Thursday, 18 June 2015

ராதா கிருஷ்ண காயத்ரி...!!!



                                     
                                                                       படம் கூகுள் நன்றி




பெண்

ராதை உனக்கு போதவில்லை நானும் வேணுமா...?
கண்ணா நானும் வேணுமா...? நானும் வேணுமா...?
கோதை உந்தன் பேதை அது உனக்கு தெரியுமா...?
கண்ணா உனக்கு தெரியுமா...? அது உனக்கு தெரியுமா...?

ஆண்

ராதை கோதை உள்ளமது ஒன்று அல்லவா...?
ஒன்று அல்லவா...? அது ஒன்று அல்லவா...?
ஒன்றில் இரண்டு காண்ப தென்பது எங்கும் இயலுமா...?
கோதை எங்கும் இயலுமா...? அது எங்கும் இயலுமா...?

பெண்

நெடிது காலம் உருகிக்கிடக்க வந்தாயடா...?
மடிவந்தாயடா...? கண்ணா வந்தாயடா...?

ஆண்

யுகயுகமாய் காத்திருந்தேன் நீகனியவே...
கோதை நீகனியவே...கோதை நீகனியவே...

பெண்

கனிய வைத்து காக்கவும் வைத்தாய் நீ பொல்லாதவன்..
நீ பொல்லாதவன்...நீ பொல்லாதவன் தாண்டா...
அன்பு அது பொங்க பொங்க அழுகை ஏனடா...?
கண்ணா அழுகை ஏனடா...? அழுகை ஏனடா...?

ஆண்

விழித்திரை மூடிக்கொள் என் கோதையே...
விவாதிப்போம் நாம் நமக்குள்ளயே...நமக்குள்ளயே...
எத்தனை செய்திகள் உனக்கிருக்கு என் கோதையே
வா கைகோர்த்து என்னுடன் வா கைகோர்த்து

பெண்

கைகள் தழுவிய வேளையில் கரைந்தேனடா...
நான் கரைந்தேனடா. உன்னுடன் கரைந்தேனடா...
காற்று வெளியில் மிதந்திட்டே...அடைந்தோமடா...
கண்ணலோகம் அடைந்தோமடா...அடைந்தோமடா...

கண்ணலோகம் அடைந்தோமடா...அடைந்தோமடா...
கண்ணலோகம் அடைந்தோமடா...அடைந்தோமடா...
கண்ணலோகம் அடைந்தோமடா...அடைந்தோமடா...




இந்த பாடலை தட்டச்சு செய்து விட்டு கூகுளில் படத்தேர்வு செய்ய ( ஆனால் இப்படம் வேறு ) முயற்சித்தேன். ராதா கிருண்னர் படம் வந்தது. அதில் ஒன்றை பார்த்த போது எனக்கு அப்படியே அதிர்ச்சியாகி விட்டது.

 ராதா கிருஷ்ணா...ராதா கிருஷ்ணா என்ற தலைப்பில்...நீ    தேடினது...அது தாதே அது தானே வரும் அப்படிங்குறீங்க....சரிதான்...அதற்கு கீழே.....ராதா கிருஷ்ண காயத்ரி.. அப்படின்னு.... போட்டிருந்தது....நான் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து தான் போனேன்.

இந்த பாடலுக்கு தகுந்தாற் போல் பெயர்கள்...எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.... அந்த பக்கத்திற்கு சென்றால்...அதில்
கிருஷ்ண காயத்ரி...  ராதா காயத்ரி.....இரண்டு காயத்ரி மந்திரங்கள் போடப்பட்டு இருந்தன. பொருத்தமான இந்த நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.....உணர்ச்சி வயப்பட்டு ஸ்தம்பித்துப் போனேன். கண்களின் துளிகள் அவன் பாதத்திற்கு சமர்ப்பணம்.

ஆகையால் தலைப்பையும் அவ்வாறே வைத்து விட்டேன்








  

26 comments:

  1. ஊஞ்சலாடும் ஸ்ரீகிருஷ்ணர் படம் அழகோ அழகு. பாடலும் அருமை. தலைப்பும் ஜோர் ஜோர். தாங்கள் ஆச்சர்யப்படும் எல்லா நிகழ்வுகளுக்குமே அந்த மாயக்கண்ணனின் லீலைகள் மட்டுமே காரணம். :) பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றிகள்

      Delete
  2. தலைப்பைப் பார்த்ததுமே - என் மனம் கூறியது..
    ராதா கிருஷ்ண காயத்ரி!.. உண்மைதான்..

    கண்களில் நீர்த்துளி!..
    அவன் திருவடிகளுக்குச் சமர்ப்பணம்!...

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றிகள்

      Delete
  3. சிறந்த பாடல்
    தலைப்புப் பிறந்த கதை அருமை
    சிறந்த பகிர்வு

    தங்கள் தளத்தை
    http://tamilsites.doomby.com/ இல்
    இணைக்காது இருப்பின்
    இணைத்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றிகள்

      Delete
  4. Cool.

    படமும், கவிதையும் இரண்டும் அருமை.

