Friday, 24 July 2015

பூமி வங்கி மிளிர ஆசை...!!!




மக்கள் இல்லாத நாட்டில் அரசாளமுடியுமா...?
என ஒரு நிமிடம் யோசித்தால்...
போதுமே எனத்தோன்றுகிறது... என்று குமார் தளத்தில் இன்று அவர் பதிவிற்கு கருத்துரையிட்டேன்.

இதை தொடர்ந்து கவிதை வடிக்க மனம் விளைந்தது. அதன்  தொடர்ச்சியை இங்கு வடித்து இருக்கிறேன்.






மக்கள் இல்லாத நாட்டில் அரசாளமுடியுமா...?
என ஒரு நிமிடம் யோசித்தால்...
போதுமே எனத்தோன்றுகிறது...?

குடி குடியைக் கெடுக்கும்
என்ற வாசகம்
எவ்வளவு உண்மையானது...

பெரிய பரந்த நிலத்தில்
பயிர்கள் வளர இடமின்றி
களைகள் செழித்து வளர்கின்றன...

நம்மை நடத்த....
மனம் இருந்தால்
மார்க்கம் தன்னால் தெரியும்...

கல்லறைக்கட்டடங்கள்
பெருகும் முன்...
கண்டெடுக்க வேண்டும்
நல்ல காலத்தை... நாடு

எங்கும் செழுமைப் பள்ளிக்கூடங்கள்
உளறல் இல்லா தெருக்கள் - தூய்மையாய்
அடிவாங்கா சக்திகள்
அணையா அடுப்புகள்
அப்பாவின் கைபிடித்து
நல்ல பாதையில் நடக்கும் சிறார்கள்
காணுமிடம் எல்லாம் பசுமைகள்
கண்சிமிட்டும் பயிர்கள்...
கைகுலுக்கும் மரங்கள்
கண்ணத்தில் முத்தமிடும் காற்று
வெள்ளையாய் ஓடும் ஆற்று நீர்
தனிவழி சாக்கடையாறு சுத்திகரிப்பு

மழைநீரின் சேமிப்பில் நிறையும் பூமிவங்கி
சுட்ட சூரியனும் சுகமாகிப் போனான்

ரப்பர் பொருட்கள் விட்டு விட்டு
மண்ணில் புது பொருட்கள்
பஞ்சில் நெய்த பைகள்

குழந்தைகளும் தோட்டமும் என
குழந்தைகள் வளர்க்க
வளர்ப்பு தோட்டங்கள் ஆங்காங்கே...
அரசாங்கம் தந்த பொது இடங்களில்

குப்பைக்கு ஒரு (குட்டு)  என காசுக் கட்டணங்கள்
வருமானத்தில் மட்டுமே வாழ்க்கையென கொள்கை
வளமான வாழ்க்கை பெருகட்டும்...
வளமான நாடாக எடுத்துக்காட்டாய் மிளிரட்டும்.

பூமி வங்கியை காலி செய்யும் உரிமை
மட்டும் நமக்கில்லை...
அதை நிரப்பும்  உரிமையும் நமக்கு உண்டு...
நம் சந்ததியினருக்காக...
பூமி வங்கி மிளிர ஆசை...!!!



சிறார்கள், பெண்கள், குடிக்கு சர்வ சாதாரணமாக கட்டாயப்படுத்தியும், சுகத்துக்காகவும் பழக்கப் படுத்துகிறார்கள், பழகுகிறார்கள் என என்னவெல்லாமோ..... செய்திகளை  படிக்கிறோம். வேதனையாக இருக்கிறது.
மெல்ல மெல்ல வருகிற சாவின் வீரியத்தின் ஆழம் இப்போது முழுமையாக புரியாது. புரியும் போது எதுவும் இருக்காது.





24 comments:

  1. இந்த ஆசைகள் நிறைவேறுமா?

    ReplyDelete
    Replies
    1. :)).......

      தெரியவில்லை...ஆனால் நிறைவேறும் எனதோன்றுகிறது. நினைப்பதையாவது நல்லதாக நினைக்கலாம் இல்லையா....? எல்லோருடைய நல் நினைவுகளும் சரி செய்ய வல்லது...அல்லவா...

      Delete
  2. என் தளத்தில் உங்கள் கருத்து பார்த்தேன்.
    தாங்கள் சொல்லியிருப்பது நினைத்துப் பார்க்கும் போது நடக்கும் என்றே தோன்றுகிறது...
    கவிதை அருமை அக்கா..

    ReplyDelete
  3. ஆழமான சிந்தனையில் விளைந்த கவிதைகள்
    அருமையிலும் அருமை
    பகிர்ந்தமைக்கு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  4. அருமை...

    மிளிரும்... மிளிர வேண்டும்... நன்றி...

    ReplyDelete
  5. சிறப்பான கருத்து கொண்ட படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  6. வணக்கம் சகோதரி!
    ஆதங்கம் மிக அருமை. அதைக் கவிதையாக வடித்தவிதம்
    மிக மிகச் சிறப்பு!
    கனவு மெய்ப்பட வேண்டும்!

    வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  7. பூமி வங்கி மிளிர மாற்றங்கள் தன்னிலிருந்து தோன்ற வேண்டும் ஆனால் ஏனோ இந்த வழக்குச் சொல் நினைவுக்கு வருகிறது” ஆசை இருக்கு தாசில் பண்ண .....” வாழ்த்துக்கள்.
    என்னுடைய இன்னொரு தளம்” பூவையின் எண்ணங்கள்” சமையல் குறிப்புகளைத் தாங்கி வருகிறதுவருகை தாருங்களேன் http://kamalabalu294.blogspot.in நன்றி,

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  8. //பூமி வங்கியை காலி செய்யும் உரிமை
    மட்டும் நமக்கில்லை...
    அதை நிரப்பும் உரிமையும் நமக்கு உண்டு...
    நம் சந்ததியினருக்காக...//
    கடமையும்.அருமை

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  9. பூமி வங்கி மிளிரட்டும்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  10. தலைப்பு முதலில் புரியவில்லை.

    கவிதையைப் படித்ததும் :)

    பூமி வங்கி அருமையான சொல்லாடல்.

    வாழ்த்துகள்.


    நன்றி

    ReplyDelete
    Replies
    1. தலைப்பு முதலில் புரியவில்லை.

      கவிதையைப் படித்ததும் :) //

      :))).....

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  11. அருமையான கவிதை தோழி அதிலும்
    **கல்லறைக்கட்டடங்கள்
    பெருகும் முன்...
    கண்டெடுக்க வேண்டும்
    நல்ல காலத்தை... நாடு** செம.... செம....
    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  12. நல்ல கவிதை...மிளிரவேண்டும்...ரசித்த வரிகள்/பூமி வங்கியை காலி செய்யும் உரிமை
    மட்டும் நமக்கில்லை...
    அதை நிரப்பும் உரிமையும் நமக்கு உண்டு...
    நம் சந்ததியினருக்காக...//
    //கல்லறைக்கட்டடங்கள்
    பெருகும் முன்...
    கண்டெடுக்க வேண்டும்
    நல்ல காலத்தை... நாடு//

    ReplyDelete