ஏதும் அறியா எனக்கு
ஏது குறை நீ சொல்
எண்ணத்தில் உறைந்து விட்டாய்
ஏக்கம் அதை தந்து விட்டாய்
அறிகிலேன் அறிகிலேன்
ஆனந்தம் வந்ததையா
அறிந்து கொண்டேன் நின்னை
பேரானந்தம் பெருகுதையா
உள்ளம் குவியுதையா
உன்னுரு தெரியுதையா
விட்டகாலம் நினைக்கையிலே
வேதனை வடியுதையா
அழகான மேனி அம்சம்
அழைக்குது தினந்தினமே
அமுதமாய் நாமமது
மெல்லுது மனந்தினமே
காணாததைக் கண்டிடவே
காலமது நிற்கவில்லை
காயமதும் காக்கவில்லை
கருத்து நிற்கும் வரை
மண்டலம் கடக்கையிலே
மறுபிறவி பிறந்திடவே
மது சூதனன் தாள் பற்றி
மனமது வளர்ந்திடவே
படம் கூகுள் நன்றி
ஸ்ரீ கிருஷ்ண.. கிருஷ்ண..
ReplyDeleteகிருஷ்ண கானம் அருமை!..
அருமையான வரிகளை போல் படமும் அழகு...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteபாடல் வரிகள் அருமையாக உள்ளது.. பாடி மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி..த.ம2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
படமும் வரிகளும் மனதைக் கவர்ந்தன. வாழ்த்துகள் தோழி.
ReplyDeleteஎத்தனை பிறவி எடுத்தாலும் உன்னை மறக்காத வரம் தா கிருஷ்ணா..
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .
Deleteநன்றி
கிருஷ்ணன் என்றாலே ஆனந்தம்தான்!
ReplyDeleteத ம 5
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .
Deleteநன்றி
நீங்கள் அடையாளப் படுத்தும் கடவுள் கிருஷ்ணனா.?
ReplyDeleteஎழுத்துப் பிழையை கவனிக்காது விட்டு விட்டேன். மனதில் மதுசூதனன் என நினைத்து தட்டியது படிதான் எழுத்து வந்து இருக்கிறது என நினைத்து பார்க்காமல் விட்டு விட்டேன். மன்னிக்கவும். அதான் ..... கிருஷ்ணர் தான்
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .
நன்றி
மது சூதனன் தாள் பணிந்தால் மகிழ்ச்சியே! தலைப்பை திருத்திவிடவும்!
ReplyDeleteகவனிக்காது விட்டு விட்டேன் சகோ....சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி. சரி செய்து விட்டேன்.
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .
நன்றி
பாடல் வரிகள் மிக அருமை சகோ.
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
Deleteபடம் அழகு....வரிகளும் அழகு
ReplyDeleteSuper
ReplyDeleteஅருமை அருமை ஆச்சரியமாக உள்ளது கண்ணருள் கிட்டிற்றுமக்கு வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteகிருஷ்ணா... கிருஷ்ணா...
ReplyDeleteஅழகான பாடல்... படமும்தான் அக்கா...
எல்லாக் கடவுள்களுக்கும் நாம்தானே அடையாளம் கொடுக்கிறோம்
ReplyDeleteநாம் தான் அடையாளம் கொடுத்து வைத்து இருக்கிறோம். நினைத்து வழிவட...
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி