Saturday 20 February 2016

காணல் பனி...!!!



மழைவந்து ஓய்ந்ததடி மயிலே
பனி வந்து செல்லவிருக்கிறதடி கிளியே

புழுதி வந்து சுத்துதடி மயிலே
புண்ணாகிப் போகுது மூக்கு கிளியே

நிறம் மாறிப் போகுதடி மயிலே
பாண்ட்ஸ் போட தேவையில்லை கிளியே

தலையில் எண்ணை வைத்தாலும் மயிலே
தம் பிடித்து நிற்க்குதடி கிளியே

மூச்சுக்கு சவால் மயிலே
முன்னேறிப் போவதெப்படி கிளியே

மதிய வெயில் தலையிலடிக்க மயிலே
காணல் பனிப்புகை மறைக்குதடி கிளியே

தார்ச்சாலை பாதியில் நிற்க்குதடி மயிலே
மனம்வந்த சாலையின் மறுபாதி எப்போ கிளியே

பத்து நிமிடம் அசையாது நிற்க மயிலே
சிலை வடிக்கும் கேளம்பாக்கம் கிளியே








படம் கூகுள் நன்றி

என்ன செய்வது வருத்தத்தை கவிதையாகச் சொல்லி தேற்றிக் கொள்ள வேண்டியது  தான்.

முடியலைடா சாமி....எப்போ ரோடு போட்டு நிம்மதியா மூச்சு விட்டு போக முடியும்ன்னு இருக்கு....கடந்து செல்லவே உடல் களைத்து விடுகிறது.

பாதுகாப்புக் கவசம் தலை மற்றும் மூக்கிற்கு போட்டு வேர்த்துக் கொட்டி, மூச்சு முட்டி....

நொந்து நூடில்ஸ் ஆகிடுவோம் போல....




23 comments:

  1. காணல் பனி அனுபவம் உணர்ந்தேன். நன்றி.

    ReplyDelete
  2. சுற்றுச்சூழலின் அவலம் - வேதனையான கவிதையாக வெளிப்பட்டுள்ளது..
    என்று தீரும் இந்த துன்பம் என்றிருக்கின்றது..

    ReplyDelete
  3. மிகவும் வெறுக்கும் சூழல்
    ஆயினும் கவிதை மனதை மயக்கும்படியாய்...
    மிகவும் இரசித்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நெருப்பில் பூத்த மலர் போல்
    புழுதியில் பூத்த கவிதை அருமை

    ReplyDelete
  5. கவிதை அருமை...

    ReplyDelete
  6. பொருத்தமான வரிகள் அருமை சகோ
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  7. காணல் பனி...!!! என்ற தலைப்பில் மயிலே, குயிலே என்று முடியும் பாடல் வரிகளில் தங்களின் அன்றாட போக்குவரத்து சிரமத்தினை நன்கு உணரமுடிகிறது. சோகத்தில் பிறந்துள்ள ஆக்கத்திற்குப் பாராட்டுகள். சாலைகளின் நிலைமை விரைவில் சரியாக வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. தேர்தல் அறிவிப்பு வருவதற்குள் வேலை முடிந்து விடும் என்று மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள் :)

    ReplyDelete
    Replies
    1. ஆம் அப்படித்தான் நம்பி இருக்கிறேன்

      Delete
  9. மயிலும் கிளியும் சொல்லும் வேதனை அனுபவங்கள்!

    ReplyDelete
  10. சென்னை திருந்தப் போவதில்லை....அது சரி தேர்தல் நெருங்கும் சமயம் ரோடு போட்டு கோடு போடப் பார்க்கறாங்க போல..முன்பை விட இப்போது தூசி ரொம்ப அதிகமாகிவிட்டது உமையாள். வெளியில் சென்றுவந்தால் நம்மையே தூசி அப்பி விடுகின்றது! மூக்கு அடைத்து விடுகின்றது. வண்டி கொஞ்ச நேரத்திலேயே தூசி அப்பிவிடுகின்றது....முடியலைடா சாமி...சுத்தமான பூமி வேண்டும் !!!

    ReplyDelete
  11. சென்னை திருந்தப் போவதில்லை....அது சரி தேர்தல் நெருங்கும் சமயம் ரோடு போட்டு கோடு போடப் பார்க்கறாங்க போல..முன்பை விட இப்போது தூசி ரொம்ப அதிகமாகிவிட்டது உமையாள். உங்கள் வேதனை தெரிகின்றது. வெளியில் சென்றுவந்தால் நம்மையே தூசி அப்பி விடுகின்றது! மூக்கு அடைத்து விடுகின்றது. வண்டி கொஞ்ச நேரத்திலேயே தூசி அப்பிவிடுகின்றது....முடியலைடா சாமி...சுத்தமான பூமி வேண்டும் !!!

    கீதா

    ReplyDelete
  12. உண்மை ...அப்பா.. இந்த தூசியில் சென்று வருவதே ..பெரும் பாடு...

    ReplyDelete