது இல்ல..?
தைரியம், சாமத்தியம், விட்டோம் பாரு ஓட்டம்… ம் ஹு….ம்! ஒன்னும்
பலிக்காது …டி…!
பரவாயில்லப்பா…மெளன
விரதம் எல்லாம் இருக்கீங்க….என்ன வேண்டுதலா? எத்தனை வாரம்..ம்… உடம்புக்கு எவ்வளவு
நல்லது இல்ல….? நானும் தான் பார்க்கறேன் உங்கள
மாதிரி எங்க வீட்ல அது எல்லாம் முடியாதுப்பா…ரொம்ப காலத்துக்கு அப்புறம் பொறந்த சின்னப்
பையனை வச்சுக்கிட்டு….ம்ஹும்… உங்க பாடு பரவாயில்லப்பா….(
நம்ம பாடு நமக்கு தானே தெரியும்..). உங்க கூட பேசலாம்னு வந்தேன். ம்ம்… சரி சரி…
6.00 மணிக்கு அப்புறம் பார்க்கலாம்..! ஒரு ஏக்க பார்வையோடு செல்ல…மெளனமாய் சிரித்து
தைலையாட்டி விடை கெடுக்க வா வா என்றது மனது. இதனிடம் இருந்து விடை பெற்றால் நாம தான்
ஞானி ஆகிடுவோம் ல..!
ச்சேச்…ச்சே…
பேசாம பேசிடுவோமா..? வேண்டுதல் ஒரு பக்கம்
மனக்காட்சியாய் நிழலாடியது... ம்... இல்ல இல்ல..நமக்கு கண்டிப்பா வேண்டுதல் நிறை வேறணும்..
சாப்பிடாமதான் இருக்க முடியல..இருப்போம்.
காலனில, பக்கத்து
வீட்டுக்காரர்கள் எல்லோருக்கும் பேச மாட்டேன்னு தெரியும். முக்கியமா வேலைக்கார அம்மாவுக்கும்
தெரியும். ஆனா ஏதாவது பேசிட்டே இருக்கிற அதால… மறந்து போய் கதவைத் திறந்தவுடனே முக்கியமா
கேக்கிறது போல் கேட்கும். நாம் தான் மனசு கூட பேசிக்கிட்டே இருக்கோமே… திடீர்னு பேசிவிடுவோம்.
ஏம்மா உனக்கு எத்தனை தடவை செல்லுறது…? ஜய்யோ…மறந்துட்டேக்கா….னு வேலை பார்க்கச் செல்ல...ஒரே கோபமாய் வர, என்னுள் நீயில்ல மறந்துட்டு பேசின..என்றது. ஆம்,
என் கையாலாகாத்தனம் தான் அடுத்தவர் மீது கோபம் கொள்ளச் செய்தது.
என்னை எனக்கே சுட்டி விளக்கப் பொருள்
காட்டிற்று. தவறாது இருந்து வேண்டுதல் நிறைவேறிய பின்,எனக்கு
இது பழகி இருந்தது. ஏதோ..நிம்மதியாக, சந்தோஷமாக இருப்பது தெரிந்தது. விட மனம் இல்லை..இது
தாங்கோ…..! பழக்கம்கிறது. நல்லதுக்கும், சரி கேட்டதுக்கும் சரி.ஆமா தானே..?
வியாழன் ஒரு
நாளாவது சாய்பாபாவை முழுதினமும் நினைக்க வேண்டும், நாமத்தைச் சொல்லிக் கொண்டு இருக்க
வேண்டும் என ஆசைப்பட்டேன். முயன்றேன். இன்னும் முயன்று கொண்டுதான் இருக்கிறேன்..….!
புதன் இரவே
நாளை வியாழன் என மனம் நினைத்துக்கொள்ளும். என்னையறியாமலே காலை கண் விழிக்கும் போது,
மனம் சாய் நாமம் சொல்ல ஆரம்பிக்கும். ஒருவிதமான லயம் தொடங்கி விடும்.யார் பேசினாலும்
மறு பேச்சு இல்லை.நிதானம், கவனம் என தொடரும். நல்ல நேர்மறையான அதிர்வு இருக்கும்.அன்று பூராவும் மனசும்,உடம்பும் லேசாக இருக்கும்.
நம்முள் பயணம்
என்பதால் நம் விமர்சனத்தை…. பார்க்கலாம், கேட்கலாம். சிலதை சேர்க்க முயலலாம், சிலதை
வெட்ட முயலலாம்…..ஆனா… அது அவ்வளவு சுலபமில்லை. ஒரு பார்வையாளனாய் இருந்து கொண்டே….இருக்க
நாளாவட்டத்தில் களைகள் ஒன்று ஒன்றாய்…..விழ வாய்ப்பு இருக்கிறது.
முயற்சி தெடர்ந்து….கொண்டே
இருக்கும்…..!
முயற்சி இன்றி
தானே தொடரும்….!
தான் தானாகவே
இருக்கும்……!
மெளன விரதம்னு எவ்வளவு
பேச்சு
இல்ல….!
அதாங்க
நிஜம்.
ஆர். உமையாள்
காயத்ரி.
ம்.ம்ம் சிறந்த ஒரு தியானம் என்றே நான் சொல்வேன் மெளன விரதத்தை.முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை.முயற்சி தொடரட்டும்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆம் சிறந்த தியானம் தான்.வாழ்த்துக்களுக்கு நன்றி ப்ரியசகி.
ReplyDelete