ஆனந்தமாய்...!
குஞ்சு பொரிக்க விடவில்லை...
அவசரமாய்...!
இயந்திரத்தில் பொரிக்கிறார்கள்...
தாய்யரியாக் குஞ்சு !
குஞ்சறியா தாய் !
முட்டையிடும் பணி தாய்க்கு
அவ்வளவே...
வாழ்வின் தொடக்கம்
வியாபரச் சந்தையிலே...
தாய் கோழிகள் குஞ்சுகளை
தன் வழி நடத்திச் சென்று
தன் இடமாம் குப்பை மேட்டை
கலக்கி உண்டு விளையாடி...
கும்மாளமிட்ட தெல்லாம்...?
வெறிச்சோடி போயினவே...
கழுகரசன் நிழல் கண்டு
தன் இறக்கையில்
குஞ்சணைத்து -
பகைவர்கள் உண்டென
கற்ப்பிக்கும் வித்தையென்ன...!
பெருமை நடை போடும்
தாயின் பின்
குட்டிகளின் சிறுநடையும்
கொக்...கொக்...என
பரிவார முழக்கம் எங்கே...?
15.12.2010 இல் எழுதிய கவிதை இது.
பரிவாரம் எல்லாம் பக்குவம் தவறாமல்
ReplyDeleteபிரியாணியாக குருமாவாக கொல்லைப்புற
அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கின்றதே!..
(பாவம்... கோழிக்கும் குடும்பம் உண்டு தானே!)
பரிவாரம் எல்லாம் பக்குவம் தவறாமல்
Deleteபிரியாணியாக குருமாவாக கொல்லைப்புற
அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கின்றதே!//
அமாம் ஆமாம்....
(பாவம்... கோழிக்கும் குடும்பம் உண்டு தானே!)//
அதானே....
வெளியுலகம் பார்க்காமலே மனித வயிறுக்குள் அடக்கமாகி விடுகின்றன பிராய்லர் கோழிகள் ,பாவம்தான் !இதற்குத்தான் கோழி குருடாயிருந்தாலும் குழம்பு ருசியா இருக்கணும்னு சொல்றது :)
ReplyDeleteவெளியுலகம் பார்க்காமலே மனித வயிறுக்குள் அடக்கமாகி விடுகின்றன பிராய்லர் கோழிகள் ,பாவம்தான்//
Deleteபிராய்லர் கோழிகள் பாயில் ஆகிவிடுகின்றன....
வெளியுலகம் பார்க்காமலே மனித வயிறுக்குள் அடக்கமாகி விடுகின்றன பிராய்லர் கோழிகள் ,பாவம்தான்//
Deleteபிராய்லர் கோழிகள் பாயில் ஆகிவிடுகின்றன....
மறுபதிப்பு என்றாலும் மனம் கவர்ந்த கவிதை!
ReplyDeleteமறுபதிப்பு இல்லை ஐயா
Deleteமுன்பு எழுதியது இப்போது பதிவிட்டு இருக்கிறேன் ஐயா
மனிதன் அவசரம் அவசரமாய்
ReplyDeleteஇயற்கையில் செயற்கை
செய்கிறான் அதனால்தான் என்னமோ
சீக்கிரமாய் இயற்கை எய்கிறான் போல....
வாஸ்தவம் தான் அஜய்
Deleteகழுகரசன் நிழல் கண்டு
ReplyDeleteதன் இறக்கையில்
குஞ்சணைத்து -
பகைவர்கள் உண்டென
கற்ப்பிக்கும் வித்தையென்ன...//
அருமையான கவிதை.
காலம் மாறி போச்சு.
கிராமங்களில் சில இடங்களில் பரிவாரமுழக்கம் பார்க்க முடிகிறது.
அதிகமாய் இல்லை.
கிராமங்களில் சில இடங்களில் பரிவாரமுழக்கம் பார்க்க முடிகிறது.//
Deleteநாம் பார்த்தோம்...ஆனால் வருங்காலப் பிள்ளைகள் பார்க்க முடியாது என ஏக்கம் எனக்குண்டு
பாவம்.... இதுதான் இயந்திர வாழ்வு!
ReplyDeleteஆம் ஶ்ரீராம்
Delete//தாய்யரியாக் குஞ்சு !
ReplyDeleteகுஞ்சறியா தாய் !
முட்டையிடும் பணி தாய்க்கு
அவ்வளவே...
வாழ்வின் தொடக்கம்
வியாபரச் சந்தையிலே...//
சூப்பரான இந்த வரிகள் .... என் மனதைக்கலங்க வைக்கின்றன.
மிகவும் அழகான சிந்தனை. அற்புதமான ஆக்கம். பொருத்தமான படங்கள். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா
Delete//ஆனந்தமாய் !
ReplyDeleteகுஞ்சு பொரிக்க விடவில்லை
அவசரமாய் ! //
இயந்திரத்தில் பொரிக்கிறார்கள்
முதல் வரியே அருமை சகோ முழுக்க முழுக்க வேதனையைத் தந்த வரிகள் கவிதை நன்றாகத்தானே எழுதுகின்றீர்கள் அதுவும் 2010 தில் எழுதியது வாழ்த்துகள் சகோ தொடருங்கள் எனக்கும்கூட கவிதை எழுதும் ஆசைகள் பிறக்கின்றது 100 வகைகளாய்....
த.ம.வ.போ
நீங்கள் தான் அசத்தி தள்ளுகிறீர்களே சகோ...நிறைய எழுதுங்கள்....
Deleteஅருமையான வரிகள் சகோ/உமையாள்...ஆம் பரிவார முழக்கம் எங்கே??!!! எல்லாம் கூண்டுக்குள்ளே!!
ReplyDeleteஎல்லாம் கூண்டுக்குள்ளே!!//
Deleteஆமாம்...சகோ
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் இரசித்தேன் வாழ்த்துக்கள் த.ம9
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாருங்கள் ரூபன் நன்றி
Delete