Saturday, 18 June 2016

கரகரப்பான இனிப்பு சிவப்பு அவல்









தேவையாபொருட்கள்

சிவப்பு அவல் – 1 கப்
சுகர் – 3 – 5 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ் பூன்






வாணலியில் நெய் விட்டு சூடாக்கவும்





அவலை போட்டு நிதானமான தீயில் மொறுமொறுப்பாக வறுக்கவும்.




 சூடாக இருக்கும் போதே சுகரை போட்டு கலக்கவும்.

இந்த சூட்டில் சுகர் சற்று கரைந்தும் கரையாமலும் அவல் மேல் ஒட்டிக் கொள்ளும்.

ஆறிய பின் காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.




       கரகரப்பான இனிப்பு சிவப்பு அவல்



நேரம் இருக்கும் போது செய்து வைத்துக் கொள்வதால் காலையில் குழந்தைகளுக்கு கொடுக்க ஏதுவாக இருக்கும். சிவப்பு அவல் மிகவும் நல்லது. அவலில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு நல்ல ஒரு ஸ்நாக்ஸ்.



18 comments:

  1. வெள்ளை சீனி உடலுக்கு நல்லது அல்ல என்பதால் சேர்த்துக் கொள்வதில்லை.. கருப்பட்டி அல்லது வெல்லம் தான் இஷ்டம்..

    இனிய பதிவு.. வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. கருப்பட்டி அல்லது வெல்லம் தான் இஷ்டம்..//

      அதை சேர்த்துக் கொள்ளுங்கள் ஐயா

      நன்றி

      Delete
  2. எனக்கு திண்ணு பார்க்க நேரம் இருக்கு செய்து பார்க்க வழியில்லை
    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. 5 நிமிஷம் போதும் ஜி செய்து பார்த்திடலாம் ஒரு கை....
      நன்றி

      Delete
  3. நல்ல ஒரு டிப்ஸ். செய்துடுவோம்.

    ReplyDelete
    Replies
    1. எங்க அம்மா செய்து தருவார்கள் இதை...சிறு வயதில் நொறுக்குத்தீனியாக சாப்பிடுவேன்...
      நன்றி சகோ

      Delete
  4. கட்டி அவலை எண்ணெய், அல்லது நெய்யில் வறுத்து எடுத்து பொடித்த சீனியை போட்டு சாப்பிடுவோம்.
    கொஞ்சம் நெய்யில் வறுப்பது நல்லா இருக்கே இந்த முறையில் செய்து பார்த்து விடுகிறேன் நன்றி உமையாள்..

    ReplyDelete
    Replies
    1. எங்க அம்மா செய்து தருவார்கள் இதை...சிறு வயதில் நொறுக்குத்தீனியாக சாப்பிடுவேன்...

      இப்போதும் சில நேரங்களில் சாப்பிடப் பிடிக்கும். செய்து பாருங்கள் அம்மா...நன்றி

      Delete
  5. அவல் என்றதும்
    என் நாவு ஊறுதே!

    சிறந்த வழிகாட்டல்

    http://ypvn.myartsonline.com/

    ReplyDelete
  6. சுலபமாய் இருகிறது...செய்து விடலாம்!

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சுலபம்...நன்றி

      Delete
  7. நல்ல ரெசிபி,இதுபோலான பண்டங்கள் செய்வதைக்கிட்டத்தட்ட மறந்தே போனோம்,
    இதை விட பலமடங்கு விலைகொடுத்து மால்களில் பிள்ளைகளுக்கு பாக்கெட் பண்டங்கள் வாங்கிக்கொடுக்கிற கல்சர் பெருக்கிக்கொண்டோம்.இடை இடையில் லஞ்ச் பாக்ஸீம் வந்து போய்க்கொண்டிருக்கிறது 250 ரூபாய் என,,/

    ReplyDelete
    Replies
    1. இதுபோலான பண்டங்கள் செய்வதைக்கிட்டத்தட்ட மறந்தே போனோம்,//

      ஆம் சகோ...எங்களுக்கு அம்மா செய்து தருவார்கள்...அதான் இப்போது குழந்தைகளுக்கு சிலர் இதை பார்த்து விட்டு செய்து தருவார்கள் என....பதிவிட்டேன்.

      நன்றி

      Delete
  8. அடிக்கடிச் செய்வதுண்டு உமையாள்! பொரியில் காரம் போடுவதுண்டு இல்லையா...அது போன்று பொரியிலும் இப்படிச் செய்வதுண்டு...

    அது போன்று பாதாமை சிறியதாக்கிக் கொண்டு, வால்நட் போன்றவற்றை வாணலியில் சிறிது நெய் அல்லது எண்ணை விட்டு லைட்டாக சற்று மொறு மொறுப்பாவதற்குச் செய்யும் போது அதன் மேலே கொஞ்சம் சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரையைத் தூவி புரட்டினால், ஆறியதும் இனிப்புக் கோட்டட் பருப்புகள் சுவையாக இருக்கும்..

    கீதா

    ReplyDelete