தேவையான பொருட்கள்
தேங்காய் சிறியது - 1/2 மூடி
மிளகாய் - 3 அ 4
புளி - சிறிய நெல்லி அளவு
உப்பு - ருசிக்கு
எண்ணெய் - 1 தே.க
தாளிக்க வேண்டியவை
எண்ணெய் - 1அ 2 மே.க
கடுகு - 1/2 தே.க
உளுத்தம் பருப்பு - 1மே.க
பெருங்காயம் - சிறிது
கருவேப்பிலை - சிறிது
கடாயில் எண்ணெய் விட்டு மிளகாயை கருக்காமல் சிவக்க வறுத்து எடுக்கவும்.
தேங்காய் + புளி சேர்த்து சிறிது வதக்கி எடுக்கவும்.
தாளித்து தனியாக வைக்கவும்
ஆறவும் உப்பு சேர்த்து அரைக்கவும்.
தேவைபட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
தாளித்ததை சேர்த்து 2 சுற்று சுற்றி எடுக்கவும்.
பொரித்து கொட்டிய தேங்காய் துவையல் ரெடி
இட்லி,தோசை, புளியோதரை, தயிர் சாதம், எலுமிச்சை சாதம்,பொங்கல் இவற்றிற்கு பொருத்தமாக இருக்கும்.
தண்ணீர் சேர்க்காமலும், கைபடாமலும் இந்தத் துவையலை செய்து பிரயாணத்தின் போது எடுத்துக் கொண்டு செல்ல 2 நாட்கள் வரை கொடாமல் இருக்கும்.
புகைப்படம் மலையாளிகள் வைக்கும் சம்மந்தி போல அழகாக இருக்கின்றது சகோ.
ReplyDeleteஅப்படியா...நன்றி சகோ
Deleteதமிழ் மணம் சுற்றிக்கொண்டே இருக்கின்றது மீண்டும் வருவேன்
ReplyDeleteசரி சகோ
DeleteVery good and simple to make, Thank you
ReplyDeleteசெய்வோமே நாங்களும் அடிக்கடி!
ReplyDeleteநன்றி சகோ
Deleteநன்றாக இருக்கின்றது.. செய்முறையும் படங்களும்!..
ReplyDeleteநன்றி சகோ
Deleteநாங்களும் செய்வோம், பயணத்தின் போதும் வெண்பொங்கல் செய்த அன்றும் செய்வோம். பச்சைமிளகாய் வதக்கியும் செய்வோம். துவையல் படம் அழகு.
ReplyDeleteநன்றி அம்மா
Deleteமலையாளத்தில் பொரித்துக் கொட்டுவது தாளிப்பதைக் குறிக்கும்
ReplyDeleteஓ..அப்படியா ஐயா...நன்றி
Deleteபொரிச்ச துவையல் என்பார்கள்! எனக்கும் மிகவும் பிடிக்கும்! நன்றி!
ReplyDeleteசெஞ்சு பாக்றேன்.. நன்றி அம்மா ... https://ethilumpudhumai.blogspot.in/
ReplyDeleteநன்றி சகோ
Deleteதுவையலை ருசித்தோம்.
ReplyDeleteநன்றி சகோ
Deleteஇதைத்தான் தேங்காய் துகையல் என்று சொல்லி நாங்கள் பயணத்தின்போது தயிர் சாதத்துடன் எடுத்துச்செல்வோம். அரிசி உப்புமாவுக்கு இது ரொம்ப அருமையாக இருக்கும்.
ReplyDeleteநன்றி சகோ
Deleteநல்ல குறிப்பு. நானும் செய்வதுண்டு.
ReplyDeleteநன்றி சகோ
Deleteஅருமையான பதிவு
ReplyDeleteஇதோ மின்நூல் களஞ்சியம்
http://ypvn.myartsonline.com/
நன்றி சகோ
Deleteஅடிக்கடிச் செய்வதுண்டு தேங்காய் துவையல் என்று சொல்லுவோம்....
ReplyDeleteகீதா