தேவையானவை
அவரைக்காய் - 1/2 கிலோ
( அகலமான நாட்டு அவரைக்காய் )
உப்பு - தே.அ
அவரைக்காயை கழுவிக் கொள்ளவும்.
குக்கர் (அ) பாத்திரத்தில் அவரைக்காய் மூழ்கும் அளவு தண்ணீரில் உப்பு போட்டு கொதிக்க விடவும்.
அவரைக்காயை சேர்த்து மூடி வேக விடவும்.
வெந்த பின் நீரை வடிகட்டவும்
பிளாட்டிக் பேப்பரில் அழகாக பரப்பி காய விடவும்.
அவரை வற்றல் 4 அ 5 நாட்கள் இப்போது அடிக்கும் வெயிலுக்கு காய்ந்து விடும்.
இதை சாம்பார், மண்டி, சில கெட்டிக் குழம்புகளுடன் சேர்த்து செய்ய உபயோக்கப் படுத்துவோம்.
இதை வைத்து செய்வதையும் பிறகு பதிவுகளாக தருகிறேன்.
குக்கரில் வேக விடுவதாக இருந்தால் 1 விசில் போதும்.
சூப்பர்...எனக்கு இது ரொம்ப புதுசு ஆன்ட்டி.. சின்ன வயதில் எதிர் வீட்டு ஆச்சி பண்ணும் போது பார்த்த ஞாபகம் இருக்கு.. அவரைக்காய் இல்லாதப்போ யூஸ் பண்ணிக்கலாமோ? நல்ல ஐடியா..
ReplyDeleteகோசுமல்லி செய்தேன் நன்றாக இருந்தது.. படம் அனுப்பியிருக்கேன் உங்களுக்கு... :)
அவரைக்காய் இல்லாதப்போ யூஸ் பண்ணிக்கலாமோ? //
Deleteஆமாம் அபி. மற்றும் ஊருக்கு சென்று வந்து காய்கறிகள் வாங்க முடியாத போதும் இது கை கொடுக்கும். இதில் சாம்பார் வாசமாக இருக்கும்.
வருடம் முழுமைக்கும் ஸ்டோர் பண்ணி வைத்துக் கொள்ளலாம்.
உன்னுடைய கோசுமல்லி படத்தை முகநூலில் நீ அனுப்பி இருந்த அன்றே போட்டு இருக்கிறேன் அபி.
இன்னும் இரண்டு செய்து பார்த்த படங்கள் வந்த பின் இதிலும் பதிவாக இடலாம் என்று காத்திருக்கிறேன்.
மிக்க நன்றி
கமெண்டில் போட்டிருக்கவும் எனக்கு காட்டலை ஆன்ட்டி.. இப்போதான் பார்த்தேன்... :)
Deleteஅவரைக் காயில் நார் எடுக்க தேவையில்லையா? அப்படியே போடலாமா?
அவரைக் காயில் நார் எடுக்க தேவையில்லையா? அப்படியே போடலாமா?//
Deleteநார் எடுக்கத்தேவையில்லை. நார் எடுத்து விட்டால் அவிக்கும் போது இரண்டாக வந்துவிடும் ஆகையால் அப்படியே வேகவைத்தால் தான் முழுதாக இருக்கும்.
நன்றாக இருக்கிறது அவரைக்காய் வற்றல்.
ReplyDeleteநன்றி அம்மா
Deleteஅவரை வற்றல் எல்லாம் கோடையில் ஆர்வமாக செய்து பாதுகாப்பாக வைத்துக் கொள்வார்கள்..
ReplyDeleteஇப்போது - !?..
பாக்கெட் வற்றல்களே பிரியமாகிப் போயின..
பயனுள்ள குறிப்புகள்.. மகிழ்ச்சி..
அவரை வற்றல் எல்லாம் கோடையில் ஆர்வமாக செய்து பாதுகாப்பாக வைத்துக் கொள்வார்கள்.//
Deleteஆம் எங்கள் அம்மா இருக்கும் போது விடுமுறைக்கு செல்லும் சமயம் எல்லா வற்றல்களுக்கும் உதவியாக இருப்பேன்.
இப்போது ஒன்று, இரண்டு செய்யவே கஷ்டமாக இருக்கிறது....என்னத்தைச் சொல்ல....
பாக்கெட் வற்றல்களே பிரியமாகிப் போயின.//
ஆம் வாங்கினோமா செய்டோமான்னு ஆச்சு இல்லை:)..
நன்றி ஐயா
பசுமையாகப்
ReplyDeleteபளபளப்பாக
ஈரமனத்துடன்
பார்க்க
இனிமையாக
இருந்த
உங்களின்
அ வ ரை
இப்படிக்
குக்கரில்
அடைத்து
அனலில்
வாட்டி
வதக்கி
வறுத்து
வற்ற
வைத்து
விட்டீர்களே !
இது நியாயமா?
உங்கள் ’அவரை’ நினைத்தால் எனக்கு மனதுக்குக் கஷ்டமாக உள்ளது. இதுதான் பெண்ணாதிக்கம் என்பதாக்கும் ! :)
உங்கள் ’அவரை’ நினைத்தால் எனக்கு மனதுக்குக் கஷ்டமாக உள்ளது. இதுதான் பெண்ணாதிக்கம் என்பதாக்கும் ! :)//
Deleteஅவரைக்காயில் தானே பெண்ணாத்திக்கதை காட்ட முடிகிறது.....:))))
எப்படி இருந்த அவரையை இப்படி ஆக்கிட்டீங்களேன்னு சொல்லுறீங்க....
நியாயம் தான்...
அப்பத்தானே சப்பிட்ட முடியும்...ஹிஹிஹி
நன்றி ஐயா.....
உபயோகமான செய்முறை விளக்கம்.
ReplyDeleteஇந்த வருட விளைச்சலை உற்றாருடன் பகிர்ந்து முடித்தாயிற்று. அடுத்த வருடம் வற்றல் போட்டு வைப்பதாக இருக்கிறேன்.
அடுத்த விளைச்சலில் .....வற்றல் பண்ண என முடிவு செய்தமைக்கு....நன்றி இமா....
Deleteஅவரை வற்றல் நல்லாத்தான் இருக்கு.
ReplyDeleteத.ம.வ.போ
நன்றி சகோ
Deleteசூப்பர் உமையாள்! கொத்தவரைக்காய் போடுவது போல சிறியது கொஞ்சம் ஒல்லியாக இருக்குமே அந்த அவரைக்காய் போடுவதுண்டு. வறுத்தும் சாப்பிடுவதுண்டு. காராமணிக்காயைக் கூட போடுவதுண்டு. நாட்டு அவரைகாய் போட்டுவிட்டால் போச்சு...பகிர்வுக்கு மிக்க நன்றி உமையாள்...
ReplyDeleteகீதா
(முந்தைய கமென்டில் பெயர் போட விடுபட்டுவிட்டது..
ஆம் கொத்தவரங்காயையும் செய்வோம். நாட்டு அவரை வற்றல் மணம் அருமையாக இருக்கும். ஆம் தட்டைப்பயிற்றை சேர்த்தும் செய்வோம். நன்றி கீதா.
Deleteமிகவும் பிடித்தது
ReplyDeleteஆயினும் செய்முறை எங்களுக்குத் தெரியாது
அற்புதமாக படங்களுடன் செய்முறை விளக்கம்
கொடுத்ததற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
அவரையும் கிடைக்கிறது
வெய்யிலும் கொளுத்துகிறது
செய்து பார்த்துவிட வேண்டியதுதான்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வெயிலை வேஸ்ட் பண்ணாமல் செய்திட வேண்டியது தான்.
Deleteநன்றி ஐயா
அருமை. இது செய்வதை விட கொத்தவரை வற்றல் செய்வதுண்டு. ஆனால் சமீப காலங்களில் இரண்டுமே செய்வதில்லை.
ReplyDeleteகொத்தவரை,அவரை, கத்தரி என செய்வோம். ஆன கொத்தவரை மட்டும் நானும் போடலை. மற்ற இரண்டும் ஜனவரியில் செய்தேன். பதிவு போட காலதாமதம் ஆச்சு.....:)
Deleteநன்றி ஶ்ரீராம்
தம +1
ReplyDeleteஅருமையான செய்முறை
ReplyDeleteஅம்மா கிட்ட செய்து தர
கேட்கணும் இதன்
ருசி எப்படி இருக்குமென
அறிய வேண்டும்....
செய்முறை விளக்கம்
அளித்தமைக்கு நன்றி சகோ...
அம்மாவின் கரங்களில் செய்து ஆனந்தமாக சாப்பிட்டுப் பாருங்கள் சகோ.
Deleteஇதன் ரெஸிப்பிக்களையும் பிறகு தருகிறேன். நன்றி
பொதுவாக வற்றலை அனைவருமே ரசிப்பர். தங்கள் பதிவு அந்த ரசனையை மிகைப்படுத்தியது.
ReplyDelete