Thursday 23 July 2015

மது சூதனன் தாள்






ஏதும் அறியா எனக்கு
ஏது குறை நீ சொல்
எண்ணத்தில் உறைந்து விட்டாய்
ஏக்கம் அதை தந்து விட்டாய்

அறிகிலேன் அறிகிலேன்
ஆனந்தம் வந்ததையா
அறிந்து கொண்டேன் நின்னை
பேரானந்தம் பெருகுதையா

உள்ளம் குவியுதையா
உன்னுரு தெரியுதையா
விட்டகாலம் நினைக்கையிலே
வேதனை வடியுதையா

அழகான மேனி அம்சம்
அழைக்குது தினந்தினமே
அமுதமாய் நாமமது
மெல்லுது மனந்தினமே

காணாததைக் கண்டிடவே
காலமது நிற்கவில்லை
காயமதும் காக்கவில்லை
கருத்து நிற்கும் வரை

மண்டலம் கடக்கையிலே
மறுபிறவி பிறந்திடவே
மது சூதனன் தாள் பற்றி
மனமது வளர்ந்திடவே



படம் கூகுள் நன்றி



20 comments:

  1. ஸ்ரீ கிருஷ்ண.. கிருஷ்ண..

    கிருஷ்ண கானம் அருமை!..

    ReplyDelete
  2. அருமையான வரிகளை போல் படமும் அழகு...

    ReplyDelete
  3. வணக்கம்
    பாடல் வரிகள் அருமையாக உள்ளது.. பாடி மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி..த.ம2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. படமும் வரிகளும் மனதைக் கவர்ந்தன. வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete
  5. எத்தனை பிறவி எடுத்தாலும் உன்னை மறக்காத வரம் தா கிருஷ்ணா..

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .
      நன்றி

      Delete
  6. கிருஷ்ணன் என்றாலே ஆனந்தம்தான்!
    த ம 5

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .
      நன்றி

      Delete
  7. நீங்கள் அடையாளப் படுத்தும் கடவுள் கிருஷ்ணனா.?

    ReplyDelete
    Replies
    1. எழுத்துப் பிழையை கவனிக்காது விட்டு விட்டேன். மனதில் மதுசூதனன் என நினைத்து தட்டியது படிதான் எழுத்து வந்து இருக்கிறது என நினைத்து பார்க்காமல் விட்டு விட்டேன். மன்னிக்கவும். அதான் ..... கிருஷ்ணர் தான்

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .
      நன்றி

      Delete
  8. மது சூதனன் தாள் பணிந்தால் மகிழ்ச்சியே! தலைப்பை திருத்திவிடவும்!

    ReplyDelete
    Replies
    1. கவனிக்காது விட்டு விட்டேன் சகோ....சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி. சரி செய்து விட்டேன்.

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .
      நன்றி

      Delete
  9. பாடல் வரிகள் மிக அருமை சகோ.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  10. படம் அழகு....வரிகளும் அழகு

    ReplyDelete
  11. அருமை அருமை ஆச்சரியமாக உள்ளது கண்ணருள் கிட்டிற்றுமக்கு வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  12. கிருஷ்ணா... கிருஷ்ணா...
    அழகான பாடல்... படமும்தான் அக்கா...

    ReplyDelete
  13. எல்லாக் கடவுள்களுக்கும் நாம்தானே அடையாளம் கொடுக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. நாம் தான் அடையாளம் கொடுத்து வைத்து இருக்கிறோம். நினைத்து வழிவட...

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete