Saturday, 16 November 2013

செட்டி நாட்டுக் காய்கறி ஊறுகாய்




 
ஊறுகாய் என்றாலே ஒரு காத தூரம் ஓடுகிறார்கள் மக்கள். காரணம் என்ன ?

உடல் பற்றிய விழிப்புணர்வு. பச்சை காய்கறி சாலட் போல இது பச்சை காய்கறி ஊறுகாய்.

ஆகையால் அவ்வப்போது செய்து உண்டு மகிழ்ந்து, உங்கள் பொன்னான விமர்சனங்களை எனக்கு அனுப்பி வைக்க மறவாதீர்.

தேவையான பொருட்கள்

கேரட் - 1 கோப்பை                 உருளைக்கிழங்கு -  1 கோப்பை
காளிப் ஃபிளவர் - 1/2 கோப்பை
பச்சைப் பட்டானி -1/2 கோப்பை
எலுமிச்சை - 2 பழம்

மிளகாய்ப் பொடி - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு -  1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்  - சிறிதளவு
நல்லெண்ணைய் - 2 மேசைக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு

கேரட், உருளைக்கிழங்கு,  இவற்றைச்  சிறிய  சதுர  துண்டுகளாக  நறுக்கிக் கொள்ளவும்.  காளி ஃபிளவர்  இதையும்  சிறியதாக நறுக்கி உப்புத்தண்ணீரில் சிறிது நேரம் வைத்துவிட்டு வடிகட்டி கொள்ளவும். பிறகு எல்லா காய்கறிகளையும் ஒரு பாத்திரத்தில் போட்டு மிளகாய்ப் பொடி, மஞ்சள் தூள் ,உப்பு, எலுமிச்சை சாறு போட்டு கலக்கவும். பாத்திரத்தை வேஷ்டித் துணி கொண்டு மூடி வைக்கவும்.  அவ்வப்போது கலக்கி விடவும். 24 மணி நேரம் கழித்து தாளிக்கவும்.                                                         இப்போது சுவையானதும், சத்தானதுமான செட்டி நாட்டுக் காய்கறி ஊறுகாய் ரெடி.


ஆர் உமையாள் காயத்ரி.


2 comments:

  1. எங்க ஊர்ல அச்சாறுன்னு சொல்வாங்க.அது மாதிரி இருக்கு.
    உங்க குறிப்பு ஈசியாவும் இருக்கு.

    ReplyDelete