படம் கூகுள் நன்றி
காலநீரின்
போக்கையும்
வேகத்தையும்
யாரரிவார்...?
திசைகளை
யாரரிவார்...?
வேண்டியதைப் பெறவோ
விதியது என் செய்யுமோ...?
கணக்கில் அடங்காது
கணக்கிட முடியாது
காலம் நம் கையிலில்லை...
மதி...
மாதவன் கையில்
அவனன்றி அசையாது புலப்பட
அவன் தாளில்
அனைத்தையும் விட்டேன்
ஆனந்தமாய் இருக்கிறது...
புரிகிற நொடியில்...
கட்டையானேன்...
காலநீர் வோட்டத்தில்
மிதந்து செல்ல துவங்கினேன்...
பாரமற்ற மரக்கட்டை
சுகமாய் செல்லத் துவங்கியது
ஒன்றுமில்லாததை
தூக்கித் திரிந்தேன்
இத்தனைக் காலம்
அவனின் நடத்துகையில்
பயணத்தை துவங்கி விட்டேன்...
நம் கையில் அனைத்தும் மாயை
நம்பி கையில் அனைத்து உண்மை
மரம் செடி கொடி வானம்
குளிர்ந்த காற்று...
குளிர்ந்த நீரின் ஸ்பரிசம்
மனதின் ஆசுவாசம்
நம்பி கையில் நாம்
நம்பிக்கை...
விழி திறந்தது...
வழி செல்கிறேன்...
வலி அகன்றது...
யானா ஆற்றுகிறேன் என்று
எனக்கே நகை தருமால்
வாழ்வின் சூட்சுமம் கண்டேன்.
எல்லாம் அவன் செயல்.
ReplyDeleteஆம் சகோ...ஆனால் அதைத் தான் அவ்வப்போது மறந்து விடுகிறோம்.
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றி சகோ
Super
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றி சகோ
Delete// நம்பி கையில் நாம்
ReplyDeleteநம்பிக்கை... //
ஆகா...!
Delete// நம்பி கையில் நாம்
நம்பிக்கை... //
உணராமல் விட்டு விடுகிறோம்...அதான்
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றி சகோ
அட!! இன்று இதே தலைப்பில் இரண்டு பதிவுகள்:) கவிதை அருமை தோழி!
ReplyDelete
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றி சகோ
கேட்கவே மிக மகிழ்ச்சியாக ஆச்சரியமாகவும் உள்ளது கேள்விப் பட்டிருக்கிறேன் இது பற்றி.
ReplyDeleteதொடரட்டும் உங்கள் அவா வாழ்த்துக்கள் ....!
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி சகோ.
Deleteநம்பியின் கையில் - நம் நம்பிக்கை!..
ReplyDeleteவாழ்க நலம்!..
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி ஐயா
Deleteவணக்கம்,
ReplyDeleteஅருமையான தலைப்பில் பா வரிகள் அருமை சகோ,
நன்றி.
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ நன்றி
Deleteஇயக்குபவம் அவனே. இயங்குபவர்கள் நாம்.
ReplyDeleteஆம்...ஐயா
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ நன்றி
நம் கையில் அனைத்தும் மாயை
ReplyDeleteநம்பி கையில் அனைத்து உண்மை//
அருமையான கவிதை வாழ்த்துக்கள்.
வாருங்கள் அம்மா...
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
மிக மிக அற்புதம்
ReplyDeleteசுமை அழிக்கும் சூட்சுமம்
சொல்லிப் போன லாகவம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
மனதில் தோன்றியதை எழுதினேன் ஐயா
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
tha.ma 6
ReplyDeleteநன்றி
Deleteஎல்லாம் ஆட்டுவிப்பவன் அவன் தானே கவிதை அருமை!
ReplyDeleteஆம் சகோ ஆனால் அதைத்தான் மறப்பதும் நினைப்பதுமாக கலத்தை நாம் நகர்த்துகிறோம்
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ நன்றி
நன்றாகவே சொன்னீர்கள்! எல்லாம் அவன் செயல்; எல்லாம் நன்மைக்கே – என்று எடுத்துக் கொண்டால் ஏது துயரம்?
ReplyDeleteத.ம.8
எல்லாம் அவன் செயல்; எல்லாம் நன்மைக்கே – என்று எடுத்துக் கொண்டால் ஏது துயரம்?//
Deleteஉண்மையான கூற்று ஐயா.அதை எப்போதும் மறவாமல் இருக்க வாழ்க்கை சுலபமாகிறது..
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
நம் கையில் அனைத்தும் மாயை
ReplyDeleteநம்பி கையில் அனைத்து உண்மை
அழகிய கற்பனை வரிகள்!
நம் கையில் அனைத்தும் மாயை
Deleteநம்பி கையில் அனைத்து உண்மை//
கற்பனை வரிகள் இல்லை ஐயா...மனதின் - சூழ்நிலையில் வந்து விழுந்த வார்த்தைகள் தான் இன்றைய கவிதையாக பூத்தது.
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
தலைப்பும் கவிதையும் சிறப்பு! வாழ்வின் சூட்சுமம் நம்பிக்கைத் தான்! அருமையாக சொன்னீர்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
Deleteஇந்தப் பதிவு நீங்கள் எழுதியதுதானே...இல்லை யாராவது கைபிடித்து எழுத வைத்தார்களா. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்தப் பதிவு நீங்கள் எழுதியதுதானே...இல்லை யாராவது கைபிடித்து எழுத வைத்தார்களா. //
Deleteஏன் இவ்வாறு தங்களுக்கு தோன்றியது என்று அறியலாமா ஐயா....?
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ நன்றி
ReplyDeleteஎனக்குப் பிடித்த வரிகள்.
ReplyDeleteஇனிய கவிதை.
வாழ்த்துகள்.
நன்றி.
முன்னோர்கள் சொன்ன முதுமொழிகள் நம் காலகட்டத்தின் நிலை பொருத்து நமக்கு அவைகள் நினைவுக்கு வரும்.
Deleteசூழ்நிலைகள் மனதை தெளிய வைக்கும். இவ்வரிகளின் பொருள் நிலையில் மனத்தின் சூழ்நிலை இருந்தது. கவிதை வடிக்கும் போது இவ்வரிகள் கவிதையின் ஊடே வந்து அமர்ந்து கொண்டன. இவ்வரிகளுக்கு நிகர் இவ்வரிகளே... ஆகையால் அவற்றை அப்படியே விட்டு விட்டேன். தலைப்பாகவும் இப்பொருளுக்கு நிகர் இது என்றே இட்டுவிட்டேன்.
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
அருமை.
ReplyDeleteத.ம. +1
யானா ஆற்றுகின்றேன் என்னும் சந்தேகம் உங்களுக்கு இருந்ததால் அப்படிக் கேட்டேன் . நம் செயலுக்கு நாமே காரணகர்த்தா என்னும் நம்பிக்கை உடையவன் நான். . வேறு தவறாக எதுவும் எண்ண வில்லை. சந்தேகம் தெளிந்ததா மேடம்
ReplyDeleteஎல்லாம் அவன் செயல் என்று நம்புபவள் நான்.
Deleteமறுபடி வந்து தெளிவு செய்தமைக்கு நன்றி ஐயா
ஆட்டிவிப்பான் ஆண்டவன்
ReplyDeleteஆடுபவர்கள் அடியார்களே!
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
Delete