Saturday 8 March 2014

கடல் உதாரணம் - கவிதை- 14

 "கடல் உதாரணம்"


கடலின்  மொழி
ஆரவாரம்...  ஆனந்தம்
கரையோடு  தினம்  தினம்
காதல்  மொழிப்  பரிமாற்றம்

சங்கமிக்கும்  இடத்தில் - நாம்
சங்கமித்தால் -
சந்தாஷ  அலையடிக்கும்


ஊடல்  வந்த  போது
உயர்ந்து  வந்தாய்...
ஆனந்தம்  வந்த  போதோ...
அளவுதண்டி  வந்தாய்...

சுற்றிப்பார்க்க  வந்த சுற்றத்தார்க்கு
விதவித  உணவளித்தாய்...

கப்பல்  முதல்  ஓடம்  வரை
காதலாய்  பெற்ற  பிள்ளைகள்
உன்மடியில்  உலாவ  மகிழ்ந்தாய்...

வலை  விரித்தோர்க்கு
வாரி  வழங்கும்  வள்ளல்- நீ
ஆசைப்படாத  பிறபொருள்  தன்னை
ஓதுக்கிடுவாய்  கரையோரம்

காணவரும்  கரையோர்க்கு  மட்டுமா...? களிப்பு
எனக்கும்  தான்  என...
களிப்புடன்  கால் மேல் தழுவுவாய்

விதியின்  விளையாட்டில்
விழுந்தோர்க்கோ...
பழி  ஏற்பாய்
பரையோரின்  வாயில்

கசிந்திடும்  கண்ணீரோ...!
கடல்  தண்ணீரோடு...
காண  இயலாது.

பொருத்த  நீயோ ஒரு  நாள்
பொங்கிப்  பொங்கி  வருவாய்- சுனாமியாய்
ஆத்திரம்  தீர......!
ஆடிவிட்டுத்தான்  அகழ்வாய்

மனக்  குமுறல்கள்
யாருக்குத்  தான்  இல்லை...?
மனோவலிமை -
பெரிதினும்  பெரிது...!!!

வாழ்க்கைப்  பாடத்தை
வகைபிரித்து  வாழும்  நீ
"கடல்  உதாரணம்"  என பெயரிட்டு
பிரசுரம்  செய்...

கடலின்  மொழி
ஆரவாரம்...  ஆனந்தம்...
கரையோடு  தினம்  தினம்
காதல்  மொழி  பரிமாற்றம்.  


 ஆர்.உமையாள் காயத்ரி.


2 comments:

  1. /// வாழ்க்கைப் பாடத்தை
    வகைபிரித்து வாழும் நீ ///

    அருமை... வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  2. கடல் ஓசை ஒரு இசைதான்..

    ReplyDelete