தேவைவான பொருட்கள்
புடலங்காய் சிறிது - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
து.பருப்பு - 3 மே.க
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - ருசிக்கு
கருவேப்பிலை - சிறிது
தேங்காய் துருவல் - 2 தே.க
தாளிக்க வேண்டியவை
எண்ணெய் - 1 1/2 மே.க
வரமிளகாய் - 1
கடுகு - 1/4 தே.க
உ.பருப்பு - 1/2 தே.க
தாளிக்கவும்
பச்சை மிளகாய், வெங்காயம்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
புடலங்காயை சேர்க்கவும். உப்பு சேர்த்து சிறிது நீர் சேர்த்து மூடி வைக்கவும். வெந்து விடும். ( இல்லை என்றால் காயை தனியாக உப்பு சேர்த்து ஆவில் வேக வைத்தும் எடுத்துக் கொள்ளலாம்)
து.பருப்பை, மஞ்சள் தூள் சேர்த்து பதமாக வேக வைத்துக் கொள்ளவும்.
பருப்பை சேர்க்கவும். இதற்கு சிறிது உப்பு சேர்க்கவும்.
நன்கு கிளறி விடவும்.
விருப்பமானவர்கள் இத்துடன் தேங்காய் துருவலைசேர்த்து கொள்ளலாம்.
புடலங்காய் துவட்டல் தயார்...!!!
எனக்கு துவட்டல், கூட்டு, பொரியல் என்றால் ரொம்ப பிடிக்கும்.
ReplyDeleteஇங்கும் அடிக்கடி செய்வதுண்டு...
Photo Super
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
Deleteநல்ல ஒரு ரெசிப்பி! எளிமை. ஆனால் புடலங்காய், பீன்ஸ் இரண்டையும் எந்த வகையிலும் எனக்குப் பிடிக்காது. ஹிஹிஹி...
ReplyDeleteஹிஹிஹி.....
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
ருசித்தோம் துவட்டலை. ரசித்தோம் புகைப்படங்களை.
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
Deleteபுடலங்காய் துவட்டல் அருமை... நன்றி...
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
Deleteபுடங்காய் துவட்டல் அருமை!..
ReplyDeleteவாழ்க நலம்!..
எனக்கு புடலங்காய் மிக்கவும் பிடிக்கும். நானும் இதே முறையில் தான் செய்வேன் நீங்கள் சொன்ன மாதிரி பருப்புடன் தேங்காய் பூவும் சேர்த்து செய்வேன். மிக அருமை சகோ.தொடருங்கள்.
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
Deleteபுடலங்காயை விதவிதமாகச் செய்வோம் .இதையும் செய்து பார்த்து விடவேண்டியதுதான் சில பதார்த்தங்கள் வெவ்வேறு பெயர்களில் சமைக்கப் படுகின்றன.
ReplyDeleteசில பதார்த்தங்கள் வெவ்வேறு பெயர்களில் சமைக்கப் படுகின்றன.///
Deleteஆம் ஐயா...
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
புடலங்காயை மசியாமல் வேக வைத்து தேங்காய்த் துறுவலுடன் பொறியல் மாதிரி செய்வதுண்டு, எந்த ரெசிபியிலும் காயின் தனித்தன்மை கெடாது செய்வதில் குறியாய் இருப்போம்
ReplyDeleteஆம் நானும் அப்படித்தான் செய்வேன். அப்போது தான் காயின் சுவை நன்கு இருக்கும்.
Deleteபுடலங்காயை இப்படிச் செய்வதுண்டு ஆனால் துவரம்ப் பருப்பு சேர்த்துச் செய்தது இல்லை...பாசிப்பருப்பை மலர வேகவைத்துச் சேர்த்து செய்ததுண்டு...இதே போல...இபடியும் செய்துட்டா போச்சு..
ReplyDeleteசெய்யுங்க சகோ...:)))....
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி