தேவையான பொருட்கள்
தட்டப்பயறு
– 1 கை பிடி
அவரைவற்றல்
– 1 கை
கத்தரிவற்றல்
– 1 கை
கூழுவற்றல்
– 1கை
மாவற்றல் -
7
புளி – எலுமிச்சை
உப்பு - ருசிக்கு
பச்சைமிளகாய்
– 3 அ 5
சின்ன வெங்காயம்
– 15 அ 18
அரிசி கழுவிய
நீர் – 2 கோப்பை
தாளிக்க
வேண்டியவை
எண்ணெய் – 3 மே.க
வரமிளகாய்
– 1 அ 2
கடுகு – ½ தே.க
உ.பருப்பு
– ¾ தே.க
க.பருப்பு
– ¾ தே.க
சீரகம் – ½
தே.க
கருவேப்பிலை
– சிறிது
செய்முறை
எல்லா வற்றல்களையும்
ஒரு அலசு அலசி விட்டு சிறிது தண்ணீர் சேர்த்து ஊறவிடவும்.
தட்டப் பயற்றை
முதல் நாளே ஊறப்போட்டு விட்டு, இப்போது உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
தாளிக்கவும்.
பச்சைமிளகாயை வாசம் வர வதக்கவும்.
வற்றல்களையும் சேர்த்து விட்டு
புளிக்கரைசலைவிடவும்.
வற்றல்களில்
உப்பு உள்ளதால் பார்த்து சேர்க்கவும். அதே போல் மாவற்றலிலும் புளிப்பு இருப்பதால் புளியின்
அளவையும் பார்த்துக் கொள்ளவும்.
ஒருவிசில் விட்டு
இறக்கவும். பின் கெட்டியாக இருக்கும் அரிசி கழுவிய அடி நீரை சேர்த்து ஒரு கொதி வரவும் இறக்கவும்.
செட்டி நாட்டு கல்யாண வீடுகளில் இட்லிக்கு தொட்டுக் கொள்ளவென்று இந்த
இட்லி மண்டி வைப்பார்கள்
ஆஹா படமே அருமையாக இருக்கின்றதே பெருமூச்சு மட்டுமே விட முடியும்
ReplyDeleteதமிழ் மணம் 1
வரும் போது அம்மாவிடம் சொல்லி சாப்பிட்டு விடலாம் சகோ நன்றி
Deleteஇட்லி மண்டியா
ReplyDeleteநான் இப்பதான் இது பத்தி
தெரிந்து கொள்கிறேன்...
எங்கள் வீட்டில் இட்லி
என்றால் சாம்பார்,சட்னிதான்
இல்லை என்றால் மூக்குப்பொடிதான்...
இடலி மண்டி அருமையா இருக்கும் போலையே...!!
சமைத்து பார்க்கலாம்...
எங்கள் வீட்டில் இட்லி
Deleteஎன்றால் சாம்பார்,சட்னிதான்
இல்லை என்றால் மூக்குப்பொடிதான்..//
மூக்குப்பொடி.....போட்டு சாப்பிடாம சமாளித்து விடுவீர்களோ....:))
நன்றி சகோ
அருமையான இட்லி மண்டி. நான் தேவகோட்டை செட்டிநாடு கல்யாண வீடுகளில் சாப்பிட்டு இருக்கிறேன். செட்டி நாடு குடும்ப நண்பர் வீடுகளில் சாப்பிட்டு இருக்கிறேன்.
ReplyDeleteசெய்முறை விளக்கம் அருமை.
நன்றி அம்மா
Deleteஇட்லி மண்டி என்பதை இப்போதுதான் அறிந்தேன்.
ReplyDeleteஇட்லிக்கு
ReplyDeleteசாம்பார், ஷட்னி என்றாலும்
இட்லிக்கு மண்டி என்றும்
ஒன்றுண்டு என நன்றே
செய்முறையோடு வழிகாட்டினீர்கள்!
ஆமாம்.. செட்டிய வீட்டு விஷேசங்களில் சாப்பிட்டிருக்கிறேன்...
ReplyDeleteஅருமையாக இருக்கும்.
தட்டைப் பயறு.. காரமணிப் பயறு என்பதுவும் இதுதானே!..
ReplyDeleteநல்லதொரு குறிப்பு.. வாழ்க நலம்..
இரண்டும் ஒன்றுதான் ஐயா...
Deleteகீதா சொல்லி விட்டார்கள்...ஆம்..ஒன்று தான்
Deleteநன்றி ஐயா
ரசம் சாம்பாஇல் பருப்புடன் மிச்சமாதைத ரசமண்டி சாம்பார் மண்டி என்று கூரக்கேட்டிருக்கிறேன் இட்லி மண்டியும் அதுபோல் ஏதாவது மிச்சமானதைச் சேர்த்து செய்வது என்று நினைத்தேன் செட்டிநாட்டு மண்டி கேள்விப்படாதது
ReplyDeleteஹப்பா புதிய சமையல் குறிப்பு!! ஹிஹிஹி (இல்ல எப்பவும் நான் ஏதாவது இதே அதே இது அது என்று டிப்ஸ் என்று கொடுப்பேனா அதான்.....)குறித்துக் கொண்டுவிட்டேன்...பகிர்வுக்கு மிக்க நன்றி
ReplyDeleteகீதா
உங்களுக்கு...எல்லா குறிப்புகளும் அத்துபடி சகோ. அப்பாடா....தெரியாத ஒன்னு சொல்லிட்டேன்:) நன்றி கீதா
Deleteவெல்ல மண்டி ,வெங்காய மண்டி இருப்பது தெரியும் ,இட்லி மண்டி இருப்பது இப்போதான் தெரிகிறது :)
ReplyDeleteஆஹா....4 மண்டி ...வந்து விட்டது மேலே...ஐயா 2, நீங்க இப்போ 2 .....நான் ஒன்னு...5 ஆச்சு..:)
Deleteவித்தியாசமான பதிவு சகோ.
ReplyDeleteநன்றி சகோ
Deleteபுதுமையான பேர் இட்லிமண்டி.செய்து பார்க்கின்றேன்))
ReplyDeleteவாங்க சகோ.....செய்து பார்த்து ருசியுங்கள்...நன்றி
Delete