தேவையான பொருட்கள்
பாகற்காய் -2
புளி - சிறிய நெல்லி
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - ருசிக்கு
புளித்தண்ணீரில் மஞ்சள் தூள், உப்பு போட்டு பாகற்காயை 20 நிமிடங்கள் ஊறவிடவும்.
பின் பிழிந்து எடுத்துக் கொண்டு எண்ணெய்யில் பொரிக்கவும். பின் சிறிது உப்பு தூவி பிசரவும்.
பாகற்காய் சிப்ஸ் தயார்...!!! அப்போது எல்லாம் இப்படித்தான் தயாரிப்பார்கள்.
இதன் ஒரினினல் சுவையை கேட்கவும் வேண்டுமோ...?
சிறுவயதில் இந்த மாதிரி நிறைய பாவக்காய் போட்டு ..........செய்து விட்டு,
அம்மா பாட்டிலில் போட்டு வைப்பார்கள். தினமும் கொஞ்சம் சாப்பிட்டால் நல்லது என்பதற்காக....ஆனால் அதை விட்டு வைக்காம அதன் கசப்பு சுவைக்காகவே.....அதை மொறு மொறுவென மொறுக்கி விடுவேன்....வாங்கி வைப்பார்கள். அட்லீஸ்ட் 2, 3 நாளாவது வரட்டுமேன்னு...அவுங்க கவலை அவுங்களுக்கு.....என்ன...? நான் சொல்லுறது....?
நீங்கள்ளாம் என்ன செய்வீர்கள்....? சொல்லுங்களேன்....
ஆனால் இந்த மஞ்சள் தூள் ,புளித்தண்ணீர்,உப்பு எல்லாம் போடமாட்டார்கள்.
பாகற்காயை நறுக்கி தரையில் வட்டவட்டமான நறுக்கியதை வரிசையாக வைப்பார்கள். சற்று நேரம் கழித்து தண்ணீரில் அலசி விட்டு....பொரிப்பார்கள். ஏனெனில் கசப்பு குறையும் என்று அந்தக்காலத்தில் செய்யும் டெக்னிக் இது.
எனக்கு ஒரு 2 கிலோ பாகற்காய் சிப்ஸ்
ReplyDeleteகொரியர் வழியாக அனுப்பவும்.
By the way,
இந்த பாகற்காய் சிப்ஸ் சாப்பிட்டபின் மோர் சாதம் சாப்பிட முடியாது. சாதம் கசக்கும்.
ஆக சாம்பார் சாதம் சாப்பிடுகையில் இதை தொட்டுக்க , அல்லது,
டிபன் டயத்தில் ஒரு தட்டில் ஒரு 200 கீராம் வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக ரசித்து ருசித்து சாப்பிட்டால்,
அப்படியே தின்றுகொண்டே,
கிருஷ்ணப்பாவையும் பாடினால்,
அதுவே சுகம். ஸ்வர்க்கம்.
சுப்பு தாத்தா.
கொரியரில் அனுப்பி விட்டேன் தாத்தா...
Deleteஎனக்கு எல்லா சாதத்தோடும் சாப்பிட பிடிக்கும்...
ஆஹா....அனுபவம் அருமை...நன்றி
Aahaaaaaaaaaa
ReplyDeleteT.M € 1
ஊருக்கு போகும் சந்தோஷமா.....நன்றி
Deleteநான் கடையில் வாங்குவேன்! எனக்கு மிகவும் பிடிக்கும்,
ReplyDeleteநன்றி ஐயா
Deleteஎளிமையான செய்முறைகள்..
ReplyDeleteஆரோக்யம் தரும் பாகற்காய் கட்சி நான்!..
வாரந்தோறும் இரண்டு முறை தவறாமல் -
இடம் பெறுவது பாகற்காய்..
வாழ்க நலம்!..
வாரந்தோறும் இரண்டு முறை தவறாமல் -
Deleteஇடம் பெறுவது பாகற்காய்..//
இங்கு பாகற்காய் கிடைக்காது,....ஊருக்கு போனால் தான்...ம்....என்ன செய்வது....?
