Saturday 20 June 2015

செவிவழி விருந்து...!!! / கவிதை


                                   
                                                                   படம் கூகுள் நன்றி      



மகனின் அழைப்பில்
மகுந்தது மனம்

நிறைந்த ஆனந்தத்தில்
ஆத்ம சாந்தி  அடைந்தது

வெறுமையின் கணங்கள்
விரைந்தோடின...

உயிர் மூச்சின் தாகம்
தணிந்தன தணிந்தன...

குழவியின் குரலில்
செவிவழி விருந்து
உயிர் ஜீவனுக்கு...

விரைந்தோடும் வாழ்வில்
விதியாகிப் போனது

குழந்தையின் ஆசையை
தணித்துக் கொள்ளென்று
தாயின் அன்பு தடை போடாது

குழவிகள் குதூகலமாய்
வாழட்டும் வாழட்டும்.

மகனின் அழைப்பில்
மகுந்தது மனம்

நிறைந்த ஆனந்தத்தில்
ஆத்ம சாந்தி  அடைந்தது










24 comments:

  1. அருமை... அன்பிற்கு தடையேது...

    ReplyDelete
    Replies
    1. முதலில் வந்தமைக்கு நன்றி சகோ...

      Delete
  2. குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார். குழவி உன் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்!

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் உண்மை.....உணர்ந்தாலே.....உணரலாம்...நன்றி

      Delete
  3. "குழந்தையின் ஆசையை
    தணித்துக் கொள்ளென்று
    தாயின் அன்பு தடை போடாது" என்பது
    உண்மையே - தாயின்
    உள்ளம் குழந்தையின் விருப்பையே
    எப்போதும் நாடுமே!

    ReplyDelete
  4. >>> குழவிகள் குதூகலமாய்
    வாழட்டும் வாழட்டும்.. <<<

    அருமை.. அழகிய கவிதை..
    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. ஆம் வாழட்டும் வாழட்டும் நன்றி ஐயா

      Delete
  5. பிள்ளையின் அழைப்பு"தேன் வந்து பாயுது காதினிலே"

    ReplyDelete
    Replies
    1. ஆம் தேனே...தான் ஐயா நன்றி

      Delete
  6. ஆஹா அருமையான வரிகள் பொக்க வாய் சிரிப்பே உமக்கு பரிசு, வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...பரிசு....அன்பான அழகுடன் இருக்கிறது அல்லவா...? சகோ நன்றி

      Delete
  7. அருமை சகோ கவிதை மொழிகள்...
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  8. தாய் சேய் கவிதை அருமை!
    த ம +1

    ReplyDelete
  9. Replies
    1. ஆம் உண்மை தான். நன்றி ஐயா

      Delete
  10. மனிதனாய் பிறந்தவன் அனுபவிக்க வேண்டிய ஒன்று :)

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் ஐயா நன்றி

      Delete
  11. பிள்ளையை விரும்பாத தாயேது? அருமையான கவிதை!

    ReplyDelete
  12. வணக்கம் சகோ !

    அருமை மழலைக்கும் ஆனந்தம் பொங்கப்
    பெருமையாய்ப் பாடும்'உன் பிள்ளைத் தமிழில்
    உருகியே ஓடும் உயிருள்ளும் இன்பம்
    கருவோடு அன்பைக் குழைத்து !

    அருமை சகோ தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ இலகுவாய் எழுதக் கூடியது இன்னிசை வெண்பா அதைத்தான் நான் எழுதி இங்கு பதிவிட்டேன் !

      தாங்களும் அருமையாய் எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

      Delete
    2. கருவோடு அன்பைக் குழைத்து மகிழ்ந்ததினால்
      தாங்கும் தருணத்தில் பண்பும் பெருகிற்று
      தாய்வலியை இன்புற்று மெல்லவே யாங்கே
      கையில் கிடைத்ததோர் முத்து

      நன்றி சகோ

      Delete