Friday 5 June 2015

தபால்...அன்று...!!!






பிறர் வாசிக்க
கேட்டு மகிழ்ந்தேன்...!!!
உன் வாசம் அதில்
சுவாசித்தேன்...!!!

கண்ணீர் துளிகளின் கையெப்பம்
காட்டிக் கொடுத்தன
உன் அன்பை...!!!

எழுத்தறியா போதும் கூட
என் செல்லமே...!!!
பொக்கிஷம் ஆகிப் போனது எனக்கு
உன் தபால்கள்...!!!

நீ அருகில் இருக்கும் ஆனந்தத்தை....
கையால் தடவி அணைத்தேனடா...
வாழ்க நீ பல்லாண்டு...!!!






படம் கூகுள் நன்றி




32 comments:

  1. அன்றைய தபால் இன்றைய பாடலாக ........ அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. இன்று அரிதாகிப்போய் விட்டதே..கடிதம் சுமந்த காதலை,மகிழ்ச்சியை இன்றைய வழிகள் தர இயலுமோ?

    ReplyDelete
    Replies
    1. கடிதம் சுமந்த காதலை,மகிழ்ச்சியை இன்றைய வழிகள் தர இயலுமோ?//

      இயலாது தான் ஐயா.

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  3. உண்மைதான் அது ஒரு கனாக்காலம் சகோ
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. அது ஒரு கனாக்காலம் சகோ//

      ஆம். காணாமல் போச்சு இப்போ...

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  4. இது காதல் கடிதம் அல்லவே ,ஒரு தாயின் நெகிழ்ச்சி :)

    ReplyDelete
    Replies
    1. மனதின் நெகிழ்ச்சி...இருபாலருக்கும் பொருந்தும்.

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  5. வணக்கம்

    கவிதையின் வரிகள் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம 4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  6. வணக்கம் சகோதரி.

    மன ஏக்கத்தை பிரதிபலித்த நல்ல கவிதை.! உண்மை.!அன்றைய காலத்தின் கடித நெகிழ்வுகள், இன்றைய வெறும் உரையாடலில் உடன் வராது. அழகாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. அன்றைய காலத்தின் கடித நெகிழ்வுகள், இன்றைய வெறும் உரையாடலில் உடன் வராது//

      முற்றிலும் உண்மை தான் சகோ

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  7. பசுமை நிறைந்த நினைவுகளின் நீச்சல் குளம்.
    அஞ்சல்! அருமை சகோ!
    த ம +1
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. பசுமை நிறைந்த நினைவுகளின் நீச்சல் குளம்//

      அதில் நீந்தி.....தான் ஆனந்தப்பட வேண்டி இருக்கிறது....

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  8. அழகான கவிதைப்பதிவினைக் கண்டேன். தற்போதைய நிலையை அழகாகக் கூறியுள்ளீர்கள். இப்பொழுதும் நான் அஞ்சலட்டையைப் பயன்படுத்தி கடிதம் எழுதி வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இப்பொழுதும் நான் அஞ்சலட்டையைப் பயன்படுத்தி கடிதம் எழுதி வருகிறேன்//

      நல்லது ஐயா.மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  9. கடிதங்களில் மனம் உறைந்த நாட்கள் இனியும் திரும்பி வருமோ!?..

    ReplyDelete
    Replies
    1. வாராது...ஐயா

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  10. கடிதம் எல்லாவற்றிர்க்கும் தீர்வாக இருந்தது. இன்று அது இல்லை, அருமையான பா, வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கடிதம் எல்லாவற்றிர்க்கும் தீர்வாக இருந்தது.

      ஆம் சகோ மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  11. மலரும் நினைவுகளை கொண்டு வந்தது கவிதை.
    த ம 7

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  12. பொக்கிஷங்கள் ஆகிப் போன கடிதங்கள்....உண்மை தான் ! அத்தாய்க்கு மட்டுமல்ல...நம்மில் பலருக்கும் தான். அஞ்சலை மறந்த நாம்...நம் கையெழுத்தையும் அதில் தொலைத்து விட்டோம்.

    அழகான கவிதை. பகிர்வுக்கு நன்றிகள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. அஞ்சலை மறந்த நாம்...நம் கையெழுத்தையும் அதில் தொலைத்து விட்டோம்.//

      ஆமாம்..சகோ

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  13. அன்புள்ள அம்மாவுக்கு! – மகனின் கடிதத்தைக் கண்டு மகிழாத தாயும் உண்டோ? மகன் – தாய் பாசத்தை படம் பிடித்த கவிதை.
    (சமையலில் மட்டும் கவனம் செலுத்தாமல், அப்போதைக்கு அப்போது இது போல கவிதைகளையும் கட்டுரையையும் படைப்பதற்கு நன்றி)
    த.ம.8

    ReplyDelete
    Replies

    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  14. இன்றைக்கும் என் அம்மா கடிதம் எழுதச் சொல்லுவார். பழக்கமே விட்டுப்போய் விட்டதே! எப்போதோ என் பாட்டி எழுதிய கடிதங்களை அம்மா இன்னும் வைத்திருக்கிறார். அவற்றைப் படிக்கும்போது நீங்கள் இந்தக் கவிதையில் எழுதியிருக்கும் உணர்வுகள் எனக்குள்ளும் உண்டாகும். பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies


    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  15. Replies

    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  16. அழகான + ஆதங்கமான கவிதை...

    ReplyDelete
  17. உமையாள்,

    பழைய நாட்கள் நினைவில் வந்தன.

    ReplyDelete
  18. வாவ்!...அற்புதம்! அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே! வந்ததே! வந்ததே!

    ReplyDelete