நன்றி ஐயா
சூப்பர்மா,,,,,,, நாங்களும் இப்படி தான் செய்வோம், ஆனால் புளித் தண்ணீர் இல்ல, நன்றி.
ReplyDeleteநன்றி மகேஷ்வரி
Deleteஇயற்கையிலேயே சற்று கசப்பான பாகற்காயை ருசிமிக்க வறுவலாக்கி தந்துள்ள பதிவும், பகிர்வும் மிகவும் அருமையோ அருமை.
ReplyDeleteஇது ஒருவேளை மீள் பதிவாக இருக்குமோ எனவும் நினைக்கத்தோன்றுகிறது. ஏற்கனவே படித்த ஞாபகம் உள்ளது.
அதனால் என்ன? ஒரு நாள் சாப்பிட்டால் வேறொரு நாள் மீண்டும் பாகற்காய் சிப்ஸ் சாப்பிடமாட்டோமா என்ன? OK .... No problem at all. Thank you for sharing :)
இது ஒருவேளை மீள் பதிவாக இருக்குமோ எனவும் நினைக்கத்தோன்றுகிறது. ஏற்கனவே படித்த ஞாபகம் உள்ளது. //
Deleteஇல்லை ஐயா இல்லை முன்னம் போட்டது பாவக்காய் மசால் சிப்ஸ்.....
இது சாதாரண சிப்ஸ்...
நன்றி ஐயா ...தங்களின் கூர்மையான கவனத்திற்கு.....
**இது ஒருவேளை மீள் பதிவாக இருக்குமோ எனவும் நினைக்கத்தோன்றுகிறது. ஏற்கனவே படித்த ஞாபகம் உள்ளது.** - vgk
Delete//இல்லை ஐயா, இல்லை. முன்னம் போட்டது பாவக்காய் மசால் சிப்ஸ்..... இது சாதாரண சிப்ஸ்...//
ஓஹோ. அது மசாலா உள்ளது. இது மசாலா இல்லாததா ?
ஒருவேளை, நான்தான் ’மண்டையில் மசாலா’ இல்லாமல் அவசரப்பட்டு மீள் பதிவு என்று சொல்லியிருப்பேனோ :)))))
தங்களுக்குப் பின்னூட்டம் அனுப்பிய உடனேயே, நானே அந்தத்தங்களின் பதிவையும் தேடி கண்டு பிடித்து விட்டேன். http://umayalgayathri.blogspot.com/2015/05/pavakkai-masal-chips-.html
எனினும் தங்களின் கூர்மையான பதிலுக்கு மிக்க நன்றி.
நல்ல கெட்டித் தயிர் போட்டுப் பிசைந்த சாதத்தோடு நல்ல மொறுமொறுப்பாக மெல்லிசாக உப்புப் போட்டு வறுத்த பாகற்காய் சிப்ஸ் என் ஃபேவரைட். சூர்யா சார் ட்ரை பண்ணிப் பாருங்க
ReplyDeleteஅருமை உமா.. எனக்கு கூரியர்ல அனுப்புங்க :)
நல்ல கெட்டித் தயிர் போட்டுப் பிசைந்த சாதத்தோடு நல்ல மொறுமொறுப்பாக மெல்லிசாக உப்புப் போட்டு வறுத்த பாகற்காய் சிப்ஸ் என் ஃபேவரைட்//
Deleteநானும் அவ்வாறு சாப்பிடுவேன்.
நல்ல சாதத்துடனும் சாப்பிடப்பிடிக்கும்.
நன்றி
ஹ ஹ ஹா
ReplyDeleteஎங்கள் வீட்டில் செய்வார்கள்.
நன்றி.
நன்றி சகோ
Deleteநல்ல டெக்னிக்... அந்த கசப்பு சுவை மிகவும் பிடிக்கும்...
ReplyDeleteஆம் சகோ அது ஒரு சுவை தான் நன்றி
Deleteபாகற்காயை எப்படிச் சாப்பிட்டாலும் பிடிக்கும்!
ReplyDeleteசூப்பர் நன்றி
Deleteஎங்களுக்கு பாகற்காயை எப்படி செய்தாலும் பிடிக்கும். எனவே உங்கள் பாகற்காய் சிப்ஸ் பதிவு மிக அருமை சகோ.
ReplyDeleteபாகற்காயை எப்படி செய்தாலும் பிடிக்கும்.//
Deleteஆமாம்,ஆமாம்...எனக்கும் தான் நன்றி
உமையாள்,
ReplyDeleteபாவக்கா புளி குழம்புக்கு புளி ஊற வச்சாச்சு, இப்போ நான் குழம்பு வைப்பதா அல்லது சிப்ஸ் போடுவதா என குழம்ப வச்சிட்டீங்களே !!
சிப்ஸ் சூப்பரா இருக்குங்க. கொஞ்சம் முயற்சித்து கசப்ப எடுக்காம செஞ்சு பாருங்க.
கொஞ்சம் முயற்சித்து கசப்ப எடுக்காம செஞ்சு பாருங்க.//
Deleteநான் கசப்பை எடுக்காம சாப்பிடுவேன். இந்தமுறையில் நான் செய்யும் போது முழு கசப்பும் போகாது. அதன் தன்மை இருக்கத்தான் செய்யும். என்னவர் இக்காயை சாப்பிட மாட்டார். எனவே இப்படி செய்து கொடுக்க சாப்பிட ஆரம்பித்தார்...அதான் பாதி கசப்பு மீதி ருசின்னு பண்ணிட்டு இருக்கேன். தங்கள் அன்பிற்கு நன்றி சித்ரா.
சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு மிகவும் நல்லது, இல்லையா:)
ReplyDeleteஆமாம் ஐயா.நன்றி
Deleteநான் புளிக்கு பதிலாக கொஞ்சம் மிளகாய் போடி சேர்த்துக் கொள்வேன். இப்படியும் செய்துபார்த்தால் போச்சு!
ReplyDeleteநன்றி மைதிலி.
Deleteஆஹா நான் நேற்று செய்தேனே ஆனால் புளி எல்லாம் போடல நிறைய வெங்காயம் போட்டு இதையும் பொரித்தேன். சரி இனி செய்து பார்க்கிறேன் கூடுதலாக குழம்பு தான் வைப்போம். நன்றி! என் வீட்டுக்கரருக்கு சர்க்கரை இருப்பதால் அடிக்கடி செய்வேன்.
ReplyDeleteவெங்காயம் போட்டு பொரியல்...சூப்பர் சகோ நன்றி
Deleteசுலபமான செய்முறை ....செய்ய வேண்டும் ......
ReplyDeleteநன்றி அனு
Deleteவணக்கம் சகோ !
ReplyDeleteஎனக்கும் பாவற்காய் ரொம்பப் பிடிக்கும் ஆனால் நான் பொரிக்கும் போது புளி சேர்ப்பதில்லை பாகற்காயை வெட்டிச் சிறிதளவு நீரில் மஞ்சள் பொடியும் உப்பும் போட்டு 15- 20 நிமிடம்
வைப்பேன் பின்னர் நீரை வடித்துவிட்டு எண்ணையில் பொரித்து இறக்கிட்டு வெங்காயம் கடுகு தாளித்து அதில் போட்டு பிரட்டி எடுத்துச் சாப்பிடுவேன் வாரம் ஒருமுறை இனி புளியும் சேர்த்துக் கொள்கிறேன்பகிர்வுக்கு நன்றி
ஸ்ஸ்....ஆஆஅ ச்டொப் ... ஒண்ணும் இல்ல நாக்கின் சப்தம்.....பாகற்காயை எப்படிச் சாப்பிட்டாலும் பிடிக்கும்....சிப்ஸ் செய்வதுண்டு....
ReplyDeleteஎங்கள் வீட்டில் புளியில் ஊற வைப்பதில்லை
ReplyDelete