வானம் அறிவித்தது
இசை மழை பொழிய இருக்கிறது என்று...
வான மேடையில் சப்தங்கள்...
தாயாராகின்றன போலும்
வீட்டினுள்ளே
ஒலிபெருக்கியின்
ஓசைகள் காதையடைத்தன...
மேகங்கள் ஒன்று கூடி
கரிய ஆடையுடுத்தி வந்தன
அவர்களின் சீருடைகள்
என்றும் ஒன்று போல் அல்லவா...?
உலகின் குளிர்சாதனப் பெட்டி
இயங்கத்தொடங்கியது...
ஆஹா....அற்புதம் ஆனந்தம்...
அதிவேகத் தென்றலின்
அரவணைப்பு...!!!
சூரியனும் ஒதுங்கிப் போனான்
சற்று இளைப்பாற...
மறைந்திருந்து அவனும் மகிழ்கிறான்
குழந்தைகளின் பார்வைகள்
வானைநோக்கி...
இல்லத்தரசிகளின் பார்வைகள்
கொடிகளை நோக்கி...
அவரவர்கள் மும்முரமானார்கள்...
சோ....சோ...வென மழை இசைக்க
கிர்...கிர்...கிர்ரெ... உடன் கைகோர்த்தான் காற்று நண்பன்
டொய்ங்...டொய்ங்...டொய்ங்...
குடிசைக்குள் வந்திசை வாசித்தது மழை
சாரல் அடித்தது பொறுக்காமல்
வா வெளியே...இல்லை
போ உள்ளே...என்று
மழையில் நனைய முடியவில்லை
மழையை விட்டு விலகவும் மனமில்லை
பட்டாளைத் தூணில்
சாய்ந்தமர்ந்து ரசித்தேன் அதன் அழகை
இசைக் குறிகளின் தோரணங்கள்....
நடுவாசலில் ஜாலங்கள் புரிய...
கண்கள் சங்கமித்து நின்றன
சாரல் முத்தமிட
காலம் கட்டிக் கொள்ள
மனம் மயங்கியிருக்க
இசையின் ஓசையில்
இதயத்தை தொலைத்தேன்
அற்புதம் அற்புதம்
ReplyDeleteமழைபோல் கவிதையும் மனதை குளிர்வித்தது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி ஐயா, தங்களை போன்றோர்களின் உற்சாக கருத்துக்கள் தான் என்னை மேலும் மேலும் படைக்க வைக்கிறது.
Deleteநன்றி
tha.ma 2
ReplyDeleteநன்றி
Deleteஆகா...! ரசித்தேன்...
ReplyDeleteதொடர்வருகைக்கும் ,என்னை விடாது ஊக்குவிற்பதற்கும்,,,மிக்க மகிழ்ச்சி சகோ நன்றிகள் பல.
Deleteஎங்கேயோ போய்விட்டீர்கள்.......!
ReplyDeleteஇசைக்குறிகளின் தோரணங்கள்........
இப்படிப்பட்ட சொல்லாடல்களை எல்லாம் எங்கிருந்து பிடிக்கிறீர்களோ !!!!!
த ம 4
திடீரென தோன்றும் வார்த்தைகள் சகோ இவைகள்.....இது போல் உள்ள என் கவிதைச் சொற்களை தாங்கள் பாராட்டும் போது தான்...எனக்கே இவைகள் நல்ல சொல்லாடலோ என்று எண்ணத் தோன்றுகிறது.
Deleteமிக்க நன்றி சகோ.
**சாரல் முத்தமிட
ReplyDeleteகாலம் கட்டிக் கொள்ள
மனம் மயங்கியிருக்க
இசையின் ஓசையில்
இதயத்தை தொலைத்தேன்**
ஒ! நானும் தான் தோழி! அருமையான மழை!!
நன்றி மைதிலி
Deleteநல்ல ரசனை. நாங்களும் ரசித்தோம்.
ReplyDeleteமழைச்சாரலாகக் குளிர்கின்றது - கவிதை..
ReplyDeleteஅழகான மழைப் பொழுதை - கண் முன் நிறுத்தி விட்டீர்கள்.. மகிழ்ச்சி..
நன்றி ஐயா
Deleteமழை வருவது முகிலுக்குத் தெரியாது
ReplyDeleteநமக்குத் தெரிந்து விடுமே!
சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
பொழியும் மழையை உணர வைக்கிறது வரிகள். அருமை.
ReplyDelete"ஓம் ஓம் என் உறுமிற்று வானம்" நினைவுக்கு வந்தது.
படம் அழகு. வீழும் மழை வீட்டுக்குள் பெய்தால் என்ன சுகம்....
வீழும் மழை வீட்டுக்குள் பெய்தால் என்ன சுகம்..//
Deleteஉண்மை தான் என்ன சுகம் என்ன சுகம் தான்...
நன்றி
ஆஹா! மிகவும் இனிமையான இசைத் தோரணம்! நாங்கள் அடிக்கடிச் சொல்லும் வார்த்தைகள்! குறிப்பாக கீதா....மத்தளம் கொட்ட, வானின் கரிய ஆடை மினுமினுக்க, இசை மழைத் துளிகள் தோரணமாய், என் வீட்டு முற்றத்தை அலங்கரிக்க.....என்று கல்லூரியில் எழுதியதுண்டு...30 ஆண்டுகளுக்கு முன் இன்னும் முழுவதும் இங்கு சொல்லவில்லை...
ReplyDeleteஅருமையான வரிகள்! மிக மிக ரசித்தோம்...அந்தப் படம் எங்கள் வீட்டுமுற்றத்தை நினைவூட்டியது..இப்படித்தான் பெய்யும் எங்கள் ஊரில் மழை அடை மழை பெய்யும்....அழகு..
ஆஹா! மிகவும் இனிமையான இசைத் தோரணம்! நாங்கள் அடிக்கடிச் சொல்லும் வார்த்தைகள்! குறிப்பாக கீதா....மத்தளம் கொட்ட, வானின் கரிய ஆடை மினுமினுக்க, இசை மழைத் துளிகள் தோரணமாய், என் வீட்டு முற்றத்தை அலங்கரிக்க.....என்று கல்லூரியில் எழுதியதுண்டு...30 ஆண்டுகளுக்கு முன் இன்னும் முழுவதும் இங்கு சொல்லவில்லை.//
Deleteஅதை பதிவிடுங்கள் சகோ.....எல்லோரும் வாசிக்க காத்திரிக்கிறோம்..
நன்றி
ஜீவி என்னும் வலையுலக நண்பர் ஒரு முறை மழைபற்றிய பதிவோ பின்னூட்டமோ எழுதி இருந்தார். அதை நினைவு படுத்த முயன்று தோற்கிறேன் அந்தப் பதிவின் தாக்கம் இப்போது இதைப் பார்த்ததும் எழுகிறது. மழை பற்றிய அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.
ReplyDelete