தேவையான பொருட்கள்
து.பருப்பு - 3 மே.க
அவரைக்காய் - 10 அ 12
சின்ன வெங்காயம் - 12
தக்காளி - 1
சாம்பார் பொடி - 1 1/2 தே.க
மஞ்சள் தூள்- சிறிது
உப்பு - ருசிக்கு
புளி - சிறிய எலுமிச்சை அளவு
வெந்தயம் - சிறிது
பெருங்காயம் - சிறிது
து.பருப்பை, மஞ்சள்தூள் + சிறிது வெந்தயம் + பெருங்காயம்+ சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்துக் கொள்ளுங்கள்.
1 தே.க எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்
தக்காளி + அவரைக்காயை சேர்த்து வதக்கவும்.
பருப்போடு சேர்க்கவும்.
புளிக்கரைசலை ஊற்றவும். உப்பு சேர்க்கவும்
சாம்பார் பொடியை போடவும்.
2 விசில் குக்கரில் விட்டு இறக்கவும்.
தாளிக்க வேண்டியவை
நல்லெண்ணெய் - 1 மே.க
கடுகு - 1/4 தே.க
சீரகம் - 1/4 தே.க
கருவேப்பிலை - சிறிது
தாளிக்கவும்
கொத்தமல்லி தூவிக் கொள்ளுங்கள்.
அவரைக்காய் சாம்பாரே..... ஒரு மணமாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்தமான காய். வாசம் அபாரம் இல்லையா...? அதான்னு நினைக்கிறேன்.
அதுவும் நாட்டு அவரைக்காய் இருக்கே அது இன்னும் சதை பிடிப்பாய் சூப்பராக இருக்கும்.
ஊரில் இருந்து வந்த போது கொண்டு வந்து செய்தது...ம்கூம்....என்ன செய்வது...? இப்ப பதிவா போடும் போது ஒரு பெரு மூச்சு தான் விட வேண்டி இருக்கு.....நீங்கள் என்ஜாய்...பண்ணுங்களேன்....!!!
அவரைக்காய் சாம்பார் கண்டேன் இப்பொழுதுதான் சாம்பார் சாதம் சாப்பிட்டேன் நன்றி
ReplyDeleteதமிழ் மணம் 1
சாம்பார் சாதம் சாப்பிட்டு வந்த பின் சாம்பாரை பார்த்தது பரவாயில்லையாய் இருக்கும் அல்லவா...? :)))).....
Deleteமகிழ்வான முதல் உடனடி வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மகிழ்ச்சி. நன்றிகள்.
அவரைக்காய் சாம்பார் சூப்பர். மணம் இங்கு வரை வருகிறது.
ReplyDeleteகாரம், மணம், குணம் நிறைந்தது! சுவையானது!
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றிகள்
Deleteசுவையான பதிவு.
ReplyDeleteத ம 3
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றிகள்
Deleteவழக்கம்போல் ருசிக்கவைத்த பதிவு.
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றிகள்
Deleteஇதுக்கு என்ன பொரியல் மேட்ச் ஆகும்?காரமா உ.கி?
ReplyDeleteஎங்க கேடரர் ஏதோ சாம்பார் கொடுக்கிறார்.சாப்பிடுகிறேன்! no choice
உ.கி காராப் பொரியல் நன்றாக இருக்கும் ஐயா.
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றிகள்
A1 சாம்பார். அதுவும் அவரைக்காய் சாம்பார். சூப்பர் ! :)
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றிகள்
Deleteபடத்துடன் செய்முறை விளக்கம்
ReplyDeleteசொல்லிப் போகும் விதம் அற்புதம்
நான் சமைக்க நேர்கிற நாளில்
தவறாது தங்கள் பதிவைனைப்
பார்த்துத்தான் எதையாவது
செய்ய முனைகிறேன்
தொடர நல்வாழ்த்துக்கள்
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றிகள்
Deletetha.ma 4
ReplyDeleteநன்றி
Deleteநல்ல அவரைக்காய் கிடைப்பது தான் அரிதாக இருக்கிறது...
ReplyDeleteசெய்முறை குறிப்பிற்கு நன்றி...
நல்ல அவரைக்காய் கிடைப்பது தான் அரிதாக இருக்கிறது.//
Deleteஆம் சகோ
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றிகள்
அவரைக்காய் சாம்பாருக்கு நிகர் - எது!?..
ReplyDeleteநெஞ்சை அள்ளும் - படங்கள்..
வாழ்க நலம்!..
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றிகள்
Deleteஅவரைக்காய் சாம்பார் மணம் இங்கு வரை அடிக்கிறது சகோ. எங்களுக்கும் மிகவும் பிடித்த சாம்பார்.
ReplyDeleteஉங்களுடைய ப்ளாக் சிறிது நேரம் open ஆகவில்லை. அதனால் தான் கருத்து சொல்ல தாமதம் ஆகி விட்டது.
வணக்கம் சகோதரி.
ReplyDeleteஅவரைக்காய் சாம்பார் வெகு ஜோராய் இருந்தது. பரவசமூட்டும் படங்களுடன் செய்முறை பக்குவங்கள் மனதை கவர்ந்தன. பகிர்வுக்கு நன்றி சகோ.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றிகள்
Deleteவெரி சேம்....(சகோதரி ஷேம் அல்ல ஹஹாஹஹஹ்) அதைப் போன்றே....செய்வதுண்டு.....படம் போட்டு விளக்கமாக அசத்தறீங்க போங்க...!!!!
ReplyDelete