Wednesday 13 April 2016

இட்லி சாம்பார்






தேவையான பொருட்கள்
து.பருப்பு – 2 மே.க
மஞ்சள் தூள் – சிறிது
பொருங்காயம் - சிறிது
எண்ணெய் – 1¼ தே.க
சின்ன வெங்காயம் - 8
கேரட் – ½
பீன்ஸ் – 3
சிறிய உருளைக்கிழங்கு – 1
கத்தரிக்காய் – 1
ப.மிளகாய் – 2 அ 4
தக்காளி – 1
புளி – சிறிய எலுமிச்சையளவு
உப்பு – ருசிக்கு
கருவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது

(முருங்கை காயும் சேர்த்துக் கொள்ளலாம். கைவசம் இல்லாததால் சேர்க்கவில்லை)


தாளிக்க வேண்டியவை
எண்ணெய் – 2 தே.க
கடுகு – ¼ தே.க
சீரகம் – ½ தே.க
வரமிளகாய் – 1





துவரம் பருப்பில்  மஞ்சள் தூள்,பெருங்காயம்,1/4 தே.க எண்ணெய் விட்டு  சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.



எண்ணெய் விட்டு வெங்காயம், ப.மிளகாய்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.




பின் காய்களை சேர்த்து வதக்கவும்.

வதக்கிய காய்களை பருப்புடன் சேர்த்து, புளி கரைசலையும் ஊற்றி, உப்பு சேர்த்து 2 விசில் விடவும்.

மல்லி சேர்த்து, பின் தாளித்து போடவும்.




                                                                   இட்லி சாம்பார் ரெடி






12 comments:

  1. இந்த முறையிலும் ஒருமுறை செய்து பார்த்து விடுவோம்.

    கேரட் போட்டால் இனிப்புச் சுவை வந்து விடும் என்று போட மாட்டோம். ஆனால் சிலர் பரங்கிக்காய் கூட சேர்ப்பார்கள், இல்லையா?

    புளி சேர்க்காமல் தக்காளியின் புளிப்பிலேயே செய்யலாம் இல்லையா? ஏனென்றால் புளி சேர்த்தால் சாதத்துக்குப் பிசைந்து கொள்ளும் சாம்பார் போல தோன்றும்!

    ReplyDelete
  2. சுவையான சூடான இட்லி சாம்பார்!..

    அருமை!..

    ReplyDelete
  3. தேவகோட்டை ராம. ஏகம்மை கல்யாண மண்டபத்து கல்யாணத்தில் காலையில் டிஃபன் சாப்பிட்ட நினைவுகள் வந்தது சகோ.

    ReplyDelete
  4. இட்லி சாம்பார் அருமை சகோ. தங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  5. simple and very well explained.

    ReplyDelete
  6. உமையாள் இதுதான் இட்லி சாம்பாரா! ஓ ஓகே ஓகே...நான் செய்வதுண்டு இப்படியே. சாம்பார் பொடி போடாமல். ஆனால் இதை நான் சும்மா பொடியில்லா சாம்பார் என்பேன்.

    அப்புறம் இதோ இப்படியும் இட்லி சாம்பார் செய்வது உண்டு உமையாள். உங்களுக்கும் தெரிந்திருக்கும் நிச்சயமாக. எல்லாம் நீங்கள் இங்கு சொல்லியிருப்பதுதான். பொடி மட்டும் இப்படி: ஒரு பிடி தனியா, இரண்டு பிடி கடலைப்பருப்பு, 10 மிளகாய் வற்றல், 1 ஸ்பூன் வெந்தயம், 1/2 ஸ்பூன் ஜீரகம், 1/2 ஸ்பூன் மிளகு இவற்றை வறுத்துக் கொண்டு பொடி செய்து மேலே சொன்னபடி சாம்பார் செய்து இறுதியில் இங்கு நீங்கள் சொல்லியிருக்கும் அளவிற்கு ஒரு காம்ப்ளான் ஸ்பூன் அளவு பொடி போட்டு கொதிக்கவிட்டு (கொஞ்சம் கொதித்தாலே போதும்..)வாசம் வந்தவுடன் இறக்கிவிடலாம். நன்றாக இருக்கும்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி

    கீதா

    ReplyDelete
  7. ’இட்லி சாம்பாரோ’ அல்லது ’சாம்பார் இட்லியோ’ அல்லது இரண்டுமே ஒன்று தானோ !

    சுவையான பதிவுக்கு பாராட்டுகள் + நன்றிகள்.

    ReplyDelete
  8. எங்கம்மா அருமையா சாம்பார்
    சமைப்பாங்க.....
    ஒரு முறை உங்கள் பாணியில்
    இட்லி சாம்பார் சமைத்து
    தர கேட்கலாம்.....

    செய்முறை விளக்கம் அருமை சகோ...

    ReplyDelete
  9. அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
  10. வீட்டில் சொல்கிறேன்!

    ReplyDelete
  11. 1980இல் கோயம்புத்தூரில் பணியாற்றியபோது எனது காலை சிற்றுண்டி இதுவே. அந்நாள்கள் நினைவிற்கு வந்தன. நன்றி.

    ReplyDelete
  12. எத்தனை வந்தாலும் இட்லி சாம்பாருக்கு
    இருக்கிற மவுசு குறையபோவதில்லை/

    ReplyDelete