Monday, 8 June 2015

பாகற்காய் குழம்பு






தேவையான பொருட்கள்

பாகற்காய் - 3
புளி -  நெல்லி அளவில் - 2 உருண்டை
சின்ன வெங்காயம் - 15 
பூண்டு - 12
தக்காளி -1
சாம்பார் பொடி - 1/2 தே.க
மஞ்சள் தூள் - 1/2 தே.க
தேங்காய் - 2 மே.க.
வெல்லம் - சிறிது





பாகற்காயை, உப்பு + 1 உருண்டை புளி
+ பாதி மஞ்சள் தூள் சேர்த்து 20 நிமிடங்கள் ஊறவிடவும்.



வறுக்க வேண்டியது

மிளகாய் -5
க.பருப்பு - 1 தே.க
மல்லி - 1 தே,க
சோம்பு - 1/2 தே.க
வெந்தயம் - சிறிது

வறுத்து விட்டு +  தேங்காய் - 2 மே.க சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

தாளிக்க வேண்டியது

நல்லெண்ணெய் - 5 மே.க
கடுகு - 1/4 தே.க
சீரகம் - 1/2 தே.க
பெருங்காயம் - சிறிது

                                                 தாளிக்கவும்




வெங்காயம் + பூண்டு சேர்த்து வதக்கவும்.






தக்காளி சேர்த்து வதக்கவும்




பாகற்காயை சேர்த்து வதக்கவும்.
 


பாகற்காய் நன்கு வதங்கிய பின் பொடிகளை சேர்க்கவும்.




உப்பு + புளியை சேர்க்கவும். உப்பு புளியில் பாகற்காய் நன்கு வெந்த பின்




அரைத்ததை சேர்க்கவும்




அரைத்தது நன்கு சாரவும் சிறிது வெல்லம்  சேர்த்து இறக்கவும். 


                                               சுவையான பாகற்காய் குழம்பு பிரமாதம்...!!!



அதிகம் கசப்பில்லா குழம்பு....செய்து பாருங்களேன் சகோக்களே...




20 comments:

  1. வெங்காயம் பூண்டு சேர்த்ததில்லை. வெறும் பாகற்காய் மட்டும் போட்டு சாம்பார் செய்ததுண்டு. பிட்லே செய்திருக்கிறோம். இந்த பாணியில் ஒருமுறை செய்துடுவோம். பாகற்காய் போட்டு எது செய்தாலும் எனக்குப் பிடிக்கும். இலேசான கசப்பும் தெரிந்தால் தான் இன்னும் ருசி.

    ReplyDelete
  2. பாகற்காய் கசப்பா..?

    பார்க்க இனிக்கிறதே !!!!

    த ம 1

    நன்றி

    ReplyDelete
  3. பாகற்காய் எனக்கு மிகவும் பிடிக்கும்
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  4. இயற்கையாகவே சற்றே கசப்பான பாகற்காயையும், மிகவும் சுவையாக, ருசியாக மாற்றித்தந்துவிடும் அருமையான அற்புதமான தளம் இது. பாராட்டுகள்.

    ReplyDelete
  5. எனக்கு மிகவும் பிடித்த பாகற்காய் குழம்பு சூப்பர். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அருமை.. பாகற்காய் குழம்பு அருமை!..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  7. அடடா அப்புடியே ஒரு பிடி சாதம் போட்டுக் குழைத்துக் கொடுங்க தோழி நானும் சாப்பிட்ட சந்தோசத்தில மிதப்பன் அவ்வ்வ்வ்வ் :) படங்களும் செய்முறை விளக்கமும் அருமை தோழி ! வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  8. வெங்காயம், பூண்டு, தக்காளி என அனைத்தும் கலந்து பாவற்காய் குழம்பு. செய்து பார்த்துடலாம்!

    ReplyDelete
  9. வணக்கம்

    சுவையான உணவு செய்முறையுடன் அசத்தல் அருமை... பகிர்வுக்கு நன்றி த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. பாகற்காய் குழம்பு படமே இழுக்கிறது... சிறிது கசப்பான அந்த சுவையே தனி...!

    ReplyDelete
  11. உடல்நலத்திற்கு ஏற்ற குழம்பினைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  12. கசப்பும் சுவையே!

    ReplyDelete
  13. பாகற்காய் குழம்பு பார்க்கவே செய்யத்தூண்டுகிறது. செய்துபார்க்கிறேன் உமையாள்.நன்றி

    ReplyDelete
  14. பாகற்காய் எனக்கு மிகவும் பிடிக்கும். பொரியல், வறுவல் என்று தான் செய்வேன். உங்கள் செய்முறையில் செய்து பார்க்கிறேன் சகோ.

    ReplyDelete
  15. ஸ்ரீராம் சொன்னது போல்,பிட்லையும் சாம்பாரும் தெரியும்.இது புதிது.பாவக்காயில் எது செய்தாலும் சுவைதான்.
    என் அக்கா சமீபத்தில்தான் பாவக்கய் தொக்கு செய்து கொடுத்து விட்டுப் போனார்கள்

    ReplyDelete
  16. கிட்டத்தட்ட இப்படித்தான் நாங்களும் செய்வோம்(அம்மா- நான்)
    மிகப் பிடிக்கும்.

    ReplyDelete
  17. உமையாள்,

    பாவக்காயில் செய்யும் அனைத்துமே ரொம்ப பிடிக்கும். பாவக்காயின் தனித்தன்மையான கசப்பை நீக்கமாட்டேன்.

    நீங்க செய்த குழம்பு கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. காய் வாங்கினால் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  18. வணக்கம் சகோதரி.

    கண்ணைக் கவரும் பாகற்காய் குழம்பின் படங்களும் செய்முறையும் அருமை . பாகற்காயின் கசப்பு உடம்புக்கு நல்லதென்பதால், கசப்பை பொருட்படுத்தாமல் அடிக்கடி சேர்ப்பதுண்டு. சிறு வயதினருக்கு பெரும்பாலும் இதன் சுவை பிடித்தமில்லாமல் போவது இயற்கை. ஆனால் தங்கள் பாணியில் செய்தால் அவர்களுக்கும் பிடிக்குமென நினைக்கிறேன்.வெங்காயம், பூண்டு சேர்க்காமல் செய்துள்ளேன். இனி வெங்காயம் பூண்டு சேர்த்து செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி சகோதரி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  19. படங்களுடன் விவரித்திருக்கும் அழகு பாகற்காயை உண்ணத் தூண்டுகிறது. அருமை உமா :)

    ReplyDelete
  20. பாகற்காய் மிகவும் பிடிக்கும்...இந்த முறையில் செய்ததில்லை...செய்து பார்த்துடுவோம்.....ரொம்ப அழகா சொல்லி யிருக்கீங்க சகோதரி....

    ReplyDelete