    சுப்பு தாத்தாவுக்கு இதைப் பாடத்தோன்றினால் காவடிச்சிந்தாகப் பாடுவாரோ!

    :))))))))))))))

    ReplyDelete
    Replies
    1. சுப்பு தாத்தாவுக்கு இதைப் பாடத்தோன்றினால் காவடிச்சிந்தாகப் பாடுவாரோ!//

      :)))))))))))))).............தெரியவில்லையே சகோ....

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றிகள்

      Delete
  5. கிருஷ்ண காயத்ரி... ராதா காயத்ரி.....இரண்டும் ஒன்றே. தலைப்பைச் சிந்தித்து வைத்த விதம் நன்று. அழகான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. கிருஷ்ண காயத்ரி... ராதா காயத்ரி.....இரண்டும் ஒன்றே//

      இல்லை ஐயா தனித்தனியே என கண்டேன்..இதோ கீழே...ஐயா


      க்ருஷ்ண காயத்ரி

      ஓம் தேவகிநந்தனாய வித்மஹே, வாசுதேவாய தீமஹி,
      தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்.

      ராதா காயத்ரி

      ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே, க்ருஷ்ணப்ரியாயே தீமஹி,
      தந்நோ ராதா ப்ரசோதயாத்.


      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றிகள்

      Delete
  6. உங்களின் தேடல் மெய் சிலிர்க்க வைத்தது...

    வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றிகள்

      Delete
  7. பாடல் அருமை உமையாள் காயத்ரி என்றே பெயர் போட்டு இருக்கலாம்
    தமிழ் மணம் 4

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றிகள்

      Delete
  8. சில வேளைகளில் இவ்வாறு நடப்பதுண்டு, நாம் எதிர்பார்த்த மாதிரியே, தங்கள் ஆக்கம் அருமை, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. படமும் கவிதையும் அருமை! சில சமயம் இப்படி இறையருள் கூடுவதுண்டு உண்மையான பக்தர்களுக்கு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. அதுதான் கிருஷ்ண லீலை!

    ReplyDelete
  11. வணக்கம் சகோதரி.

    அருமையான பாடல். ஒவ்வொரு வரிகளிலும் பக்தியின் பரவசம் மிதந்துள்ளது. அதற்கேற்ற மாதிரி ஊஞ்சலில் ஆடும் கிருஷ்ண ராதையை பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல் அவ்வளவு அம்சமாக உள்ளது. கண்டிப்பாக அந்த கிருஷ்ணனின் பரிபூரண பேரருள் உங்களுடன் எப்போதும் தங்கியிருக்கும் சகோதரி. அதனால்தான் மிகச் சிறந்த பாடல்களை தங்களால் உருவாக்க முடிகிறது. வாழ்த்துக்கள். சகோ. பகிர்ந்தமைக்கு நன்றி.

    தற்சமயம் பூரண நலமா சகோதரி ? தங்கள் உடல் நிலையை நன்கு கவனித்துக் கொள்ளவும்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. சற்று பரவாயில்லை சகோ. விசாரித்தமைக்கு நன்றி

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றிகள்

      Delete
  12. வணக்கம் சகோ காயத்திரி !

    உள்நெஞ்சக் கூடுவக்கும் ஒப்பில்லாச் சிந்தனைகள்
    மெள்ளக் கருக்கூட்ட மெய்சிலிர்க்கும் - துள்ளிக்
    குதிக்கும் துயரறி யாக்குழந்தை யைப்போல்
    மதியுள் மறைந்திருக்கும் மாண்பு !

    பாடல் அருமை தொடர வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    தமிழ்மணம் கூடுதல் ஒரு வாக்கு

    ReplyDelete
  13. தெய்வ அனுக்கிரகம் என்று தான் சொல்லவேண்டும் சில சமயங்களில் சிலருக்கு நடக்கும். இது அருமை அருமை யான நிகழ்வும் பாடலும்.

    ReplyDelete
  14. www.youtube.com/edit?video_id=tGTS1KTYndw&video_referrer=watch

    இங்கு தங்கள் கவிதையின் முதல் இரண்டு பாக்கள் ஒலிக்கின்றன. உங்களுக்கு இந்த ராகம் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். ராகம் அமீர் கல்யாணி.

    ReplyDelete
  15. படத்தை விட்டு கண் அகலவில்லை தோழி. அற்புதமான காட்சி. பாடலும் வெகு சிறப்பு.

    ReplyDelete
  16. பாடல் அருமை சகோ. உடல் நலமில்லை என்று கேள்விப்பட்டேன். இப்போது நலமா சகோ.

    ReplyDelete
  17. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (20/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  18. அன்புள்ள சகோதரி உமையாள் காயத்ரி அவர்களுக்கு வணக்கம்! உங்கள் வலைத்தள (தமிழ்மணம்) வாசகர்களில் நானும் ஒருவன்.

    நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

    தங்களின் வலைத்தளத்தினை இன்று (20.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:

    நினைவில் நிற்போர் - 20ம் திருநாள்
    http://gopu1949.blogspot.in/2015/06/20.html

    ReplyDelete