Tuesday 7 July 2015

மதிஉன் வசம் மயங்கிக் கிடக்க வரம் தா





மறவாதிருக்க  உனை மாதவா எனக்கு வரம் தா
மண்ணோடு  உன்  நினைவு கலக்க வரம் தா
மீண்டும் பூக்கில் உன் அடியனாய் பிறக்க வரம் தா
மீளாது உன்சேவை யாற்ற நல்வரம் தா
மனக்கண்ணில் உன்னுரு மறையாதிருக்க வரம் தா
மதிஉன் வசம் மயங்கிக் கிடக்க வரம் தா
மந்திரம் மனமுருட்ட வரம் தா
மா இச்சேய்க்கு நீயாதுமென வரம் தா
மனம் வைத்து நீ மறுக்காது இப்பிறவிக்கு முக்தி தா




 இன்னாள் ஜனித்ததே, உன் தாள் பற்றவே. வேட்கை  தணியாதிருக்க தீ மூட்டுவாயப்பா...!!!



33 comments:

  1. அருமை.

    பிறந்த நாள்? எனில், வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. பிறந்த நாள்? எனில், வாழ்த்துகள்.//

      ஆம் நன்றி

      Delete
  2. வணக்கம் உமையாள்,
    பாவும், பாட்டும் அருமை,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மனம் இப்போதே - மாதவனின் மலரடிகளில்
    மயங்கித் தானே கிடக்கின்றது!..

    கிருஷ்ண.. கிருஷ்ண!..


    ReplyDelete
  4. அருமை...

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. ஓ! பிறந்தநாளா வாழ்த்துகள் சகோதரி! அழகான பாடல்!

    ReplyDelete
  6. தலைப்பைப் பார்த்தவுடனேயே இது இறைவனுக்கானது என்று முடிவு செய்துவிட்டேன்.

    பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. செட்டிநாடு ஸ்நாக்ஸ்உடன் பிறந்த நாள் கொண்டாட வாழ்த்துகள்:)

    ReplyDelete
    Replies
    1. அடடே இப்படி நினைவு படுத்துகிறீர்களே...இங்கு கிடைக்காது....
      நன்றி ஐயா

      Delete
  8. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  9. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    இப்படி ஒரு வரம் அதுவும்
    பிறந்த நாள் அன்று, அந்தப்
    பரந்தாமனைக் கேட்கத் தங்களுக்குத்தான் எத்தனை
    பரந்த மனம் !!
    வேண்டுபவருக்கு வேண்டியதை
    வேண்டும்படி தந்திடவே
    மாதவன் வருவான்
    மறக்காது வருவான்
    மறுக்காது தருவான்

    அவன் தருமுன்னே
    அவனை வேண்டி நீங்கள் பாடும் இல்லை
    உருகி கரையும் வரிகளை யானும்
    கரைவேன்.

    பாகேஸ்வரி ராகத்தில்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  10. பாடல் அருமை
    பிறந்த நாள் வாழ்த்துகள் .

    ReplyDelete
  11. கண்ணனுக்கு அழகிய பாடல்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. வணக்கம்

    அருமையான பாடல்...
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  13. https://www.youtube.com/watch?v=gtzxfnjbRr4
    All may
    Listen to this song in Raag Bhageswari here.

    subbu thatha.
    www.menakasury.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. கேட்டேன் தாத்தா
      நன்றி

      Delete
  14. ஓ பிறந்த நாளா தாமதத்திற்கு மன்னிக்கவும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்1 அருமையான வேண்டுதல் நிச்சயம் கண்ணன் செவி சாய்ப்பான்.

    ReplyDelete
  15. நம் அனைவருக்காகவும் வரம் கேட்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  16. சூலை ஏழினில் சுடர்க் கொடியே
    மலை வேங்கடவன் அருள்படியே
    நிலை புகழொடு பிறப்பெடுத்தீர்!
    கலை சிறப்பொடு சிறந்தே வாழி!
    நல்வாழ்த்துகள் சகோதரி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  17. சூலை ஏழினில் சுடர்க் கொடியே
    மலை வேங்கடவன் அருள்படியே
    நிலை புகழொடு பிறப்பெடுத்தீர்!
    கலை சிறப்பொடு சிறந்தே வாழி!
    நல்வாழ்த்துகள் சகோதரி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete