Monday 22 June 2015

தோசை பிரியர்களே வாருங்கள்....!!!

சத்தாக எளிமையாய் விரைவில் செய்யக்கூடிய தோசை






                                               சிகப்பரிசி ஓட்ஸ் தோசை...!!!


தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - 1 கோப்பை
சிகப்பரிசிமாவு - 1 கோப்பை
தேங்காய் துருவல் - 3 மே.க
மிளகாய் தூள் - 3/4 தே.க
மோர் - 1 டம்ளர்
உப்பு - ருசிக்கு





சிகப்பரிசி மாவு 



ஓட்ஸ்ஸை வறுத்து விட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக முனுக்கிக் கொள்ளவும்




தேங்காய் துருவல் 




மிளகாய் ( பிளேக்ஸ் ) கொரகொரப்பான தூள்





மோர்



எல்லாவற்றையும் கலக்கி 20 நிமிடங்கள் விட்டு தோசையாக வார்க்கவும்.

                             
                          








                         





                                                 இதற்கு புதினா துவையல் சூப்பராக இருக்கும்...!!!



அடுத்து வரும் தோசைக்கு...? 
இதைத்தான் செய்தேன்...
தொட்டுக் கொள்ள

என்ன தோசை....? அது 
பொருத்திருங்கள்...அடுத்த பதிவிற்கு...!!!  

என போட்டு இருந்தேன் அல்லவா... அது இது தான்.

புதினா துவையல்  - லிங்க் 










42 comments:

  1. புதுமையான தோசை .....
    சாப்பிடத்தான் ஆசை ! :)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. வணக்கம்
    செய்முறை விளக்கத்துடன் அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. நானும் தோசைப் பிரியன்தான்
    என்பதால் செய்து பார்க்கவும்
    எண்ணம் உள்ளதால் கொஞ்சம் கூடுதல்
    கவனத்துடன் பதிவைப் படித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...அப்படின்னா கண்டிப்பா செய்து பார்ப்பீர்கள்...))))...

      Delete
  4. ஆஹா... கொழுப்பைக் குறைக்கும் தோசை... எடையைக் குறைக்கும் தோசை!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஶ்ரீராம்...))))....

      Delete
  5. அட்டகாசமாக இருக்கிறது... செய்து பார்க்கிறோம்... நன்றி...

    ReplyDelete
  6. தோசைப்பிரியம் இல்லாதவர்களுக்குக் கூட தோசை மீது பிரியம் வரும், உங்களது பதிவைப் பார்த்து.

    ReplyDelete
  7. ஓ, உடனடி தோசையா ? நல்ல நிறத்தில் பார்க்கவே சூப்பரா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்

      நன்றி சித்ரா..

      Delete
  8. வண்ண வண்ணப் படங்களுடன் வார்த்த தோசை பார்க்கும் போதே செய்து பார்க்கும் ஆவலை உண்டாக்குகிறது தோழி.

    ReplyDelete
  9. Replies
    1. வாம்மா..வா

      நிறைய நாட்கள் ஆகிவிட்டது.:))))...நன்றி

      Delete
  10. காரசாரமான தோசை போல் இருக்குமோ,,,,,,,,, சூப்பர்,

    ReplyDelete
    Replies
    1. இதமான காரமுடன்
      மணமாய் இருக்கும் சகோ

      நன்றி

      Delete
  11. தோசை செய்முறையும், படங்களும் அட்டகாசம் சகோ.

    ReplyDelete
  12. பார்க்கும் போதே மனம் பரவசமாகின்றது!...

    ஆனாலும் இவ்ளோ.. பெரிய்ய கூட்டத்துக்கு ஒரே ஒரு தோசை போதுமோ!?..

    ReplyDelete
    Replies
    1. நிறைய வார்த்து விட்டால் போச்சு.:))))................ஐயா நன்றி

      Delete
  13. தோசையம்மா தோசை!
    சிவப்பரிசி மாவே கிடைக்குமா?

    ReplyDelete
    Replies
    1. கிடைக்கும் என நினைக்கிறேன்...இது வீட்டில் செய்து கொண்டு வந்தது....நன்றி

      Delete
  14. சாப்பிட ஆசை! தருகிறது தோசை!

    ReplyDelete
    Replies
    1. சுவையான தோசை...
      நன்றி

      Delete
  15. கிடைத்தால் ரெண்டு சாப்பிடலாம்...?
    தமிழ் மணம் 9

    ReplyDelete
    Replies
    1. பார்சல் அனுப்பிவைக்கிறேன்..நன்றி

      Delete
  16. ஓட்ஸ் டேஸ்ட் பிடிக்காத என்னையும் சாப்பிடச் சொல்லுதே இந்த தோசை :)

    ReplyDelete
    Replies
    1. அப்படியா.....பரவாயில்லையே...நன்றி

      Delete
  17. விரைவில் செய்து பார்க்கின்றேன் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரைட்டு...சகோ நன்றி

      Delete
  18. எனக்கும் தோசை என்றால் ஆசை என்பதால் தலைப்பைப் பார்த்ததுமே ஓடி வந்தூட்டேன். தெளிவான படங்களோட நீங்க விளக்கிருக்கறதைப் படிக்கையிலேயே முயன்று உண்டு பார்த்துவிடத் தூண்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...அப்படியா...

      நன்றி

      Delete
  19. அஹா பொங்கடலை, இட்லி பொடி, தோசை துவையல் என எல்லாரும் என்னை சாப்பிடாம இருக்கவிடமாட்டீங்கபோல இருக்கே.

    இருங்க தோசையும் (பச்சைமிளகாய் போட்ட ) சாம்பாரும் சாப்பிட்டு வந்து மிச்சத்தைப் படிக்கிறேன். பசிக்குது.. :)

    ReplyDelete
    Replies
    1. ஆமா...சப்பாட்டு ஐட்டத்தை பார்த்த உடனே வயிறு வேலை செய்ய ஆரம்பித்து விடும் தான்....போய் நிதானமாக சாப்பிட்டு விட்டு வாருங்கள். நன்றி

      Delete
  20. வணக்கம் சகோ !

    தோசை தோசை தோசை
    தங்கை சுட்ட தோசை
    ஆசை ஆசை ஆசை
    அள்ளித் தின்ன ஆசை

    அரைத்த மாவில்
    தேங்காய்த் துருவல்
    அளவாய் உப்பும் மிளகுமிட்டு
    அனைத்தும் ஒன்றாய்
    மோரில் கலந்து
    அழகாய்ச் சுட்ட தோசை !

    தோசை தோசை தோசை
    தங்கை சுட்ட தோசை
    ஆசை ஆசை ஆசை
    அள்ளித் தின்ன ஆசை

    அருமை சகோ தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  21. அருமையான கவிதைக் கருத்திற்கு நன்றி சகோ.

    ReplyDelete
  22. அட அருமையான தோசையா இருக்கே! நிச்சயமா செய்து பார்த்துடனும்...குறிப்பா இதுவரை ஓட்சை வறுத்துச் செய்ததில்லை. அப்படியே போட்டு தோசை செய்துள்ளேன்....மிக்க நன்றி உமையாள்

    கீதா

    ReplyDelete