Monday, 4 November 2013

Pineapple Rasam Chettinad Style வாங்க அப்பச்சி சாப்பிடலாம்

செட்டி நாட்டு விருந்து
அன்னாசிப்பழ ரசம்




                         பார்வைச் சுவை இங்கே….!!!


                         படைத்து சுவை அறிக……...!!!


தேவையான பொருட்கள்
அன்னாசிப்பழத் துண்டுகள் _ 1 கோப்பை
துவரம் பருப்புத் தண்ணீர் _ 2 கோப்பை
பெரிய தக்காளிப் பழம் _ 1
பச்சை மிளகாய் பெரியது _ 1
புளி _ சிறிய எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி _ ¼ தேக்கரண்டி
மிளகு,சீரகப் பொடி - 1/2 தேக்கரண்டி
எண்ணை _ 1 மேசைக்கரண்டி
உப்பு _ தேவையான அளவு
வெல்லம் _சிறிதளவு
கருவேப்பிலை  _ சிறிதளவு
கொத்தமல்லி _ சிறிதளவு
எலுமிச்சை _ ½ பழம்



தாளிக்க தேவையானவை
நெய் - 1 தே.க
கடுகு - 1/4 தே.க                   
மிளகு - 1 1/4 தெ.க
சீரகம் - 1/2 தே.க
பெருங்காயம் - சிறிது
வர மிளகாய் -  1

வாணலியில் எண்ணை விட்டு சூடானவுடன் தக்காளி,பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பின் புளித்தண்ணீரை விடவும். சாம்பார் பொடி, மிளகு,சீரகப் பொடி போடவும். புளியின் பச்சை வாசனை போன பின் அன்னாசிப்பழத் துண்டுகளைப் போடவும். 1 நிமிடம் ஆன பிறகு பருப்பு தண்ணீர் விட்டு, உப்பு, வெல்லம், கொத்தமல்லி, கருவேப்பிலை போடவும். தேவையான தண்ணீர் ஊற்றி முதல் கொதி வரவும் இறக்கவும். பின் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.  நெய்யில் தாளித்துக் கொட்டவும்.
 
அன்னாசிப்பழ ரசம் ரெடி.




5 comments:

  1. Super. It was a hit on my party.Thanks.

    ReplyDelete
  2. மிகவும் அருமையான, ஆரோக்கியமான சூப். (சாத்தமுது)

    ReplyDelete
  3. என் பேவரிட் பழம்.அதில் ரசம்.கேள்விப்பட்டிருக்கேன்.செய்ததில்லை.உங்க முறையை முயற்சிக்கலாமே எனும் எண்ணம்.சொல்கிறேன் செய்தபின்.நன்றி

    ReplyDelete
    Replies
    1. ருசியுங்கள்....! நன்றி.

      Delete