தாயற்ற வீடு
தவம் செய்கிறது நான் வர
சில மணி நேரங்கள்
மெளன பாஷை பரிமாற்றங்கள்
மனம் மலர்ந்திருக்க
மலர் முகம் தானே விரிந்திருக்க
பயம் ஏனோ கரைந்து போக
பலம் ஏனோ அரியாசனம் ஏற
பெற்றோருடன் வசித்தது போலுணர்வு
உயிரற்ற வீடு என யார் சொன்னது
உள்ளுணர்வு உறவாடிய மறையுயிர்
உலாவும் அதை மனக் கண்ணேயறியும்
//உயிரற்ற வீடு என யார் சொன்னது//
ReplyDeleteஅதானே...
அருமை. சமீபத்தில் தஞ்சை / மதுரை சென்றபோது நாங்கள் குடியிருந்த வீட்டைப் பார்த்து வந்தோம்.
வாழ்ந்த வீட்டை பார்க்கையில் அது நம் வசந்தத்தை நினைவு படுத்துகிறது இல்லையா...
Deleteகுடிகொண்டிருக்கும் வீடுகள் மனிதர்களைச்சுமந்தும், குடி கொண்டிருந்த வீடுகள் அவர் நினைவு சுமந்துமாய் உயிருடனேயே இருக்கிறது,
ReplyDeleteஆம் சகோ முற்றிலும் உண்மை
Deleteஅருமை.... பாராட்டுகள்.
ReplyDeleteநன்றி சகோ
Deleteஉயிரற்ற வீடு என யார் சொன்னது
ReplyDeleteஉள்ளுணர்வு உறவாடிய மறையுயிர்மர்மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் ந ல்வாழ்த்துக்கள்
நன்றி ஐயா
Deleteகுடிகொண்டிருக்கும் வீடுகள் மனிதர்களைச்சுமந்தும், குடி கொண்டிருந்த வீடுகள் அவர் நினைவு சுமந்துமாய் உயிருடனேயே இருக்கிறது,//
ReplyDeleteவிமலன் கருத்தை வழி மொழிகிறேன்.
கவிதை அருமை உமையாள். வாழ்த்துக்கள்.
நன்றி அம்மா
Deleteஉணர்வுபூர்வமான கவிதை...
ReplyDeleteமனம் நெகிழ்கின்றது... வாழ்க நலம்!..
நன்றி ஐயா
Deleteஅருமை சகோ உயிரோட்டமான வரிகள்
ReplyDeleteதமிழ் மணம் 5
ஆஹா தேவகோட்டை வீடு இந்த முத்தத்தில்தானே திருமணம் நடக்கும் இன்று எல்லோரும் மஹாலை நாடி விட்டார்கள்
ஆம்..
Deleteசிலர் இப்போதும் வீட்டிலேயே திருமணத்தை நடத்துகிறார்கள்
சிலர் மண்டபத்திற்கு செல்கிறார்கள்...
நன்றி சகோ
உணர்ச்சியுடன் கூடிய அருமையான எண்ணங்கள் பிரதிபலிக்கும் வீடு உங்கள் கவி வடிவில்..
ReplyDelete