குற்றாலம்
நான் வரைந்த எண்ணை ஓவியம்
வெள்ளருவிப்
புகைப்படம்…
வெறுமை
வந்து
சூழ்கிறதம்மா
…
தூள்ளித் திரிந்த
காலம்
துயரமாய்
...
நிழலாடுகிறதம்மா
…
வாரம் தவறாமல்
வந்த
கதை சொல்கிறது ..!
எண்ணைய் பசை
போன கதை
என்னைப் பிசய வைக்கிறது
மூச்சடக்கி
நிற்பேன் …
பஞ்சாய்
தலை பறக்க _
நினைக்கிறேன்
… !
பஞ்சாய் தலை
பறக்க
பாதி
வயதை உள்ளடக்கி … !
இப்போதோ
_
இருவருக்கும்
ஆனந்தம் …
அணைப்பது நான் மட்டும்
அல்ல
…
அருவியும்
தான் … !
இருவரின்
ஆனந்தக் கண்ணீர் _
இணைந்தே
ஓடுகிறதம்மா …!
உடல் குறுகினாலும்
உன்
நினைவு குறையாது …
தாய் தந்தையுடன்
தாலாட்டியது
… நீயும் அல்லவா … !!!
ஆர். உமையாள் காயத்ரி.
நீங்க வரைந்த ஓவியத்திற்கு,நீங்களே கவிதை எழுதுவது எவ்வளவு மகிழ்ச்சி. எத்தனை பேருக்கு இப்படித்திறமை இருக்கும்.நீங்க ஒரு சகலகலாவல்லிதான். சந்தேகமே இல்லை.இத்திறமைகளை விட்டுடாதீங்க.மேலும் வளர்த்துக் கொள்ளுங்க.வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅப்படி எல்லாம் இல்லை ப்ரியசகி நன்றி.
ReplyDeleteஅன்பு தமிழ் உறவே!
ReplyDeleteவணக்கம்!
இன்றைய வலைச் சரத்தின்,
திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
"மழை" யில்
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துகள்!
வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
உவகை தரும் உமது பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
(குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)