Tuesday, 31 March 2015

புதினா ரசம்

புதிய வகை
புதினா ரசம்...!!!

புகுந்து கொள்ளும் வாசம்
புன்னகைக்கும் வீடு முழுதும்

எட்டி பார்த்த வயிற்றுக்கு
ஏக்கம் நீக்கி தணிக்கும்

முகர்ந்து பார்த்த மூக்கோ
முனங்கிடும் வயிற்றைப் பார்த்து

விருந்துண்ட விருந்தினரோ
வரவா மற்றொரு நாள் என்பர்

பார்த்துக் கொள்ளுங்கள்...
பண்பான நண்பர்களே...

ருசித்த கதை கேட்க
ருசித்து நானும் காத்திருக்கேன்.



Sunday, 29 March 2015

உருளைக்கிழங்கு பொரியல்


உ.கிழங்கு பொரியல் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. சட்டுன்னு செய்திடலாம். இது சாம்பார், ரசம், வத்தக்குழம்பு, மோர்க்குழம்பு என நல்ல காம்பினேஷனாக இருக்கும். ஆல் ரவுண்டர்...!!!

இது எல்லோரும் செய்வது தான். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பொரியல் இல்ல....?

சும்மா...நானும் இன்று செய்தேன்...அதாங்க உங்களுக்கும் கொடுக்கலாம், எவ்வளவு நாளாச்சு...? அப்படின்னு வந்தேன்.....  




Thursday, 26 March 2015

நலவிரும்பி




உன் திருவடி தொழுதிட நினைத்திட்டாலும்
மனமது அலைபாயாமல் நிற்கவில்லை
உன்னுரு கண்முன் நின்றாலும் கூட
மனமது மிதந்து ஏந்தான் செல்கிறதோ

Saturday, 14 March 2015

மிதமான விடியல்




காலைல இருந்து ஒரே சோம்பேறித்தனமாக இருக்கிறது. வேலை ஓடவில்லை. ஹாயா...அப்படியே ஏகாந்தமா இருக்கனும் போல இருக்கு ஆனா முடியுமா....டிபன் சாப்பாடு என செய்ய வேண்டுமே. ஒருநாள் ஒரே ஒரு நாள் நமக்கு லீவு கிடைத்தால் எம்புட்டு சந்தோஷமாக இருக்கும்..ம்....


நீர் கொழுக்கட்டை